பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் | 295 |
| | மிகைதெரிந் தவற்றுள் மிக்கது கொளலெனும் | | 345 | தகைமையில் தகுவதும் இதுவே. அதனால், குடிலா! மறுக்கலை. | குடி: | | அடியேன். அடியேன். | ஜீவ: | | இந்நிசி இரண்டாஞ் சாமம் அன்றோ முன்னநாம் வைத்த முகூர்த்தம்? | குடி: | | ஆம்!ஆம்! | ஜீவ: | | செவ்விது செவ்விது! தெய்வசம் மதமே! | | 350 | ஆவா! எவ்வள வாறின தென்னுளம்! ஓவா என்றுயர்க் குறுமருந் திதுவே! பிரிந்திடல் ஒன்றே பெருந்துயர். | குடி: | | பிரிந்துநீர் | | | இருந்திடல் எல்லாம் ஒருநாள். அதற்குள் வெல்லுதல் காண்டி! மீட்குதும் உடனே. | ஜீவ: | 355 | நல்லது! வேறிலை நமக்காம் மார்க்கம். ஒருமொழி மனோன்மணி உடன்கேட் டிஃதோ வருகுதும். அதற்குள் வதுவைக் கமைக்குதி அவ்வறை அமைச்ச ரேறே! 4 | | | (ஜீவகன் போக) | குடி: | | தப்பினன் நாரணன். சாற்றற் கிடமிலை. (தனிமொழி) இப்படி நேருமென் றெண்ணினர் யாவர்? முனிவரன் வந்ததும், நனிநலம் நமக்கே! மறுப்பளோ மனோன்மணி? சீசீ! மனதுள் |
344 - 345 அடி, “குணநாடிக் குற்றமு நாடி யவற்றுள், மிகைநாடி மிக்க கொளல்” என்னும் திருக்குறள் கருத்துடையது. மீட்குதும் - (மனோன்மணியைத்) திரும்பவும் அழைக்கலாம். ‘தப்பினன் நாரணன். சாற்றற் கிடமிலை’ - நாராயணன் சிறையில் இருப்பதால், மனோன்மணி - பலதேவன் திருமணத்தைத் தடுத்து நிறுத்த அவனால் முடியாது என்பது கருத்து. |