சொல்
|
அருஞ்சொற்பொருள் |
எண்சிறப்பு | அருகனுக்குச் செய்யப்படும் எண்வகைச் சிறப்புகள் ; தூபதீபக் காட்சி , தேவதுந்துபி , தெய்வத்துவனி , சிங்காதனம் , பிண்டி , வெண்சாமரை , புட்பமாரி , முக்குடை . |
எண்சிறப்புள்ளோன் | அருகன் . |
எண்சுவடி | கணக்கேடு , பெருக்கல் வாய்பாட்டு நூல் . |
எண்சுவை | எட்டுச் சுவைகள் ; நகை , அழுகை , இளிவரல் , மருட்கை , அச்சம் , பெருமிதம் , வெகுளி , உவகை . |
எண்செய்யுள் | எண்ணாற் பெயர்பெறும் நூல் , பத்து முதல் ஆயிரம் அளவும் பாடிப் பாடல் எண் அளவால் பெயர்பெறும் இலக்கியம் . |
எடுத்துவளர்த்தல் | தத்து எடுத்து வளர்த்தல் ; வீட்டு உயிரினங்களை எடுத்து வளர்த்தல் . |
எடுத்துவிடுதல் | படையெடுத்தல் ; படையை விட்டு நீங்குதல் ; குழந்தையை முலையுண்ணச் செய்தல் . |
எடுத்தெறிதல் | பறை முழக்குதல் ; பொருட் படுத்தாதிருத்தல் , மதிப்பின்றி நடத்தல் . |
எடுத்தேத்து | எடுத்துப் புகழ்தல் , புகழ்ச்சி . |
எடுத்தேற்றம் | குறிப்பின்மை ; இணக்கமின்றியிருப்பது ; இல்லாததைப் பேசுவது . |
எடுத்தேற்றி | இணக்கமின்றியிருப்பது , மதியாமை . |
எடுத்தேறு | காண்க : எடுத்தெறிதல் |
எடுத்தோத்து | எடுத்து ஓதுவது ; எடுத்துக் கூறும் விதி . |
எடுப்பல் | எடுப்புதல் , எழுப்புதல் ; அகற்றல் . |
எடுப்பார்கைப்பிள்ளை | யாவர்க்கும் வசப்படக் கூடியவன் , சூதறியாதவன் . |
எடுப்பானவன் | உயரமானவன் ; தோற்றப் பொலிவுடையவன் ; இறுமாப்புள்ளவன் . |
எடுப்பித்தல் | எடுக்கச் செய்தல் . |
எடுப்பு | இறுமாப்பு ; உயர்வு , ஏற்றம் ; புதையல் ; நிந்தை ; தொடங்குதல் ; எடுத்தல் ; நிந்தித்தல் ; தூக்குகை ; எழுப்புகை . |
எடுப்புச்சாய்ப்பு | ஒப்புரவான நடை , தராதரமறிந்து நடக்கும் நடை ; உயர்வு தாழ்வு . |
எடுப்புத்தேர் | சுமந்து செல்லும் தேர் . |
எடுப்புதல் | எழுப்புதல் , துயிலெழுப்புதல் ; இசையெழுப்புதல் ; போக்குதல் . |
எடுப்பெடுத்தல் | சூழ்ச்சியை மேற்கொள்ளுதல் ; படையெடுத்துப் பொருதல் ; அரியதை முயலுதல் ; செருக்குக்கொள்ளுதல் . |
எடுபட்டவள் | கற்பழிந்து குடும்பத்தினின்று வெளிப்போந்தவள் ; நிலையில்லாதவள் . |
எடுபட்டவன் | ஒழுக்கக்கேட்டால் விலக்கப் பட்டவன் ; நிலையில்லாதவன் . |
எடுபடுதல் | நீக்கப்படுதல் ; நிலைபெயர்தல் ; அதிர்தல் ; விற்றழித்தல் ; நிலைதவறுதல் ; அழிந்துபோதல் ; வெளிவருதல் ; கைக்கொள்ளபபடுதல் ; மேம்படுதல் . |
