சொல்
|
அருஞ்சொற்பொருள் |
எதிர்த்தலை | எதிர்த்தட்டு . |
எதிர்த்துத் தருதல் | ஒத்துக்கொடுத்தல் . |
எதிர்த்துப்பேசுதல் | மாறு சொல்லுதல் ; அடங்காமல் பேசுதல் . |
எதிர்தல் | தோன்றுதல் ; உண்டாதல் ; முன்னாதல் ; மலர்தல் ; மாறுபடுதல் ; சந்தித்தல் ; தம்மிற்கூடுதல் ; எதிர்காலத்து வருதல் ; எதிர்த்தல் , மலைதல் ; பொருந்துதல் ; கொடுத்தல் ; ஏற்றுக்கொள்ளுதல் ; பெறுதல் . |
எதிர்ந்தோர் | பகைவர் . |
எதிர்நடை | மூலப்படி ; மாறுபட்ட ஒழுக்கம் . |
எதிர்நடைக்கணக்கு | கூட்டாளிகளின் தனிக்கணக்கு . |
எதிர்நாள் | எதிர்நோக்கு நட்சத்திரம் . |
எதிர்நிரனிறை | முறை மாறி வரும் நிரல்நிறை . |
எதிர்நிலை | எதிர்நிற்றல் ; மாறுபட்டு நிற்றல் ; கண்ணாடி . |
எதிர்நிலையணி | உவமான உபமேயங்களை மாற்றிச் சொல்லும் அணி ; உவமானத்திற்குக் குறைவுதோன்றச் சொல்வது . |
எதிர்நிற்றல் | முன்னிற்றல் ; மாறுபட்டு நிற்றல் ; போர் செய்தல் ; எதிர்த்து நிற்றல் . |
எதிர்நீச்சு | வெள்ளப் போக்கிற்கு எதிராக நீந்துகை ; செயதற்கு அரிய செய்கை . |
எதிர்நூல் | பிறர் கொள்கையை மறுக்கும் நூல் , தன்கோள் நிறுவிப் பிறன்கோள் மறுப்பது . |
எதிர்ப்படுதல் | முன்தோன்றுதல் ; சந்தித்தல் ; ஒப்பாதல் ; நேரிடுதல் , நேரே வருதல் . |
எதிர்ப்பாடு | நேரிடுதல் , சந்திக்கை . |
எதிர்ப்பாய்ச்சல் | எதிராகப் பாய்கை ; எதிரான நீரோட்டம் . |
எதிர்ப்பு | எதிர்க்கை ; சகுனம் . |
எதிர்ப்பை | காண்க : குறியெதிர்ப்பை |
எதிர்பார்த்தல் | ஒன்றை நோக்கியிருத்தல் ; வரவு பார்த்திருத்தல் ; பிறருதவி நோக்கல் . |
எதிர்மலர் | புதிய மலர் . |
எதிர்மறுப்பு | முன்னொடுபின் முரணக் கூறுகை . |
எதிர்மறை | எதிர்மறுப்பு , உடன்பாட்டிற்கு மாறானது , முரண் . |
எதிர்மறையிடைநிலை | எதிர்மறைப் பொருளைக் காட்டும் ஆ , அல் , இல் என்னும் இடை நிலைகள் . |
எதிர்மறையிலக்கணை | தனக்கு எதிர்மறையாகிய பொருளைக் குறிப்பாலுணர்த்துவது . |
எதிர்மறையும்மை | எதிர்மறைப் பொருளில் வரும் உம் என்னும் இடைச்சொல் . |
எதிர்மறைவினை | உடன்பாட்டிற்கு மாறாக வினைச்சொல் . |
எதிர்மீன் | நீர்ப்பாய்ச்சலுக்கு எதிரே வரும் மீன் . |
எதிர்முகம் | நேரெதிர் , முன்னிலை . |
எதிர்முகவேற்றுமை | விளிவேற்றுமை . |
எண்வகை மணம் | எட்டுவகையான திருமண நிகழ்ச்சிகள் ; பிரம மணம் , பிரசாபத்திய மணம் , ஆரிட மணம் , தெய்வ மணம் , காந்தருவ மணம் , ஆசுர மணம் , இராக்கத மணம் , பைசாச மணம் . |
எண்வகை மாலை | போர்க்காலத்து அணியும் எட்டுவகை மலர்மாலை ; வெட்சி , கரந்தை , வஞ்சி , காஞ்சி , நொச்சி , உழிஞை , தும்பை , வாகை . |
