பக்கம் எண் :

  

19-ஆம் நூற்றாண்டில் அச்சான
இலக்கிய நூல்கள்

19-ஆம் நூற்றாண்டிலே அச்சுக்கூடம் வைக்கும் உரிமை நம்மவருக்குக் கிடைத்தபோது பழைய, புதிய நூல்கள் அச்சுப் புத்தகங்களாக வெளிவந்தன. அவை கணக்கிலடங்கா. பழைய இலக்கிய நூல்கள் முதல் முதலாக ஏட்டுச் சுவடியிலிருந்து அச்சுப் புத்தகமாக வெளிவந்தவற்றை இங்குக் காட்டுகிறேன். இதுவும் முழுவிவரப் பட்டியல் அன்று. இதில் பல நூல்கள் விடுபட்டுள்ளன. தெரிந்தவற்றில் சிலவற்றை மட்டும் கீழே தருகிறேன்.

ஆண்டுநூற்பெயர்,பதிப்பித்தவர்
 ஆசிரியர் பெயர்.பெயர்.
1812திருக்குறள், நாலடியார் ---- 
1830நீதி நெறி விளக்கம்.ஆங்கில மொழிபெயர்ப்
 குமரகுருபர சுவாபுடன் H. Stokes என்பவர்
 மிகள்அச்சிட்டார், சென்னை.
1834தஞ்சைவாணன் கோபுதுவை நயனப்ப முதலியார்
 வை, குன்றத்தூர்பதிப்பு. சரஸ்வதி
 அட்டாவதானிஅச்சுக்கூடம், 1843-இல்
 சொக்கப்ப நாவலர்மகாவித்துவான் மயிலை
 உரையுடன்.பதிப்பு சென்னை.
1834பொன்வண்ணத்கல்வி விளக்க
 தந்தாதி.அச்சுக்கூடம் சென்னை.
1835புறப்பொருள் வெண்பா‘இலக்கணப் பஞ்சகம்’
 மாலை (மூலம்) ஐயன் என்னும் தொகுப்பில் 
 ஆரிதனார் தாண்டவராய முதலியார்
  பதிப்பித்தார், சென்னை.