பக்கம் எண் :

46மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20

ஆயினும் நீயே தாயெனுந் தன்மையின்
மேயபே ராசையென் மீக்கொள ஓர்வழி
உழைத்தலே தகுதியென் றிழைத்தவிந் நாடகம்
வெள்ளிய தெனினும் விளங்குநின் கணைக்காற்கு
ஒள்ளிய சிறுவிர லணியாக்
கொள்மதி யன்பே குறியெனக் குறித்தே.

-ஆசிரியச் சுரிதகம்

அவையஞ்சின நெஞ்சொடு கிளத்தல்

(நேரிசை வெண்பா)

அமைய அருளனைத்தும் ஆட்டுமேல் நெஞ்சே
சுமைநீ பொறுப்பதெவன் சொல்லாய் -- நமையுமிந்த
நாடகமே செய்ய நயந்தால் அதற்கிசைய
ஆடுவம்வா நாணம் அவம்.

பாயிரம் முற்றிற்று.

    வெண்பா 2-க்கு அடி 8
    கலிப்பா 1-க்கு அடி 49
    ஆகப் பாயிரம் 1-க்கு அடி 57

பழைய ஏட்டுச் சுவடிகள் முதன்முதல் அச்சுப் புத்தகங்களாக வெளிவந்தன. இதைத்தான் பழம்பணி புதுக்கி என்று கூறினார். குயிற்றுதல் - செய்தல். மீக்கொள - மேற்கொள்ள. இந் நாடகம் - இந்த மனோன்மணீயம் என்னும் நாடகம். சிறுவிரல் - தமிழ்த் தெய்வமாகிய உன் சிறுவிரல். கொள்மதி - கொள்க.

அமைய - பொருத்த, அருள் - தெய்வத் திருவருள், ஆட்டுமேல் - ஆட்டுவிக்குமானால். சுமை பொறுப்பது - பாரந் தாங்குவது, எவன் - என்ன காரணம். நமையும் - நம்மையும். நயந்தால் - (திருவருள்) விரும்பினால். அவன் - வீண்.