344 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20 |
பாம்பின் உருவங் கொண்டு அவர்களை விழுங்குவதாகவும். அப்படி விழுங்குவதனால்தான் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் ஏற்படுகின்றன என்றும் புராணக் கதை கூறுகிறது. கஜேந்திர மோக்ஷம் பக்கம் 291 கஜேந்திரன் என்னும் யானை திருமால் மீது பக்திகொண்டு, நாள் தோறும் நீரோடையில் தாமரைப்பூவைப் பறித்துப் பெருமாளைப் பூசித்துக்கொண்டிருந்தது. ஒருநாள் ஒரு முதலை யானையின் காலைப் பிடித்து நீரில் இழுத்தது. யானையும் பலங்கொண்ட மட்டும் முதலையைக் கரைக்கு இழுத்தது. அதனால் முடியவில்லை. முதலை யானையை நீரில் இழுத்துச் சென்றது. அவ்வமயம், யானை திருமாலை நினைத்தது. திருமால் வந்து தமது கைச்சக்கரத்தினால் முதலையைக் கொன்று யானையை விடுவித்து, அதற்கு மோக்ஷம் தந்தருளினார். துகிலுரிந்த கதை பக்கம் 291 பாண்டவர் ஐவரும் கௌரவருடன் சூதாடி நாடு நகரம் முதலியவைகளைத் தோற்றனர். கடைசியில், தருமபுத்திரர், திரௌபதி யையும் பணையம் வைத்துச் சூதாடினார். அவளையும் தோற்றார். அப்போது, துரியோதனன் திரௌபதியைச் சபையில் அழைத்து அவள் துகிலை அவிழ்த்து மானபங்கம் செய்தான். திரௌபதிக்கு உதவி செய்வார் ஒருவருமிலர். அப்போது திரௌபதி, கண்ணபிரானைத் தியானம் செய்தாள். கண்ணன் திருவருளால் அவள் அணிந்திருந்த ஆடை வளர்ந்துகொண்டேயிருந்தது. இவ்வாறு கண்ணபிரான் திருவருளினால் திரௌபதி மானம் காப்பாற்றப்பட்டாள். மார்க்கண்டேயன் கதை பக்கம் 291 மார்க்கண்டேயன் என்பவர் நற்குணமும் நல்லொழுக்கமும் உடையவராயிருந்தார். ஆனால், அவருக்கு அற்பாயுள் என்பது அறிந்து அவருடைய பெற்றோர்கள் மனம் கவன்றார்கள். மார்க்கண்டேயர், தமது பெற்றோரின் மன வருத்தத்தைத் தீர்க்கும்பொருட்டுச் சிவலிங்க |