பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் | 93 |
(நேரிசை ஆசிரியப்பா) சேவ: | | வாழ்க! வள்ளால்! நின்உதா ரம்போல் ஏழுல கெவற்றிலும் உண்டோ? | | 80 | வாழ்க! எப்போதும் மங்கலம் வரவே. | குடி: | | (தனிமொழி) | | | நல்லது; விரைந்து செல்வாய்! நொடியில் | | | (சேவகன் போக) | | | மதியிலி! என்னே மனிதர் மடமை! இதுவும் உதாரமாய் எண்ணினன்; இங்ஙனம் தருமந் தானம் என்றுல கறியுங் | | 85 | கருமம் அனைத்துஞ் செய்பவன் கருத்தைக் காணின் நாணமாம்; அவரவர் தமக்கா எண்ணிய எண்ணம் எய்துவான் பலவும் பண்ணுவர் புண்ணியம் போல, எல்லாந் தந்நயங் கருதி யன்றித் தமைப்போற் | | 90 | பின்னொரு வனையெணிப் பேணுவ ருளரோ? புண்ணியஞ் சீவகா ருண்ணிய மெனப்பல பிதற்றுதல் முற்றும் பித்தே, அலதேல் யாத்திரை போன நூற்றுவர், சோறடு பாத்திரந் தன்னிற் பங்கு பங்காக | | 95 | ஒருவரை யொருவர் ஒளித்துப் பருமணல் இட்ட கதையா யிருக்குமோ? அவ்வளவு எட்டுமோ உலகின் கட்டைச் சிறுமதி? - ஆயினும், அரசனைப் போலிலை பேயர் பெரிய மேதினி யெங்குமே. | முதல் அங்கம்: ஐந்தாம் களம் முற்றிற்று.
வள்ளால் - வள்ளலே. உதாரம் - தயாளம். பருமணல் இட்ட கதை: இது கோமுட்டி பால் ஊற்றின கதை போன்றது. சில வழிப்போக்கர் சேர்ந்து ஒன்றாகச் சோறு சமைக்க எண்ணினர். உலையில் அவரவர் பங்கு அரிசியைப் போடவேண்டி யிருக்க, ஒவ்வொருவரும் மணலைப் பெய்த கதையைக் குறிக்கிறது. |