பக்கம் எண் :

312மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20

>
   மற்றவர் மனநிலை முற்ற அறிந்தபின்
 90கருணையோ காய்தல், தருமநல் லுருவே!
புரு: (தனதுள்)
  யாதோ சூதொன் றெண்ணினன். அறிகுவம்.
  (குடிலனை நோக்கி)
  வேண்டிய தென்னை அதனால்? விளம்புதி.
குடி: ஆண்டகை யறியா ததுவென்? இன்று
மாண்டவர் போக மீண்டவ ரேனும்
 95மாளா வழிநீ ஆளாய் என்னக்
கைகுவிப் பதேயலாற் செய்வகை யறியா
அடியேன் என்சொல! ஆ! ஆ! விடியில்
வாளா மாளும் மனிதர் தொகுதி
எண்ணி எண்ணி எரிகிற தென்னுளம்.
 100எண்ணுதி கருணை! இவர்க்குள் தாய்க்கொரு
புதல்வராய் வந்த பொருநரெத் தனையோ?
வதுவை முற்றுறா வயவரெத் தனையோ?
புதுமணம் புரிந்த புருடரெத் தனையோ?
நொந்த சூலினர் நோவு பாராது
 105வந்திவண் அடைந்த மள்ளரெத் தனையோ?
தாய்முகம் வருந்தல் கண்டழுந் தன்சிறு
சேய்முகம் மறவாச் செருநரெத் தனையோ?
செயிருற முழந்தாள் சேர்ந்தழு பாலரைத்
துயிலிடைத் துறந்த சூரரெத் தனையோ?
புரு: 110சரி, சரி! இவையுன் அரசர்க் காங்கு
   சாற்றா தொழிந்ததென்?
குடி:  சாற்றிலென்?
   போற்றான் யார்சொலும் புந்தியும் சற்றும்.
அன்பிலன்; பிறர்படும் துன்பம் சிறிதும்


பொருநர் - போர்வீரர். வயவர் - வீரர். மள்ளர் - வீரர். செருநர் - போர்வீரர் (செரு - போர்). செயிர்உற - துன்பத்துடன்.