பக்கம் எண் :

94மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20

(கலித்துறை)

  சீரும் வதுவையுஞ் சேர்முறை செப்பியுஞ் சீவகன்றான்
போரும் நிதனமும் புந்திசெய் மந்திரம் போற்றினனே
சாருந் தனுகர ணங்களைத் தானெனுந் தன்மைவந்தால்
யாரும் அருள்வழி நிற்கிலர் மாயை யடைவிதுவே.

முதல் அங்கம் முற்றிற்று.

ஆசிரியப்பா 52 -க்கு அடி 830
ஆசிரியத் தாழிசை 6 -க்கு அடி 18
வெண்பா 2 -க்கு அடி 8
கலித்துறை 1 -க்கு அடி 4
ஆக, அங்கம் 1 -க்கு: பா. 61 -க்கு அடி 860

நிதனம் - அழிவு. தனு - உடம்பு. கரணங்கள் - பொறி புலன்கள்.