பக்கம் எண் :

108மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20

 20மாண்ட சிந்தைய னென்றும், யாண்டுந்
திரியுந் தவசிகள் உரைசெய யானுங்
கேட்ட துண்டு; மற்றவன் நாட்டிற்கு
இன்றே தூதுவ ரேவின், மங்கையை
மன்றல் செய்வான் மனதோ வன்றோ
 25என்றியாம் அறியலாம் எளிதில். அறியார்
பலவும் பழிப்பர்; நமக்கதி லொன்றும்
இலை. இன் றேதூ தேவுவம்
பனந்தார் வேய்ந்தோன் அனந்தைப் பதிக்கே.      2
ஜீவ: பழிப்ப ரென்ற மொழிப்பய னென்னை?
 30பகருதி வெளிப்படப் பண்பாய்
நிகரிலாச் சூழ்ச்சி நெடுந்தகை யோனே !     3
குடி: எண்ணுதற் கில்லை இறைவ! அவையெலாம்;
கண்ணகன் ஞாலங் கழறும் பலவிதம்.
மணஞ்செய முதன்முதற் பேசி வருதல்,
 35இணங்கிய ஆடவ ரில்லுள் ளாரே;
அன்றி யாடவர்த் தேடி மன்றல்
சாற்றுதல் தகாதெனப் போற்றுமிவ் வுலகம்;
முன்னை வழக்கும் அன்னதே; ஆயினும்
ஆத்திரந் தனக்குச் சாத்திர மென்னை?
ஜீவ: 40கூடா தஃதொரு காலும்; குடில!
கேடாம் நமது கீர்த்திக் கென்றும்;
மாசறு மனோன்மணி தனக்கும் மாசாம்;
என்னே ஆத்திரம்? நமது
கன்னியை விழையும் மன்னருங் குறைவோ?      4


ஞானம் மாண்ட - அறிவினால் மாட்சிமைப்பட்ட. செய்வான் - செய்ய. ஏவுவம் - விடுப்போம். வேய்ந்தோன் - அணிந்தவன். அனந்தைப்பதி - திருவனந்தபுரம். மொழிப்பயன் - மொழியின் கருத்து. ஞாலம் - உலகம். இங்கு ஆகுபெயராய் மக்களைக் குறித்தது. கழறும் - சொல்லும். ஆடவர் இல் - மணமகன் வீடு. மாசு - குற்றம், அழுக்கு.