| | வெறுப்புள ளேனும் விடுத்தவ ளொன்றும் மொழியாள். சம்மதக் குறியே மௌனம். |
| 365 | அழுவாள்; அதுவும் பிரிவாற் றாமையே ஆய்விடும், அரச னாய்விலா உளத்துள். நடுநிசி வருமுன் கடிமணம் இவண்நாம் முடிக்கின் முனிவன் தடுப்பதும் எவ்விதம்? ஏய்த்திட எண்ணினன் என்னையும்! பேய்ப்பயல்! |
| 370 | வாய்த்ததிங் கெனக்கே மற்றவன் கற்படை. |
| | (மௌனம்) |
| | ஊகம் சென்றவா றுரைத்தோம். உறுதி யாகமற் றதன்நிலை அறிவதார்? உளதல துரைப்பரோ முனிவர்? உளதெனின் உரைத்தவா றிருத்தலே இயல்பாம். எதற்குமீ துதவும். |
| | (மௌனம்) |
| 375 | சென்றுகண் டிடுவம். திறவுகோல் இரண்டு செய்த தெதற்கெலாம் உய்வகை ஆனதே! எத்தனை திரவியம் எடுத்துளேம்! கொடுத்துளேம்! அத்தனை கொடுத்தும் அறிவிலாப் படைஞர், நன்றியில் நாய்கள் இன்றஃ தொன்றும் |
| 380 | உன்னா தென்னையே ஓட்டிடத் துணிந்தன. என்னோ நாரணன் தனக்குமிங் கிவர்க்கும்? எளியனென் றெண்ணினேன். வழிபல தடுத்தான். கெடுபயல் பாக்கியம், கடிமணம் இங்ஙனம் நடுவழி வந்ததும்! விடுகிலம். |
| 385 | கொடியனை இனிமேல் விடுகிலம் வறிதே. 5 |
விடுத்து - வாய்விட்டு. கெடுபயல் - பலதேவனைக் குறிக்கிறது. கொடியன் - நாராயணனைக் கருதிற்று.