எடுபாடு | செல்வாக்கு ; பகட்டு ; உயர்ச்சி , மேட்டிமை ; நிலையின்மை ; குலைவு ; அழிகை . |
எடுபிடி | முயற்சி ; விருது ; மதிப்பு ; குற்றேவலாள் . |
எடுவுதல் | எடுத்தல் . |
எடை | எடுத்தல் , தூக்குதல் ; நிறை ; நிறுக்கை , நிறையிடல் ; எழுப்புகை ; மிகுதல் . |
எடைக்கட்டு | நிறுக்கப்படும் பொருளுக்கு ஆதாரக்கலத்தின் கழிவு நிறை , எடைகட்டுதல் . |
எண் | எண்ணிக்கை ; கணக்கிடுதல் ; எண்ணம் ; ஆலோசனை ; அறிவு ; மனம் ; கவலை ; மதிப்பு ; இலக்கம் ; கணக்கு ; சோதிடநூல் ; இலக்கியம் ; வரையறை ; தருக்கம் ; மாற்று ; மந்திரம் ; அம்போதரங்கம் ; எளிமை ; வலி ; எள் . |
எண் | (வி) எண் என்னும் ஏவல் ; நினை , கருது . |
எண்கண்ணன் | பிரமன் . |
எண்காற்புள் | சிம்புள் , சரபப்பறவை . |
எண்கு | கரடி . |
எண்குணத்தான் | எட்டுக் குணங்களையுடைய கடவுள் ; அருகன் ; சிவன் . |
எண்குணம் | கடவுளின் எட்டுக் குணங்கள் ; தன்வயத்தனாதல் , தூய உடம்பினனாதல் , இயற்கை உணர்வின்னாதல் , முற்றுமுணர்தல் , இயல்பாகவே பாசங்களினின்று நீங்கல் , பேரருளுடைமை , முடிவிலாற்றலுடைமை , வரம்பிலின்பமுடைமை . |
எண்குணன் | காண்க : எண்குணத்தான் |
எண்குற்றம் | அறிவைக் கெடுக்கும் எட்டுவகைக் குற்றங்கள் ; இவற்றைச் சமணர் ஞானா வரணீயம் , தரிசனாவரணீயம் , வேதநீயம் மோகநீயம் , ஆயு ; நாமம் , கோத்திரம் , அந்தராயம் என்று குறிப்பிடுவர் . |
எண்கோணம் | எட்டுக்கோணம் ; எட்டுமூலையையுடைய உருவம் . |
எண்கோவை | காஞ்சி என்னும் அரையணி . |
எடுத்தமொழியின் எய்தவைத்தல் | நூல் உத்திகள் முப்பத்திரண்டனுள் ஒன்று ; அதாவது தான் சொல்லும் இலக்கணம் தான் எடுத்துக் காட்டிய சொற்களுக்கே பொருந்தவைத்தல் , தான் கூறும் இலக்கியத்திலேயே இலக்கணம் அமைந்திருப்பதைக் காட்டுதல் . |
எடுத்தல் | நிறுத்தலளவு ; எடுத்தலோசை ; உயர்த்துதல் ; சுமத்தல் ; தூக்குதல் ; நிறுத்தல் ; திரட்டுதல் ; உரத்துச் சொல்லுதல் ; குரலெடுத்துப் பாடுதல் ; மேம்படுத்திச் சொல்லுதல் ; பாதுகாத்தல் ; எழுப்புதல் ; தொடங்கல் ; ஏற்றுக்கொள்ளுதல் ; எடுத்து வீசுதல் ; வீடுமுதலியன கட்டல் ; இடங்குறித்தல் ; கைக்கொள்ளுதல் ; தாங்குதல் . |
எடுத்தலளவை | நிறை , நிறுத்தலளவை . |
எடுத்தலளவையாகுபெயர் | எடுத்தலளவைப் பெயர் அதனோடு இயைபுடைய பிறிதின் பொருள் உணர்த்துகை , இரண்டு கிலோ என்பது இரண்டு கிலோ அளவுள்ள பொருளைக் குறித்தல் போல்வது . |
எடுத்தலோசை | உயர்த்திக் கூறும் ஒசை . |
