பக்கம் எண் :

54மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20

மனோன்மணீயம்

முதல் அங்கம்

முதற் களம்

இடம் :பாண்டியன் கொலுமண்டபம்.
காலம் :காலை

(சேவகர்கள் கொலுமண்டபம் அலங்கரித்து நிற்க)

(நேரிசை ஆசிரியப்பா)

முதற் சேவகன் :  
புகழ்மிக அமைதரு பொற்சிங் காதனந்
திகழ்தர இவ்விடஞ் சேர்மின் சீரிதே.
2-ம் சே: அடியிணை யருச்சனைக் காகுங் கடிமலர்
எவ்விடம் வைத்தனை?
3-ம் சே: ஈதோ! நோக்குதி.
4-ம் சே: 5 அவ்விடத் திருப்பதென்?
5-ம் சே: ஆரம். பொறு! பொறு!
விழவறா வீதியில் மழையொலி யென்னக்
கழைகறி களிறுகள் பிளிறுபே ரொலியும்,
கொய்யுளைப் புரவியின் குரத்தெழும் ஓதையும்
மொய்திரண் முரசின் முழக்கும் அவித்துச்
10 ‘சுந்தர முனிவா! வந்தனம் வந்தனம்’
எனுமொலி யேசிறந் தெழுந்தது. கேண் மின்!

சிங்காதனம் - சிங்காசனம். திகழ்தர - விளங்க. அடியினை - இரண்டு பாதங்கள். கடிமலர் - மணமுள்ள பூ. ஆரம் - சந்தனம்; பூமாலை. கழைகறி - கரும்பைக் குறிக்கும். கொய்யுளை - கொய்யப்பட்ட (கத்தரிக்கப்பட்ட) பிடரி மயிர்.