பக்கம் எண் :

278மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 16

இஃதொன்றோ? பிரமனாதி யேனைவானோர் வணங்கியபடி கூறுவதன்றிச், சிவன் திருமாலை வணங்கியதாகக் கம்பர் யாண்டுங் கூறிய தில்லை யென்பது நன்குணர்ந்தும், தம்மனஞ் சான்று கூறவும், அங்ஙனம் அம்மதம் பற்றி யச்சிட்ட பிரதிகளிலையமுற்றுச் சோதிப்பான் புக்கவழிப், பழைய வேட்டுப் பிரதிகளோடு மாறுபட்டுக் கேட்டுப் பிரதியாகவே கிடந்திருக்கக் கண்டோம். இச்சிதைவு பாலகாண்டம் அயோத்தியா காண்டம் ஆரணிய காண்டத்தினும்; கிட்கிந்தை காண்டத்தும் சுந்தரகாண்டத்தும் மிகுதி; இவ்விரண்டினு முயுத்த காண்டம் பெருங்கேடுற்றது. என்செய்வாம்; கடவுள் செய்வகை யறியோம். அது நிற்க.

“இனி அவ்வுயுத்த காண்ட மொருமதத் திருதிறத்தா ரச்சிட்ட பிரதிகளுள், ஒன்று பரம்பரையேட்டுப் பிரதிகளோடு சிறிது ஒற்றுமை யுள்ளது; மற்றொன்றோ பல மாறுபாட்டோடுங் கூடி யுள்ளது. இங்ஙனம் தேயம், மொழி (பாஷை), நூல், சாதி, சமயம், தருமம், மாதர், திரவியம், குழவிகள் முதலிய பொருள்களெல்லாம், தம்மது என்று அபிமானித்துக் காக்குந் தலைவனில்லாவழி, இயற்கை திரிந்து கெடும் என்பது யாவரு முணர்ந்தபடி யன்றோ?”

(பக்கம் 22-25. சென்னைத் துரைத்தன கல்விச் சாலைத் தமிழ்ப் புலமை, சமரச வேத சன்மார்க்க சங்கம் ஸ்ரீ தொழுவூர் வேலாயுத முதலியார் எழுதிய முகவுரை. ஏரெழுபது, திருக்கை வழக்கம் Memorial Press, Madras. 1886.)