பக்கம் எண் :

310மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20

  (ஆசிரியப்பாவின் தொடர்ச்சி)
குடி: சேரனே யாமிது செப்பினோன். போரினில்
ஒருபுறம் ஒதுங்கி அரசனை அகற்றி
நின்றதாற் கண்டிலேன். நிறைந்த காமுகன்.
 50ஒன்றநு கூலம் உரைத்தான். நன்றே
ஊரிவன் விடுத்ததும் போரிவண் தொடுத்ததும்.
எண்ணிய கொள்கைக் கிசையும் புகன்றவை.
நண்ணுதும் நெருங்கி. நல்லது ! திரும்பினன்.
  (புருடோத்தமன் திரும்பிவர)
புரு: (தனிமொழி)
  என்றும் கண்டிலம் இன்றுகண் டதுபோல்.
எத்தனை முகத்திடைத் தத்துறு துயரம்!
இவ்வயின் யான்வந் திறுத்தநாள் முதலாக்
கௌவையின் ஆழ்ந்தனை போலும்! ஐயோ!
   (குடிலன் எதிர்வர)
   (குடிலனை நோக்கி)
ஜடிதி! பெயரென்! சாற்றுதி! தத்க்ஷணம்!
குடி: அடியேன்! அடியேன்! குடிலன்! அடிமை!


அநுகூலம் உரைத்தான் - சேரன் போர் தொடுத்தது கனவை விலக்கும் பொருட்டு ; நாடு பிடிப்பது அல்ல. இது குடிலனுக்கு அனுகூலம். இறுத்த - தங்கிய. கௌவை - துன்பம். ஜடிதி - விரைவாக, இந்துஸ்தானிச் சொல். ஜல்தி என்றும் வழங்குகிறது. தத்க்ஷணம் - இப்பொழுதே, உடனே.