பக்கம் எண் :

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்309

   மருள்தரு மதனன் வடிவே! மதனற்கு
உருவிலை என்பர். ஓசையும் உருவும்!
 45பாடிய பாட்டின் பயனென்! அஃதோ!
நாடி அறிகுதும். நன்று நன்று.
  (புருடோத்தமன் திரும்பிவர)
  (குறள்வெண் செந்துறை - தொடர்ச்சி)
புரு: (பாட)
  புலனாரக் காண்பதுவே
     பொருளென்னும் போதமிலாப்
           புன்மை யோர்க்கிங்
குலவாதென் உளநிறையும்
     உனதுண்மை உணர்த்தும்வகை
           உண்டே உண்டே.      4
  பெத்தமனக் கற்பிதமே
     பிறங்குநினை வெனப்பிதற்றும்
           பேதை யோர்க்கோர்
யத்தனமற் றிருக்கவென்னுள்
     எழுமுனது நிலையுரைப்ப
           தென்னே யென்னே.      5
  தேர்விடத்தென் உள்ளநிறை
     தெள்ளமுதே உன்னிலைமை
           தேரா திங்ஙன்
ஊர்விடுத்தும் போர்தொடுத்தும்
     உனையகல நினைத்ததுமென்
           ஊழே ஊழே.      6

மருள்தரு - மயங்கச் செய்கிற. மதனன் - மன்மதன்.

குறள்வெண் செந்துறை - 4. புலன் ஆர - (கண்ணாகிய) புலன் நுகரும்படி. போதம் இலா - அறிவு இல்லாத.

5. பெத்தமனம் - அவத்தைகளால் கட்டுப்பட்ட மனம், கற்பிதம் - இல்லாததை உண்டு எனக் கற்பிப்பது. பிறங்கும் - விளங்கும். யத்தனம் அற்று - முயற்சி இல்லாமல்.

இந்த ஆறு குறள்வெண் செந்துறைச் செய்யுட்களும் (6 - ஆவது செய்யளின் கடைசி அடியைத் தவிர) ஞானசமாதியில் தெரிகிற பிரமானுபூதிக்கும், புருடோத்தமன் கனவில் கண்ட மனோன்மணி யின் காதல் வடிவத்திற்கும் பொருந்தியிருப்பது காண்க.