பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் | 107 |
இரண்டாம் அங்கம் முதற் களம் இடம் :அரண்மனை. காலம் :வைகறை. (ஜீவகனும் குடிலனும் மந்திராலோசனை) (நேரிசை ஆசிரியப்பா) ஜீவகன்: | | சொல்லிய தெல்லாஞ் சுந்தர முனிவரே! புருடோத் தமனெனும் பொறையனே நமக்கு மருமா னாக மதித்ததும் அவரே; என்றுங் குழந்தை யன்றே; மன்றல் | | 5 | விரைவில் ஆற்ற வேண்டும்; நாம் இது வரையும் மறதியா யிருந்தது தவறே யாம் இனித் தாமத மின்றியிம் மணமே கருமமாய்க் கருதி முடிப்பாம்; வருமுன் கருதும் மந்திர வமைச்சே! 1 | குடிலன்: | 10 | இறைவ! இதுகேட் டெனக்குள இன்பம் அறைவதெப் படியான்? அநேக நாளாப் பலமுறை நினைத்த துண்டிப் பரிசே; நலமுறப் புரிசை நன்கு முடியும் அற்றம் நோக்கி யிருந்தே னன்றிச் | | 15 | சற்றும் மறந்தே னன்று; தனியே கட்டளை பிறந்துங் கடிமணந் தன்னை விட்டுள தோஇனி வேறொரு காரியம்? புருடோத் தமனெனும் பொருநைத் துறைவன் காண்டகும் ஆண்டகை யென்றும், ஞானம் |
பொறையன் - சேர அரசன். ஆற்ற - செய்ய. மருமான் - மருமகன். மந்திரம் - சூழ்ச்சி, ஆலோசனை. அறைவது - சொல்லுவது. இப்பரிசு - இவ்விதம், இப்படி. அற்றம் - காலம். பொருநை - சேர நாட்டில் உள்ள ஒரு ஆறு. பொருநைத் துறைவன் - சேர அரசன். |