சொல்
|
அருஞ்சொற்பொருள் |
ஏமந்த ருது | பனிக்காலம் ; முன்பனிப் பருவம் . |
ஏமந்தாசலம் | இமயமலை . |
ஏமபத்திரம் | மலையாத்திமரம் . |
ஏமபுட்பம் | அசோகமரம் ; செண்பகமரம் ; பொன்முல்லை . |
ஏமபுட்பி | ஆவிரை . |
ஏமம் | இன்பம் ; களிப்பு ; மயக்கம் ; காவல் ; இரவு ; பொன் ; திருநீறு ; இடுதிரை ; பாதுகாவல் ; வலிமை ; சேமநிதி . |
ஏமமணல் | பொன்மணல் . |
ஏமருதல் | திகைத்தல் ; களிப்புறுதல் ; காக்கப்படுதல் . |
ஏமல் | முதிரை ; மனக்கலக்கம் . |
ஏமவஞ்சம் | காண்க : ஏமதவஞ்சம் . |
ஏமவதி | கடுக்காய் ; வசம்பு . |
ஏமன் | யமன் . |
ஏமாங்கம் | கருடன் ; சிங்கம் ; பொன்னிறம் ; மேருமலை . |
ஏமாசலம் | மேருமலை . |
ஏமாத்தல் | அரணாதல் , பாதுகாவலாதல் ; விரும்புதல் ; இன்புறுதல் ; செருக்கடைதல் ; கலக்கமடைதல் ; உறுதிசெய்தல் . |
ஏமாந்த கொங்கை | விம்மிய முலை . |
ஏமாந்துபோதல் | ஏமாறுதல் , மோசம்போதல் ; இழப்படைதல் ; எச்சரிக்கையின்றியிருத்தல் . |
ஏமாப்பு | பாதுகாப்பு ; அரணாதல் , வலியாகுதல் ; செருக்கு ; கருத்து . |
ஏமார்த்தல் | ஏமஞ்செய்தல் , காப்புச் செய்தல் , பலப்படுத்தல் . |
ஏமார்தல் | மனங்கலங்குதல் , ஏங்கல் . |
ஏமாளி | பேதை , அறிவிலி . |
ஏமாற்றம் | எத்து , வஞ்சகம் , வஞ்சகத்துள்ளாதல் ; மனக்கலக்கம் . |
ஏமாற்றுதல் | வஞ்சித்தல் ; ஏமஞ்செய்தல் . |
ஏமாறுதல் | தடுமாறல் , அலமருதல் ; மோசம் போதல் . |
ஏமிலாந்தி | அலமந்து பார்ப்போன் , திகைத்து நிற்பவன் , மயக்கமுடையவன் , மதிகேடன் . |
ஏமிலாந்துதல் | திகைத்து நிற்றல் , மயங்கி நிற்றல் , மனந்தடுமாறுதல் , நினைவு சிதறுதல் . |
ஏமிலாப்பு | அலமலப்பு , மனத்தடுமாற்றம் . |
ஏமின்கோலா | பறவைக்கோலா என்னும் மீன் . |
ஏமுறுதல் | மகிழ்வுறுதல் , களிப்புறல் ; தன்மை திரிதல் ; வருந்துதல் , மனங்கலங்குதல் ; மயக்க முறுதல் ; பொருத்தமுறுதல் . |
ஏய்த்தல் | ஒத்தல் , உவமித்தல் ; இசையப்பண்ணுதல் , பொருந்தச் சொல்லுதல் ; வஞ்சித்தல் . |
ஏய்தல் | ஒத்தல் , பொருந்தல் , தகுதல் ; எதிர்ப்படுதல் , சந்தித்தல் |
ஏய்ப்ப | ஓர் உவமவுருபு . |
ஏய்ப்பிலேவட்டன் | மதிகேடன் . |
ஏய்ப்பு | வஞ்சகம் . |
ஏய்வு | இயைபு ; உவமை . |
ஏய | ஓர் உவமவுருபு . |
ஏயம் | தள்ளத்தக்கது . |
ஏயான் | இசையான் , ஒவ்வான் ; தொழில் செய்யத் தகாதவன் , பொருத்தமற்றவன் . |
