பக்கம் எண் :

318மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20

   அரசனை அடிபணிந் தொருசார் ஒதுங்கி
 40நீக்கமில் அன்பும் ஊக்கமும் களிப்பும்
காட்டிய மதிமுகம் கோட்டியே நின்ற
தோற்றமென் கண்ணின் மாற்றுதல் அரிதே!
“என்னோ இதற்கும் யோசனை எந்தாய்!
கொன்னே வருந்தலை! கொள்கையிற் பிறழா
 45நீதிநம் பாலெனில் நேர்வது ஜயமே.
ஏததற் கையம்? இதுவிட் டடிமை
பெயர்வது பெரிதல, பேருல கதற்குத்
துயர்வரும் எல்லைநம் துயர்நோக் குதலோ
பெருமை! அண்ணிதே முனியிடம்; கருதிய
 50பிரிவோ ஒருதினம்! குருவும் தந்தையும்
சமமெனிற் சுந்தர விமலன் தன்திருப்
பாதா தரவே போதா தோதுணை?
ஆயினும் அத்தனை அவசிகம் ஆயின்,
ஆகுக ஆஞ்ஞைப் படியே! தடையிலை.
 55அன்னையும் நின்னை அன்றிவே றறியேன்.
உன்னதே இவ்வுடல். உன்திரு உள்ளம்
உன்னிய படியெலாம் உவப்பச் செய்குவன்.
அடிமையின் கவலையால் அரசர்க் கியல்பாம்
கடமையிற் பிறழும் கலக்கம் விலக்குவை!
 60அன்பாம் உன்பால் ஐய! உன்மகள்
வேண்டும் வரமெலாம் யாண்டுமிவ் வொன்றே.”
2-ம் தோழி மொழியோ இதுவும்? ஆஆ! ஆஆ!
இதுவெலாம் காணவோ எழுதினன் பிரமன்?
முதற்றோழி எதுவெலாம் காணவோ இருப்பது இக்கண்?


43 - 61. வரிகள். மனோன்மணியைப் பலதேவனுக்கு மணம் செய்விக்க எண்ணியிருப்பதை அரசன் மனோன்மணிக்குக் கூறிய போது, தனக்கு அது விருப்பமில்லாமல் இருந்தும், தனது தந்தைக்கு மாறுபேசக் கூடாதென்னும் கருத்துடன் அவள் சம்மதம் தெரிவித்ததை முதல் தோழி இவ்வரிகளில் கூறுகிறாள்.