சுந்: | | எதுவோ இதனினும் ஏற்புடைப் பிரார்த்தனை? மந்திரம் தந்திரம் வழங்கும் நற்செபம் யாவையும் இதுவே. பாவாய்! மனோன்மணீ! |
| 180 | வருதி இப்புறம். வாங்குதி மாலை. |
| | (மனோன்மணி மணமாலைகொண்டு பலதேவனெதிர் வர) |
| | ஒருதனி முதல்வன் உணர்வன் உன்னுளம். உன்னன் புண்மையேல் இன்னமும் காப்பன். |
| | (புருடோத்தமன் திரைவிட்டு வெளிவந்து நிற்க) |
முதற்படை | | ஆற்றேன்! ஆற்றேன்! ஐய! இத் தோற்றம். |
3-ம் படை: | | ஊற்றிருந் தொழுகி உள்வறந் ததுகண். |
4-ம் படை: | | அமையா நோக்கமும் இமையா நாட்டமும், ஏங்கிய முகமும் நீங்கிய இதழும், உயிரிலா நிலையும் உணர்விலா நடையும் பார்த்திடிற் சூத்திரப் பாவையே. பாவம்! |
| | (மனோன்மணி புருடோத்தமனைக் காண: உடன் அவன் நிற்குமிடமே விரைவில் நடக்க) |
யாவ: | | எங்கே போகிறாள்? இதுயார்? இதுயார்? |
புரு: | 190 | இங்கோ நீயுளை! என்னுயிர் அமிர்தே! |
| | (புருடோத்தமன் தலைதாழ்க்க: மனோன்மணி மாலை சூட்டி அவன் றோளோடு தளர்ந்து மூர்ச்சிக்க) |
சுந்: | | மங்கலம்! மங்கலம்! மங்கலம்! உமக்கே! |
யாவ: | | சோரன்! சோரன்! சோரன்! சோரன்! |
நிஷ்டாபரர் | | கண்டேன்! கண்டேன்! கருணா கரரே! |
| | (கருணாகரரைத் தழுவி) |
யாவ: | | பற்றுமின்! பற்றுமின்! சுற்றுமின்! எற்றுமின்! |
பலதே: | 195 | கொன்மின்! கொன்மின்! |