ஏர்ப்பண் முதல் - ஏவலாள் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
ஏவல் ஏவுகை , தூண்டுகை ; கட்டளை ; ஏவல் வினைமுற்று ; ஓதுகை ; பணிவிடை ; பணியாள் ; பிசாசை ஏவிவிடுகை ; வறுமை .
ஏவல்கேட்டல் ஏவிய பணிசெய்தல் .
ஏவல்கூவல் பணி ஏவிய சிறு பணிகள் , குற்றேவல் .
ஏவல்கொள்ளுதல் வேலைவாங்குதல் , தொண்டு செய்வித்தல் .
ஏவல்விடை கேட்கும் வினாவுக்கு எதிராக மறுக்கும் வகையில் எதிர் ஏவலாய்க் கூறும் விடை ; 'சாத்தா இது செய்வாயா?' என்ற விடத்து 'நீ செய்' என்பது போன்று தரப்படும் விடை .
ஏவல்வினா ஏவும் நோக்கத்தோடு கேட்கும் வினா .
ஏவல்வினை முன்னின்றாரை ஏவும் வினை ; சூனியத் தொழில் .
ஏவலன் பணிவிடை செய்வோன் .
ஏவலாள் பணிவிடை செய்வோன் .
ஏர்மங்கலம் பொன்னேர் பூட்டிப் பாடும் மங்கலப்பாட்டு .
ஏர்வாரம் ஏருக்காகக் கொடுக்கும் விளைச்சற்பங்கு .
ஏர ஓர் உவமவுருபு .
ஏரகம் திருவேரகம் என்னும் ஊர் , சுவாமிமலை ; மலைநாட்டிலுள்ள முருகன் தலம் .
ஏரங்கம் ஒரு மீன்வகை .
ஏரடம் இடி .
ஏரடித்தல் ஏரால் உழுதல் .
ஏரண்டம் ஆமணக்கஞ்செடி ; கண்டபேரண்டம் என்னும் செடி ; இருதலைப்புள் ; சித்திரம் .
ஏரண்டி திப்பிலி .
ஏரணம் தருக்கநூல் .
ஏரம்பன் விநாயகன் , ஆனைமுகக் கடவுள் .
ஏரல் கிளிஞ்சில் ; நத்தை .
ஏரா நீராழம் ; மயக்கம் தாராத கள் ; கப்பலின் அடிப்பொருத்து மரம் .
ஏராண்மை உழவு .
ஏராப்பலகை கப்பலின் அடிமரம் .
ஏராமரம் கப்பலின் அடிமரம் .
ஏராளம் மிகுதி .
ஏராளர் உழவர்
ஏரி நீர்நிலை , பெரிய குளம் ; கொழுத்துள்ள பிடர் ; எருத்துத் திமில் .
ஏரிசா கடற்கொந்தளிப்பு .
ஏரிப்பாய்ச்சல் ஏரிநீர்ப் பாசனம் , ஏரிநீர் பாய்ந்து விளையும் நிலப்பகுதி .
ஏரிப்பாய்ச்சி மீன்பிடி வரி .
ஏரிவாரியத்தார் ஏரியை மேற்பார்வையிடும் சபையார் .
ஏருந்து எந்திரக் கலப்பை .
ஏருழவர் ஏர்கொண்டு உழுபவர் , உழவர் .
ஏரோட்டுதல் உழுதல் .
ஏரோர் உழுவோர் , உழுவர் .
ஏல் பொருத்தம் ; உணர்ச்சி , மனவெழுச்சி ; கிளிஞ்சில் ; ஒப்புக்கொளல் ; ஒரு விகுதி .
ஏல்வை காலம் ; நாள் ; பொழுது ; நீர்நிலை ; வரிவகை .
ஏல முன்னமே ; மிக .
ஏலக்காய் ஒரு மணமுடைய காய்வகை .
ஏலக்கோலம் அணியம் , ஆயத்தம் .
ஏலப்பாட்டு ஏலே ஏலேலோ' எனப் படகு வலிப்போர் பாடும் பாட்டு .
ஏலபிலி கடுகு .
ஏலம் செடிவகை ; மணப்பொருள் ; மயிர்ச்சாந்து ; சடாமாஞ்சில் ; சங்கஞ்செடி ; முதிரை ; மணம் ; போட்டியிற் பலர்முன் ஏற்றும் விலை .
ஏலரிசி ஏலக்கொட்டை , ஏலக்காயின் உள்ளீடு .
ஏலவரிசி ஏலக்கொட்டை , ஏலக்காயின் உள்ளீடு .
ஏலவாலுகை பேரேலம் .
ஏலவே ஏற்கெனவே
ஏலா தோழன் தோழியரை முன்னிலைப்படுத்தும் சொல் .
ஏலாதான் இயலாதவன் ; பகைவன் .
ஏலாதி ஏலம் , இலவங்கப்பட்டை முதலிய மருந்துச்சரக்கு ; பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று .
ஏலாதிகடுகம் ஒரு மருந்துவகை .
ஏலாதி சூரணம் ஏலம் முதலியன கலந்து செய்த மருந்துப்பொடி .
ஏலாதி மாத்திரை மருந்து மாத்திரைவகை .
ஏலாப்பு துன்பம் ; வருத்தம் .
ஏலாபத்திரம் தக்கோலம் .
ஏலாபர்ணி ஒருவகைப் பூண்டு ; பறங்கிச்சக்கை .
ஏலாமை பொருந்தாமை ; இயலாமை .
ஏலி கள் .
ஏலு சங்கஞ்செடி .
ஏலுதல் இயலுதல் ; பொருந்துதல் ; தகுதியாதல் ; கூடுதல் .
ஏலேலம் ஏலப்பாட்டில் வருமொரு சொல் , படகு முதலியன தள்ளுவோர் பாடும் பாட்டில் வரும் ஒரு சொல் .
ஏலேலோ ஏலப்பாட்டில் வருமொரு சொல் , படகு முதலியன தள்ளுவோர் பாடும் பாட்டில் வரும் ஒரு சொல் .
ஏலை ஏலம் .
ஏவங்கம் இனவழிக் கணக்கு .
ஏவங்கேட்டல் ஒருவருக்காக ஏவி விடப்பட்டுப் போய் அதட்டல் ; இடைபுகுந்து விசாரணை செய்தல் .
ஏவதும் எதுவும் ; ஒவ்வொன்றும் ; எல்லாமும் .
ஏவம் இவ்விதம் ; ஏவல் ; ஒருவருக்காக ஏவிவிடப்பட்டு வருதல் ; குற்றம் .
ஏவருகன் அதிமதுரம் .
ஏவரும் யாவரும் , எல்லாரும் .
ஏர்ப்பண் பூட்டாங்கயிறு ; ஏர்ச்சீர் .
ஏர்ப்பு ஈர்ப்பு .
ஏர்ப்பூட்டு முதலுழவு .
ஏர்பு எழுச்சி ; வனப்பு ; அழகு ; கோள்நிலை .
ஏர்பூட்டுதல் பொன்னேர் பூட்டுதல் ; ஏரில் மாட்டைக் கட்டுதல்