ஏயி | மகள் . |
ஏயில் | இசை , ஒருவகைப் பாட்டு . |
ஏயே | எள்ளி நகையாடல் குறிப்பு , இகழ்ச்சிக் குறிப்பு . |
ஏர் | உழுபடை , கலப்பை ; உழவுமாடு ; உழவுத்தொழில் ; எழுச்சி ; தோற்றப்பொலிவு ; அழகு ; நன்மை ; ஒப்பு ; ஓர் உவமவுருபு . |
ஏர்க்களம் | நெற்களம் , கதிரடிக்குமிடம் . |
ஏர்க்களவுருவகம் | போர்க்களத்தை ஏர்க்களமாக உருவகப்படுத்தும் புறத்துறை . |
ஏர்க்கால் | எருது பூட்டிய நுகத்தில் கொளுவும் கலப்பையின் உறுப்பு ; வண்டியின் ஓர் உறுப்பு . |
ஏர்கட்டுதல் | உழவுமாட்டைப் பூட்டி உழத்தொடங்குதல் . |
ஏர்ச்சீர் | உழவுத் தொழிலுக்குரிய கருவிகள் ; வேளாண்மையால் வரும் செல்வச் சிறப்பு . |
ஏர்த்தாயம் | பருவகாலத்து உழவு |
ஏர்நாழி | கலப்பையின் ஓர் உறுப்பு |
ஏர்ப்ப | ஓர் உவமவுருபு . |
ஏந்திழை | அழகிய அணிகலன் . |
ஏந்து | வசதி , சௌகரியம் . |
ஏந்து | (வி) ஏந்துஎன் ஏவல் ; கையேந்து ; தாங்கு . |
ஏந்துகுழந்தை | கைக்குழந்தை . |
ஏந்துகொம்பன் | வளைந்த கொம்புடைய யானை ; நிமிர்ந்து முன்வளைந்த ; கொம்புள்ள மாடு . |
ஏந்துகொம்பு | யானைக்கொம்பு ; தாங்கு கொம்பு . |
ஏந்துதல் | கைந்நீட்டுதல் ; கையில் எடுத்தல் ; தாங்குதல் ; பூணுதல் ; மிகுதல் ; சுமத்தல் . |
ஏந்தெழில் | மிகுந்த அழகு . |
ஏப்பம் | தேக்கெறிவு , எதிரெடுத்தல் , ஏப்பமிடல் . |
ஏப்பம்விடுதல் | தேக்கெறிவு , எதிரெடுத்தல் , ஏப்பமிடல் . |
ஏப்பாடு | அம்புவிழும் எல்லை . |
ஏப்பியன் | பேதை , அறிவில்லாதவன் . |
ஏப்புழை | அம்பெய்வதற்காக மதிலில் அமைக்கப்படும் துளை . |
ஏம் | இன்பம் , மகிழ்ச்சி , களிப்பு ; மயக்கம் ; பொன் . |
ஏம்பல் | ஆரவாரம் ; மகிழ்ச்சி ; வருத்தம் . |
ஏம்பலித்தல் | மிகுந்த அவாக் கொள்ளுதல் , பேராசை கொள்ளுதல் , அங்கலாய்த்தல் . |
ஏம்புதல் | களித்தல் , மனம் கலங்குதல் , வருந்துதல் , மயக்கமடைதல் . |
ஏமகரம் | பொன் . |
ஏமகூடம் | எண்வகை மலைகளுள் ஒன்றாகிய பொன்மலை , மேருமலை . |
ஏமங்கோலா | ஒரு மீன்வகை . |
ஏமசிங்கி | மிருதாரசிங்கி என்னும் நஞ்சு . |
ஏமத்தி | பொற்றொட்டிப் பாடாணம் . |
ஏமத்தூரி | பொன்னூமத்தை . |
ஏமதவஞ்சம் | போகபூமி ஆறனுள் ஒன்று . |
ஏமந்தம் | பனி ; பனிக்காலம் ; ஏமந்த ருது . |
![]() |
![]() |
![]() |