பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் | 173 |
(வஞ்சித் தாழிசை) படைப்பாணர் | | அஞ்சலி லரிகாள்! நும் சஞ்சிதப் பெருவாழ் வெம் வஞ்சியன் சினத்தாற் கண் துஞ்சிய கனவே காண் 1 | படைகள்: | | ஜே! ஜே! ஜே! | பாணர்: | | எஞ்சலில் பகைகாள்! நும் மஞ்சுள மணி மகுடம், வஞ்சியன் சினத்தா னீர் கஞ்சியுண் கடிஞையே காண் 2 | படை: | | ஜே! ஜே! ஜே! | பாணர்: | | மிஞ்சிய பகைகாள்! நும் துஞ்சிய பிதிர்க் கூட்டம் வஞ்சியன் சினத்தா லெள், நெஞ்சிலும் நினையார் காண். 3 | படை: | | ஜே! ஜே! புருஷோத்தமர்க்கு ஜே! ஜே! |
வஞ்சித்தாழிசை 1. அஞ்சல்இல் - அஞ்சாத. அரிகாள் - பகைவர்களே. சஞ்சிதம் - மிகுந்துள்ளது, எஞ்சியுள்ளது. சஞ்சிதப் பெருவாழ்வு - சென்றதுபோக மீதியுள்ள வாழ்நாள். வஞ்சித்தாழிசை 2. எஞ்சல்இல் - குறைவில்லாத. மஞ்சுள - அழகுள்ள. கடிஞை - பிச்சைப் பாத்திரம். வஞ்சித்தாழிசை 3. பிதிர் -மூதாதையர். துஞ்சிய பிதிர் - இறந்து போன உயிர்கள். இவர்களைத் தென்புலத்தார் என்பர். எள் - இங்கு பிதிர்களுக்கு இடும் எள். இறந்தவர்களின் சாந்திக்காக எள்ளும் நீரும் இறைப்பது இந்துக்களின் வழக்கம். ஜே - ஜெயம், வெற்றி. |