சொல்
|
அருஞ்சொற்பொருள் |
எண்வகைத்துணைவர் | காண்க : எண்பேராயம் . |
எண்வகைப்பத்தி | சிவத்தொண்டருக்கு உரிய எட்டுப் பக்திச் செயல்கள் ; தொண்டரடி தொழுதல் , சிவபூசை மகிழ்ச்சி , சிவார்ச்சனை , சிவப் பணிவிடை , சிவசரிதம் கேட்டல் , பத்தியால் புளகமுறல் , சிவன்புகழ் சிந்திக்கை , திருப்பணிப் பொருளைக் கவர்ந்து கொள்ளாமை . |
எண்ணும்மை | எண்ணுப்பொருளில் வரும் உம்மை இடைச்சொல் ; நிலனும் தீயும் நீரும் என்றாற்போல வருவது . |
எண்ணுவண்ணம் | இருபது வண்ணங்களுள் ஒன்று , எண்ணிடைச்சொல் பயின்றுவரும் சந்தம் . |
எண்ணுறுத்தல் | உறுதிப்படுத்துதல் . |
எண்ணூல் | கணிதநூல் ; தருக்கநூல் . |
எண்ணெய் | எள்ளின் நெய் , நல்லெண்ணெய் ; எண்ணெய்ப் பொது ; ஒரு மரவகை . |
எண்ணெய்க் கறுப்பு | மினுக்கான கறுப்பு நிறவகை . |
எண்ணெய்க்காப்பு | எண்ணெய் முழுக்கு ; சாத்தும் எண்ணெய் . |
எண்ணெய்க்காரன் | எண்ணெய் வாணிகன் , எண்ணெய் விற்போன் . |
எண்ணெய்க்காரை | கருவேம்பு . |
எண்ணெய்ச்சாயம் | எண்ணெய் சேர்த்துச் செய்யப்படும் சாயம் ; எண்ணெயில் தோய்த்து ஏற்றும் சாயம் . |
எண்ணெய்ச்சிக்கல் | எண்ணெய் வயிற்றில் தங்குதலால் வரும் செரியாமை ; மயிரிலிருந்து எண்ணெய் நீங்காமையால் ஏற்படும் சிக்கல் ; எண்ணெய் நாற்றம் ; ஒரு பொருளின்மேல் தோய்ந்த எண்ணெய் அழுக்கு . |
எண்ணெய்ச் சீலை | எண்ணெயில் நனைத்ததுணி ; மெழுகுசீலை . |
எண்ணெய்த்தண்டு | எண்ணெய் பெய்து வைக்கும் குழாய் . |
எண்ணெய்தடவுதல் | மருந்தெண்ணெய் பூசுதல் . |
எண்ணெய்ப்பற்று | எண்ணெய்ச் சிக்கு . |
எண்ணெய்ப்பனையன் | பனைவிரியன் பாம்பு . |
எண்ணெய்ப்பிசுக்கு | காண்க : எண்ணெய்ப்பற்று |
எண்ணெய்ப்புல்லிடுதல் | நெசவுப் பாவுக்கு எண்ணெயிடுதல் . |
எண்ணெய்பொருத்துதல் | மருந்தெண்ணெய் பூசுதல் . |
எண்ணெய் மணி | ஒருவகை அணிகலன் , கழுத்தணி . |
எண்ணெய்வடித்தல் | எண்ணெய் ஊற்றுதல் . |
எண்ணெய் வழுக்கு | எண்ணெய் மினுக்கு . |
எண்ணெய் வாணிகன் | எண்ணெய் விற்போன் , செக்கான் . |
எண்ணெழுத்து | எண்ணும் எழுத்தும் ; இலக்கம் ; எண்ணுக் குறியீடான எழுத்து ; இலக்கிய இலக்கணம் . |
எண்ணேகாரம் | எண்ணுப் பொருளில் வரும் ஏகார இடைச்சொல் . |
எண்ணேயம் | நல்லெண்ணெய் . |
எண்ணோகாரம் | எண்ணுப் பொருளில் வரும் ஓகார இடைச்சொல் . |
எண்படுதல் | அகப்படுதல் . |
எண்பதம் | எளிய செவ்வி , தக்க காலம் ; எண்வகைத் தவசம் ; நெல் , புல் , வரகு , தினை , சாமை , இறுங்கு , துவரை , கேழ்வரகு . |
எண்பது | எட்டுப்பத்து , எட்டுமுறை பத்து . |
எண்பித்தல் | மெய்ப்பித்தல் , சான்று காட்டி நிறுவுதல் . |
எண்பெருந்துணைவர் | காண்க : எண்பேராயம் , அரசர்க்குரிய எட்டுவகை ஆயத்தார் . |
எண்பேராயம் | எண்பெருந்துணைவர் ; கரணத்தியலவர் , கரும விதிகள் , கனகச் சுற்றம் , கடை காப்பாளர் , நகரமாந்தர் , படைத்தலைவர் , யானைவீரர் , இவுளி மறவர் ; அரசர்க்குச் சாந்து , பூ , கச்சு , ஆடை , பாக்கு , வெற்றிலை , கஞ்சுகம் , நெய் ஆகியவற்றை ஆராய்ந்து கொடுப்போர் . |
எண்பொருள் | எளிதில் அடையும் பொருள் ; வேர் முதல் வித்து ஈறான எட்டுப்பொருள் ; வேர் , கிழங்கு , பட்டை , பிசின் , இலை , பூ , கனி , வித்து . |