எடுத்தளவு | நிறை ; ஒரு பழைய வரி . |
எடுத்தன் | பொதிமாடு . |
எடுத்தாட்சி | எடுத்தாளுதல் ; வழக்கு . |
எடுத்தாளுதல் | கைக்கொண்டு வழங்குதல் . |
எடுத்தியல்கிளவி | சான்று , திருட்டாந்தம் . |
எடுத்து | சுமை , பொதி . |
எடுத்துக்கட்டி | சுவரின் தலைவரிக் கட்டு ; கைப்பிடிச் சுவர் . |
எடுத்துக்கட்டுதல் | உயரத்திக் கட்டுதல் ; இல்லாத செயலைப் புனைந்து கூறல் ; கற்பிதம் ; பின்னல் மயிரைச் சுருட்டிக் கட்டுதல் ; கட்டுக்கதை கூறல் ; பொய் சொல்லுதல் ; தாலியை அறுத்துக் கட்டுதல் . |
எடுத்துக்காட்டு | மேற்கோள் , உதாரணம் . |
எடுத்துக்காட்டுதல் | நூல் உத்திகள் முப்பத்திரண்டனுள் ஒன்று , தான் சொல்லும் இலக்கணத்திற்குத் தானே இலக்கியத்தை எடுத்துக் காட்டுதல் . |
எடுத்துக்காட்டுவமை | உபமானம் , உபமேயம் என்னும் இரண்டும் தனித்தனியே ஒவ்வொரு தொடராய் உவம உருபின்றி வரும் அணி . |
எடுத்துக்காரர் | பொதிமாட்டுக்காரர் . |
எடுத்துக்கூட்டுதல் | சிதறியவற்றை ஒருங்கு திரட்டி வைத்தல் ; ஒழுங்குபடுத்தல் . |
எடுத்துக்கைநீட்டி | கோயில் அருச்சகனுக்குப் பூசைக் கருவிகளை எடுத்துக் கொடுப்பவன் . |
எடுத்துக்கைநீட்டுதல் | கைத்தொண்டு செய்தல் . |
எடுத்துக்கொள்ளுதல் | ஏற்றுக்கொள்ளல் ; தனதாக்கிக் கொள்ளல் ; தத்தெடுத்துக்கொள்ளுதல் ; தூக்கிக் கொள்ளுதல் ; சாவால் கடவுள் தம்மிடம் அழைத்துக்கொள்ளுதல் . |
எடுத்துக்கோள் | மேற்கோள் , திருட்டாந்தம் ; மேற்கோள் வரி . |
எடுத்துக்கோள்வரி | கையறவெய்தி வீழ்தலைக் கண்டு பிறர் எடுத்துக்கொள்ளும்படி நடிக்கும் நடம் . |
எடுத்துச்செலவு | படையெடுத்துச் செல்லுகை . |
எடுத்துச் சொல்லுதல் | சிறப்பித்துச் கூறுதல் ; விளக்கமாகக் கூறுதல் ; புத்திசொல்லுதல் . |
எடுத்துத் தொடுத்தல் | இல்லாததைக் கட்டிக் கூறுதல் ; பொய்வழக்கிடுகை . |
எடுத்துநிலை | போனதை மீட்டு நிறுத்துகை . |
எடுத்துப்பேசுதல் | துதித்தல் ; ஒருவனுக்காக வழக்குப் பேசுதல் ; ஒரு பொருள்குறித்து விளக்குதல் ; புகழ்ந்து கூறுதல் ; பிறர் குற்றங்களை எடுத்துத் தூற்றுதல் . |
எடுத்துப்போடுதல் | நீக்குதல் ; திடுக்கிடச் செய்தல் . |
எடுத்துமொழிதல் | விளங்கச் சொல்லுதல் . |
எடுத்துரைத்தல் | விளங்கச் சொல்லுதல் . |
எடுத்துரைமலைவு | செய்யுட் குற்றங்களுள் ஒன்று . |
எடுத்தபடி | முன் ஆயத்தமின்றி , உடனே . |
எடுத்தமொழி | எடுத்துக்காட்டு . |
![]() |
![]() |
![]() |