பக்கம் எண் :

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்55

2-ம் சே: முனிவரர் என்றிடிற் கனிவுறுங் கல்லும்!
4-ம் சே: எத்தனை பக்தி! எத்தனை கூட்டம்!
எள் விழற் கிடமிலை. யான்போய்க் கண்டேன்!
3-ம் சே: 15 உனக்கென் கவலை? நினைக்குமுன் ஓடலாம்.
முதற் சே: அரசனும் ஈதோ அணைந்தனன், காணீர்!
ஒருசார் ஒதுங்குமின். ஒருபுறம்! ஒருபுறம்!

(ஜீவகன் வர)

யாவரும்: (தொழுது)
ஜய! ஜய! விஜயீபவ ராஜேந்திரா!!

(சுந்தர முனிவர், கருணாகரர், குடிலன்,
நகரவாசிகள் முதலியோர் வர)

ஜய! ஜய! விஜய தவரா ஜேந்திரா!!
ஜீவகன்: 20 வருக! வருக! குருகிரு பாநிதே!!
திருவடி தீண்டப் பெற்றவிச் சிறுகுடில்
அருமறைச் சிகரமோ ஆலநன் னீழலோ
குருகுல விஜயன் கொடித்தேர்ப் பீடமோ
யாதென ஓதுவன்? தீதற வாதனத்து
25 இருந்தருள் இறைவ! என்பவ பாசம்
இரிந்திட நின்பதம் இறைஞ்சுவல் அடியேன்

(ஜீவகன் பாதபூசை செய்ய)

சுந்தரமுனிவர் :
வாழ்க! வாழ்க! மன்னவ! வருதுயர்
சூழ்பிணி யாவுந் தொலைந்து வாழ்க!
சுகமே போலும், மனோன்மணி?
ஜீவ: சுகம். சுகம்.
சுந்: 30 இந்நக ருளாரும் யாவரும் க்ஷேமம்?
ஜீவ: உன்னரு ளுடையோர்க் கென்குறை? க்ஷேமம்.

ஜய விஜயீபரவ-வெற்றி உண்டாவதாக. தவராஜேந்திரா தவ ராஜர்களுக்கு இந்திரன் போன்றவனே. பவம்-பிறம் இரிந்திட முறிந்துபோக. பீடு-பெருமை.