தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு | 277 |
‘சுடுதொழி லரக்கராற் றொலைந்த வானுளோர் கடுவமர் களனடி கலந்து கூறலும் படுபொரு ளுணர்ந்தவப் பரமன் யாமினி யடுவதில் லென மறுத்து. என்புழி ‘படுபொரு ளுணர்ந்தவப் பரமன்யாம்’ என்றதனாலே அவர் கொள்கையிது வென்பதினிது விளங்கும், இங்ஙனங் கூறிய செய் யுட்கள் பலவாகவும் அவற்றைப் பிற்காலத்து வைணவர் பலர் தம் மதனூலென்று கருத, மாற்றியும் நீக்கியும் வரம்பழித் - தொழிந்தனர். இதற்குச் சான்று அச்சிட்டு வெளிப்படுத்தியுள்ள அவ் விராமயணப் பிரதிக்கும் ஏட்டுப் பிரதிக்கும் பாடமொவ்வாமை யின்றுங் காணலாம். அன்றியும், அச்சொற்களும் அடிகளும் செய்யுட்களும் ஏறியுங் குறைந்தும் மாறியும் சிதைந்தும் உள்ளவற்றைக் கண்கூடாகக் காணலாம். இவ்விடத்ததனை யெடுத்துக் காட்டப்புகின் விரியுமாதலின் இடம் பெற்றுழிக் காட்டுவாம். இனிச். ‘சுடுதொழி லரக்கராற் றொலைந்த வானுளோர்’ என்ற செய்யுளில். ‘படுபொரு ளுணர்ந்தவப் பரமன் யாமினி அடுவதில் லெனமறுத் தவரை யேவினான்’ என்ற பாடத்தை மாற்றி, ‘மறுத்தவரோ டேகினான்’ எனவும், ‘எழுந்தனர் கட்களிற்றிறையுந் தாமரைச் செழுந் தவிசகந்தத் தேவும்’ என்றதை மாற்றி ‘எழுந்தனர் கறைமிடற்றிறை’ எனவும் சிதைத்து வழங்கினர். இங்ஙனம் அச்சிடு முன்னே ஆனவை பல, பின்னிட்டா லானவற்றிற்கு வரம்பில்லை. படலப் பெயர்களையே முற்றும் வரம்பழிய மாற்றினர். இராமேசுரப்படலத்தை முற்றுமெடுத் தெறிந்தொழித்தனர். இப்படலம் வான்மீக விராமாயணத்தில்லையே யெனின், இரணியவதைப் படலமும் அவ்வாறே அவ்வான்மீக விராமாயணத்தில்லை, யாகவே அதனையுமொழித்தல் வேண்டும். இன்னு மிவ் விரணியன் வதைப் படலத்துள். ‘தாமரைக் கண்ணன் றழற்கண்ணன் பேரவை தவிர நாமந் தன்னதே யுலகங்கள் யாவையு நவில’ என்ற செய்யுளைத் தம்மதம் பற்றித் ‘தாமரைத் தடங்கண்ணி னான் பேரவை தவிர, நாமந் தன்னதே நவில’ என மாற்றினாரு முளர். |