எண்வகைவிடை | எண்ணிறை , எட்டுவகையான பதிலுரை ; சுட்டுவிடை , மறைவிடை , நேர்விடை , ஏவல்விடை , வினாவிடை , உற்றதுரைத்தல் விடை , உறுவது கூறல் விடை , இனமொழி விடை . |
எணம் | மதிப்பு . |
எத்தன் | ஏமாற்றுவோன் , விரகுள்ளவன் ; இதஞ்சொல்லி வஞ்சிப்போன் . |
எத்தனம் | முயற்சி ; ஆயத்தம் ; கருவி . |
எத்தனித்தல் | முயலுதல் . |
எத்தனை | அளவில் மிக்கன என ஒழிந்த பொருளை அவாவி நிற்கும் ஒரு வினாமொழி , எவ்வளவு ; பல . |
எத்தாப்பு | ஆடை ; வேட்டி . |
எத்தி | ஏமாற்றுபவள் . |
எத்து | வஞ்சகம் , உபாயம் . |
எத்து | (வி) வஞ்சி , இதஞ்சொல்லி வஞ்சி . |
எத்துக்கண்ணி | புல்லுருவி . |
எத்துணை | எவ்வளவு . |
எத்துதல் | வஞ்சித்தல் , இதஞ்சொல்லி மோசம் செய்தல் . |
எத்தும் | எத்திறத்தும் , எவ்வகையாலும் . |
எத்துவாதம் | எதிர்ப் பேச்சு ; ஏமாற்றுப் பேச்சு . |
எதளா | புளியமரம் . |
எதா | எப்படி , எவ்வாறு . |
எதாசக்தி | தன் வலிமைக்குத் தக்கபடி , கூடியவரை , இயன்றவரை . |
எதாப்பிரகாரம் | வழக்கம்போல . |
எதார்த்தம் | உண்மை . |
எதி | துறவி , சன்னியாசி . |
எதிர் | வருங்காலம் ; எதிரிடை ; முன் ; முன்னுள்ளது ; முரண் ; கைம்மாறு ; இலக்கு ; போர் . |
எதிர் | (வி) எதிர் என்னும் ஏவல் . |
எதிர்க்கட்சி | எதிரான கூட்டம் ; மறுபக்கம் . |
எதிர்க்கடை | போட்டியாயுள்ள கடை ; எதிர்ப்பு . |
எதிர்க்களித்தல் | குமட்டுதல் . |
எதிர்க்கெடுத்தல் | குமட்டுதல் , உண்ட உணவு மேலே திரும்புதல் . |
எதிருக்கெடுத்தல் | குமட்டுதல் , உண்ட உணவு மேலே திரும்புதல் . |
எதிர்க்கை | மேற்கூரையின் எதிர்மரம் ; பகைத்தல் . |
எதிர்கழறுதல் | மாறு கூறுதல் ; ஒத்தல் . |
எதிர்காலம் | வருங்காலம் , வினைச்சொல்லின் காலவகை . |
எதிர்காற்று | நோக்கிச் செல்லும் திசையிலிருந்து மாறாக வரும் காற்று ; நேர்காற்று ; எதிர்த்து அடிக்கும் காற்று . |
எதிர்கொள்ளுதல் | வந்தவர்க்கு முன்சென்று அளவளாவுதல் , வரவேற்றல் ; ஏற்றுக் கொள்ளுதல் . |
எதிர்கோள் | எதிர்கொள்ளுகை . |
எதிர்ச்சாட்சி | மாறான சான்று ; எதிர் வழக்காடியின் சாட்சி . |
எதிர்ச்சி | எதிர்க்கை . |
எதிர்ச்சீட்டு | காண்க : எதிரிடை முறி |
எதிர்ச்செட்டு | போட்டி வாணிகம் ; வாங்கி விற்கும் வாணிகம் . |
எதிர்செய்குறை | ஒருவர் செய்த உதவிக்குச் செய்யும் மாற்றுதவி , கைம்மாறு . |
எதிர்செலவு | வரவேற்க எழுந்து செல்லுதல் . |
எதிர்சோழகம் | நேர்தெற்கிலிருந்து வீசும் காற்று . |
எதிர்த்தட்டு | எதிர்ப்பக்கத்துத் தராசின் தட்டு ; எதிரிடை . |
எதிர்த்தல் | சந்தித்தல் ; மாறுபடுதல் ; தாக்குதல் ; தடுத்தல் . |
![]() |
![]() |
![]() |