பக்கம் எண் :

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்297

 (கலித்துறை)
 அரிதா நினைத்ததன் அங்கங்கள் யாவும் அழிந்தபின்னும்
புரியேபொருளெனப் போற்றிய ஜீவகன் புந்தியென்னே!
பிரியாத சார்பு பெயர்ந்து விராகம் பிறந்திடினும்
தெரியாது தன்னிலை ஆணவம் செய்யும் திறஞ்சிறிதே!

நான்காம் அங்கம் முற்றிற்று.

ஆசிரியப்பா 12 -க்கு அடி 1297
வஞ்சிப்பா 1 -க்கு அடி 14
கலித்தாழிசை 3 -க்கு அடி 12
கலித்துறை 1 -க்கு அடி 4
ஆக, அங்கம் 1-க்கு பா. 17க்கு அடி 1327


தன் படையை எவரும் வெல்ல முடியாது என்று நினைத்திருந்த ஜீவக அரசன், போரில் தோற்ற பின்னும் தன் கோட்டையை முக்கியமானதென்று கருதியிருக்கிற தன்மை, ஆசை முதலிய பற்று நீங்கி வைராக்கியம் உண்டானாலும், ஞானமில்லாமல் வைராக்கியத்தை மட்டும் அடைந்தவர், தம் நிலையை உணராதது போன்றது ஆகும் என்பது கருத்து.

அரிதா - (வெல்லுவதற்கு) அருமையானது. அங்கங்கள் - (சேனையின்) உறுப்புகள். புரி - கோட்டை. புந்தி - புத்தி . சார்பு நான் எனது என்னும் பற்று. பெயர்ந்து - போய். விராகம் - வைராக்கியம், பற்று ஒழித்தல். ஆணவம் - அகங்காரம். ஆணவம், கர்மம், மாயை என்னும் மும்மலங்களில் ஒன்று. ஆன்மாக்களின் அறிவை மறைப்பது இதன் குணம்.