2-ம் தோழி | | அம்மணி என்செய்தாள்? அக்காள்! அதன்பின் |
| 15 | ‘அப்படி அரசன் மீண்டான்.’ செப்பாய்! |
முதற்றோழி | | எப்படிச் செப்பயான்? ஏந்திழை பட்டபாடு. அய்யோ! அத்துயர் தெய்வமே அறியும்! மன்னவன் வாசல் கடந்தான் எனுமுனம் தன்னிலை தளர்ந்தாள், சாய்ந்தாள். வாணியும் |
| 20 | அருகுள செவிலியும் யானுமாய் விரைவில் தாங்கினோம் பாங்குள அமளியிற் சேர்த்தோம். மூச்சிலை; பேச்சிலை; முகமெலாம் வெயர்வை. இட்டகை இட்டகால் இட்டவப் படியே. இப்படி முடிந்ததே! இனியென் செய்வோம்! |
| 25 | தப்புமோ இவ்வொரு தத்துமென் றெண்ணி ஏங்கினோம், தியங்கினோம்; பாங்கிருந் தழுதோம். |
2-ம் தோழி | | ஐயோ தெய்வமே! அப்போ தவளுயிர் பட்டபா டெதுவோ!கட்டம்! கட்டம்! |
முதற்றோழி | | விதியிது! அலதிது கதையிலும் உளதோ? |
| 30 | நொந்தபுண் அதனிலே வந்திடும் நூறிடி. தந்தை தேறிடத் தன்துயர் மறைத்து மகிழ்ச்சி காட்டினான். வந்ததித் தளர்ச்சி. மூடிடில் தீயும் மூளுமும் மடங்காய். |
2-ம் தோழி | | எத்தனை வேதனை! எத்தனை சோதனை! |
| 35 | யாது மறியாட் கேதித் துணிபு? ஓதிய கட்டுரை ஒருமுறை இனியும் நவிலுதி அக்காள்! |
முதற்றோழி: | | நங்கைநன் மொழியென் |
| | செவியிடை இனியும் மணிபோல் திகழும்! |
பாங்குஉள - பக்கத்தில் உள்ள, அமளி - படுக்கை, தத்து - விபத்து.