பக்கம் எண் :

92மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20

 45அடைவதப் போதியாம் அறிவம்.
போர்வந் திடிலிவன் நேர்வந் திடுமெலாம்
யார் இற வார்கள்? யார் அறி வார்கள்?
முடிதன் அடிவிழில் யாரெடுத் தணியார்?
அரச வமிசக் கிரமம் ஓரில்
 50இப்படி யேமுத லுற்பவம் இருக்கும்
சிலதலை முறையாப் பலவரு டஞ்செலில்
இந்துவில் இரவியில் வந்தோ ரெனவே,
மூட உலகம் மொழியும், யாரே
நாடுவர் ஆதியை? நன்று நன்றிது!
 55தோடம்! - சுடு! சுடு!
தீது நன்றென ஓதுவ வெல்லாம்
அறியார் கரையும் வெறுமொழி யலவோ?
பாச்சி பாச்சி என்றழும் பாலர்க்குப்
பூச்சி பூச்சி என்பது போலாம்;
 60மன்னரை உலகம் வணங்கவும் பார்ப்பார்க்
கன்னங் கிடைக்கவும் அங்ஙன மறைந்து
மதியி லாரை மயக்குவர் வஞ்சமாய்.
அதினால் நமக்கென்? அப்படி நினைக்கில்
இதுவரை இத்தனை நன்மையெப் படிவரும்?
 65பார்க்குதும் ஒருகை. சுந்தரன் யந்திரங்
காக்கும் வகையுங் காண்போம்; சுவான
சக்கரம் குக்கனைத் தடுத்திடும் வகையே
யந்திரத் தந்திரம் இருப்பதென் றறியான்.
பித்தன் மெத்தவும்! நமக்கினி இதுவே
 70உத்தம உபாயம். ஓகோ! சேவக!
சித்தம் மெத்தக் களித்தோம் இந்த
மணவுரை கேட்டென மன்னன் துணியப்
பாவனை பண்ணுவோம். ஏ! ஏ! சேவக!
  

(சேவகன் எழுந்துவர)

  இன்றுநாம் உற்றஇவ் வின்பம் போல
 75என்றும் பெற்றிலம். இணையறு மாலை
இந்தா! தந்தோம். இயம்பாய்,
வந்தோம் விடியுமுன் மன்னவைக் கென்றே.


உற்பவம் - உற்பத்தி. இந்து - சந்திரன். இரவி - சூரியன். கரையும் - கூவும். சுவானம் - நாய். குக்கன் - குக்கல்; நாய். இணையறு - ஒப்பற்ற.