பக்கம் எண் :

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்59

100 உன்னையு முன்குலத் துதித்தநம் மனோன்மணி
தன்னையுஞ் சங்கரன் காக்க! தயாநிதே!
அன்பும் அறமுமே யாக்கையாக் கொண்ட
நின்புதல் வியையான் காணநே சித்தேன்,
அத்திரு வுறையும் அப்புறம் போதற்
105 கொத்ததா மோஇக் காலம்? உணர்த்தாய்.
ஜீவ: ஆம்! ஆம்! சேவக! அறைதி சென்று
தேமொழிக் கன்னிதன் சேடியர் தமக்கு
நங்குல முனிவர் இங்குள ரெனவே.
(அரசனும், முனிவரும், சீடரும் அப்புறம் போக)
குடி: (தனதுள்)  
நங்கா ரியம்ஜயம் எங்கா கினுஞ்செல!
(சேவகனை நோக்கி)
110 சேவகா! முனிவர் சிவிகையுஞ் சின்னமும்
யாவுமவ் வாயிலிற் கொணர்தி.
சேவ: சுவாமி!
(குடிலன் முதலியோர்போக)
முதல் நகரவாசி:  
கடன்மடை விண்டெனக் குடிலன் கழறிய
நயப்புரை! ஆ! ஆ! வியப்பே மிகவும்!
நாட்டைச் சிறப்பித் துரைத்தது கேட்டியோ?
2-ம் ந: 115 கேட்டோம்; கேட்டோம். நாட்டிற் கென்குறை
விடு! விடு! புராணம் விளம்பினன் வீணாய்.
3-ம் ந: குடிலன் செய்யும் படிறுகள் முனிவர்
அறியா தவரோ? சிறிதா யினுமவன்
உரைத்தது கருத்திடைக் கொண்டிலர் உவர்த்தே.

திரு - திருமகள் போன்ற மனோன்மணி. அறைதி - சொல்லுக. கழறிய - சொன்ன. புராணம் - பழங்கதை. படிறு - வஞ்சகம். உவர்த்து - வெறுத்து.