புரு | 60 | வந்ததென் இருள்வயின்? வாளிடென் அடியில்! |
குடி: | | வெந்திறல் வேந்தநின் வென்றிகொள் பாசறை சேர்ந்துன் அமையம் தேர்ந்து தொழுதுஓர் வார்த்தைநின் திருச்செவி சேர்த்திடக் கருதி வந்தனன் அடியேன்: தந்தது தெய்வம் |
| 65 | உன்றன் திருவடி தரிசனம் உடனே! சிந்தையெப் படியோ அப்படி என்செயல்! |
புரு: | | செப்புதி விரைவில். செப்புதி வந்தமை! |
குடி: | | ஒப்பிலா வீர! எப்புவ னமுநின் மெய்ப்புகழ் போர்த்துள ததனால், இப்புவி |
| 70 | நீவரு முனமே நின்வசப் பட்டுத் தாவரும் இன்பம் தடையறத் துய்ப்பப் பாக்கியம் பெற்றிலம் பண்டே என்றுனி ஏக்கமுற் றிருந்தமை யானெடு நாளாய் அறிந்துளன். இன்றுநீ ஆற்றிய போரிற் |
| 75 | செறிந்திரு படையும் சேர்தரு முனமே முறிந்தியாம் ஓடிய முறைமையும் சிந்தையிற் களிப்படை யாமலே கைகலந் தமையும் வெளிப்படை யன்றோ? வேந்த!இப் புவியோர் வெல்லிட மும்வெலா இடமும் யாவும் |
| 80 | நல்லவா றறிவர். நாயினேன் சொல்வதென்? வேசையர் தங்கள் ஆசையில் முயக்கம் அன்றோ இன்றவர் ஆற்றிய போர்முறை? என்செய் வாரவர்? என்செய்வார்? ஏழைகள்! நின்புகழ் மயக்கா மன்பதை உலகம் |
| 85 | யாண்டும் இன்றெனில், அணிதாம் இந்தப் பாண்டியும் நின்பாற் பகைகொளத் தகுமே! ஒருவா றறமே யாயினும், மருவாக் கொற்றவர் பிழைக்காக் குற்றமில் மாக்களை |
எப்புவனமும் - எந்த உலகமும். இப்புவி - இந்தப் பாண்டிய தேசம். தாவரும் - கெடுதலில்லாத. உனி - உன்னி, நினைத்து. மயக்கா - மயக்காத மன்பதை - மக்கள். தகுமே - தகுமோ.