எண்மயம் | எண்வகைப் பெருமிதம் ; பிறப்பு , குலம் , கல்வி , செல்வம் , வனப்பு , சிறப்பு , தவம் , உணர்வு . |
எண்மர் | எட்டுப் பேர் ; கணிதர் . |
எண்மானம் | எண்ணை எழுத்தால் எழுதுதல் . |
எண்மை | எளிமை ; தாழ்மை ; கணிசம் . |
எண்மையன் | எளியவன் . |
எண்வகைக்காட்சி | ஐயுறாமல் அறஞ்செயல் , அவாவின்மை , உவர்ப்பில் அறிவுடைமை , மூடமறுத்தல் , மிகப் பழி மறுத்தல் , அழிந்தோரை நிறுத்தல் , அறம் விளக்கல் , அறுசமயத்தவரன்பு . |
எண்டிக்கு | எட்டுத்திக்கு ; கிழக்கு , தென்கிழக்கு , தெற்கு , தென்மேற்கு , மேற்கு , வடமேற்கு , வடக்கு , வடகிழக்கு . |
எண்டிசை | எட்டுத்திக்கு ; கிழக்கு , தென்கிழக்கு , தெற்கு , தென்மேற்கு , மேற்கு , வடமேற்கு , வடக்கு , வடகிழக்கு . |
எண்டோளன் | எட்டுத் தோள்களுடையோன் ; சிவன் ; திருமால் . |
எண்டோளி | எட்டுக் கைகளையுடையாள் , காளி ; கொற்றவை , துர்க்கை . |
எண்ணக்குறிப்பு | நோக்கம் . |
எண்ணங்குலைதல் | மனம் கலங்குதல் ; எண்ணம் வீணாதல் ; மதிப்புக்கெடுதல் . |
எண்ணங்கொண்டிருத்தல் | நோக்கங்கொண்டிருத்தல் ; நம்பி எதிர்பார்த்தல் ; கவலைப்படுதல் ; சிந்தித்தல் . |
எண்ணத்தப்பு | நினைவு மயக்கம் ; மதிகேடு ; மதியாமை ; ஏமாறுகை ; கெட்ட எண்ணம் . |
எண்ணத்தவறு | நினைவு மயக்கம் ; மதிகேடு ; மதியாமை ; ஏமாறுகை ; கெட்ட எண்ணம் . |
எண்ணப்படுதல் | கணிக்கப்படுதல் , மதிக்கப்படுதல் . |
எண்ணம் | நினைப்பு ; நோக்கம் ; நாடிய பொருள் ; மதிப்பு ; இறுமாப்பு ; நம்பிக்கை ; சூழ்ச்சி ; கவலை ; கருத்து ; ஆலோசனை ; குறிப்பு ; கணிதம் . |
எண்ணர் | மந்திரியர் ; கணிதர் ; தருக்கம் செய்பவர் . |
எண்ணல் | தேர்ச்சி ; கருத்து ; கணக்கிடுகை ; எண்ணலளவை ; ஆலோசனை ; எண்ணுதல் ; நினைத்தல் ; குறித்தல் ; மதித்தல் ; இறுமாத்தல் ; கணக்கிடுதல் ; கவலைப்படல் . |
எண்ணலங்காரம் | ஒன்று இரண்டு முதலாக எண்ணுப்பெயர்கள் முறையே வரும் அணி . |
எண்ணலர் | எண்ணார் , மதியாதவர் , பகைவர் . |
எண்ணலளவை | இலக்கத்தால் எண்ணும் அளவு . |
எண்ணலார் | காண்க : எண்ணலர் |
எண்ணவி | நல்லெண்ணெய் . |
எண்ணாட்டிங்கள் | எட்டாம் பிறை , அட்டமிச் சந்திரன் . |
எண்ணாதகண்டன் | துணிவுள்ளவன் , அஞ்சா நெஞ்சன் ; அஞ்சவேண்டுவதற்கு அஞ்சாதவன் . |
எண்ணாதநெஞ்சன் | துணிவுள்ளவன் , அஞ்சா நெஞ்சன் ; அஞ்சவேண்டுவதற்கு அஞ்சாதவன் . |
எண்ணாதவன் | எதனையும் ஆராய்ந்து பாராதவன் ; எதனையும் பொருட்படுத்தாதவன் ; கவலையற்றவன் . |
எண்ணாப்பு | இறுமாப்பு . |
எண்ணிக்கை | எண் ; கணிப்பு ; மதிப்பு ; எச்சரிக்கை . |
எண்ணிடுதல் | கணக்கிடுதல் . |
எண்ணிடைச்சொல் | எண்ணுப் பொருளைக் காட்டும் இடைச்சொல் ; உம் , ஏ முதலியன . |
எண்ணியற்பெயர் | எண்ணாகிய இயல்புபற்றி வரும் உயர்திணைப் பெயர் . |
எண்ணியார் | எண்ணங்கொண்டவர் , நோக்கங் கொண்டவர் . |
எண்ணில்கண்ணுடையோன் | யாண்டும் நோக்குகின்ற கண்ணுடைய கடவுள் ; புத்தன் . |
எண்ணிலார் | காண்க : எண்ணலர் |
எண்ணிலி | எண்ணில் அடங்காதது , அளவற்றது . |
எண்ணிறந்த | எண்ண முடியாத . |
எண்ணுதல் | எண்ணல் , நினைத்தல் ; ஆலோசித்தல் ; மதித்தல் ; தியானித்தல் ; முடிவுசெய்தல் ; கணக்கிடுதல் ; மதிப்பிடுதல் ; துய்த்தல் . |
![]() |
![]() |
![]() |