பக்கம் எண் :

138மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20

பல:  உதியனும் செழியனும்
 90போர்தனி புரியில் யார்கொல் பிழைப்பர்?
பங்கமில் இரவியுந் திங்களுந் துருவி
எதிர்ப்படுங் காலை, கதிர்க்கடுங் கடவுள்
மறையஇவ் வுலகில் வயங்கிருள் நிறையும்.
அவரந் நிலையில் அமர்ந்திடில் அவ்விருள்
  95தவறாத் தன்மைபோல் நீவிர் இருவருஞ்
சமர்செயி லுலகம் தாங்கா தென்றே
எமையிங் கேவி இவ்வவைக் கேற்றவை
நீதியா யெடுத்தெலாம் ஓதி, நன் செய்நாடு
உடையார்க் குரிமை நோக்கி யளிப்பதே
 100கடனெனக் கழறிப் பின்னிக ழுன்கருத்து
அறிந்து மீளவே விடுத்தான்.
புரு:  ஆ! ஹா!
  முடிந்ததோ? இலையெனின் முற்றும் செப்புவாய்.
பல:  மேலும் ஒருமொழி விளம்புதும் வேந்தே!
சாலவும் நீவிர் பகைக்கின் சகமெலாம்
 105ஆழ்துயர் மூழ்கலும் அன்றி, உங்கட்கு
ஏது விளையுமோ அறியேம். ஆதலின்,
அஞ்சா அரியே றன்னஜீ வகனுடன்
வெஞ்சமர் விளைத்தல் நன்றல.
புரு:  (பயந்தாற்போல்)
   ஆ! ஆ!
பல:  நன்செய்நா டினிமேல் மீட்டு நல்கலும்
  110எஞ்சலில் பெரும்புகழ்க் கேற்ற தன்றெனில்
உரைக்குது முபாயமொன் றுசிதன் மனையில்


உதியன் - சேரன். செழியன் - பாண்டியன். பங்கமில் - குற்றம் இல்லாத.

91 முதல் 101 வரியின் கருத்து: சூரியனும் சந்திரனும் நேர்ப்பட்டால் சூரிய கிரகணம் உண்டாகி உலகம் இருள்படுவதுபோல, பாண்டியனும் சேரனும் எதிர்த்துப் போரிட்டால் நாட்டு மக்கள் துன்பம் அடைவார்கள். அவ்வாறு நேராதபடி நன்செய் நாடாகிய நாஞ்சில் நாட்டை அதற்குரியவரிடம் சேர்ப்பிக்கக் கூறும்படி என்னைத் தூது அனுப்பினான் என்பது.

அரியேறு - ஆண்சிங்கம். வெம்சமர் - கொடிய போர்.