பக்கம் எண் :

308மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20

குறள்வெண் செந்துறை)

  புருடோத்தமன்: (பாட)
  உண்ணினைவில் ஒருபோதும்
     ஓய்வின்றிக் கலந்திருந்தும்
          உயிரே என்றன்
கண்ணிணைகள் ஒருபோதும்
     கண்டிலவே நின்னுருவம்
           காட்டாய் காட்டாய்.      1
  அவத்தைபல அடையுமனம்
     அனவரதம் புசித்திடினும்
           அமிர்தே என்றன்
செவித்துளைகள் அறிந்திலவே
     தித்திக்கும் நின்னாமம்
           செப்பாய் செப்பாய்.      2
  பொறிகளறி யாதுள்ளே
     புகும்பொருள்கள் இலையென்பர்
           பொருளே உன்னை
அறியவவா வியகரணம்
     அலமாக்க அகத்திருந்தாய்
           அச்சோ அச்சோ.      3
  (புருடோத்தமன் சற்றே அகல)

(ஆசிரியப்பாவின் தொடர்ச்சி)

குடி:  (தனிமொழி)
 40மனிதன் அலனிவன்! புனிதகந் தருவன்!
தேவரும் உளரோ? யாதோ? அறியேன்.
இருளெலாம் ஒளிவிட இலங்கிய உருவம்


கு. செந்துறை-1. உண்ணினைவில் - மனக் கருத்தில்.

2. அனவரதம் - எப்போதும்.

3. பொறிகள் - ஐம்பொறிகள். கரணம் - அந்தக்கரணம்; மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் அகக்கருவிகள். அலமாக்க - அலைய, கலங்க. அச்சோ - அந்தோ.