332 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20 |
நாரா: | | இட்டநின் கட்டளைப் படியே எய்தினர். | ஜீவ: | | (நாராயணனை நோக்கி) | | 175 | மற்றிவர் கவலை மாற்றிட ஒருபா சற்றிசைத் திடுவளோ வாணி? சாற்றுதி! | வாணி: | | (பாட) |
(கொச்சகக் கலிப்பா) நீர்நிலையின் முதலையின்வாய் நிலைகுலைந்த ஒருகரிமுன் ஓர் முறையுன் பெயர் விளிக்க உதவினைவந் தெனவுரைப்பர்; ஆர்துயர அளக்கர்விழும் அறிவிலியான் அழைப்பதற்குன் பேர்தெரியேன் ஆயிடினும் பிறகிடல்நின் பெருந்தகையோ. 1
| பாரரசர் துகிலுரியப் பரிதவிக்கும் ஒருதெரிவை சீர்துவரை நகர்கருதிச் சிதைவொழிந்தாள் எனஉரைப்பர்; ஆர்துணையும் அறவிருக்கும் அறிவிலியான் அழைப்பதற்குன் ஊர்தெரியேன் ஆயிடினும் உறுதிதரல் உனக்குரித்தே. 2
| மறலிவர மனம்பதறும் மார்க்கண்டன் உனதிலிங்கக் குறிதழுவி அழிவில்வரம் கொண்டான்முன் எனவுரைப்பர்; வெறிகழுமிப் பொறியழியும் வெம்பாவி விரவுதற்குன் நெறியறியேன் ஆயிடினும் நேர்நிற்றல் நினதருளே. 3 |
கொச்சகக் கலிப்பா - 1. துயர அளக்கர் - துன்பமாகிய கடல். பிறகிடல் - பின் வாங்குதல். இதில் கஜேந்திர மோக்ஷக் கதை கூறப்படுகிறது (புராணக் கதை விளக்கத்தில் காண்க). 2. அரசன் - துரியோதனாதியர். ஒரு தெரிவை - திரெபதி. துவரைநகர் - துவாரகை, கண்ணபிரானுடைய நகரம். சிதைவு. அழிவு. இதில் திரௌபதியின் துகிலுரிதல் கதை கூறப்படுகிறது (புராணக்கதை விளக்கத்தில் காண்க). 3. மறலி - யமன். வெறி கழுமி - மயக்கம் நிறைந்து. பொறி அழியும் - அறிவு அழியும். இதில் மார்க்கண்டேயன் கதை கூறப்படுகிறது (புராணக்கதை விளக்கத்தில் காண்க). இக் கொச்சகக் கலிப்பா மூன்றும், பொதுவான கடவுள் வாழ்த்தாகவும், மனோன்மணி கனவுகண்டு அதனால் கொண்ட காதல் மனோநிலைக்குப் பொருந்தியதாகவும் இருப்பது காண்க. |