ஐந்தொழில் முதல் - ஐவகைச்சிறுபொழுது வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
ஐயபூமி பருமணல் .
ஐயம் சந்தேகம் ; அகப்பொருள் துறைகளுள் ஒன்று , ஐயக்காட்சி ; ஐயவணி ; இரப்போர் கலம் ; பிச்சை ; சிலேட்டுமம் ; சிறுபொழுது ; குற்றம் ; மோர் .
ஐயம்புகுதல் இரத்தல் , பிச்சையெடுத்தல் .
ஐயமறுத்தல்வினா சந்தேகம் போக்குவதற்காகக் கேட்கப்படும் கேள்வி .
ஐயர் தந்தையர் ; பார்ப்பார் ; முனிவர் ; உயர்ந்தோர் ; வானோர் ; பெருமையிற் சிறந்தோர் ; பெரியோர் ; வீரசைவர் பட்டப் பெயர் ; வேதியர் பட்டப் பெயர் ; பாதிரிமார் பட்டப் பெயர் .
ஐயவி கடுகு ; வெண்சிறு கடுகு ; ஒரு நிறை ; துலாமரம் ; கடுக்காய் ; அம்புகளின் கட்டு .
ஐயவித்துலாம் தலைதிருகு மதிற்பொறி , தலைகளைப் பிடித்துத் திருகும்படி நெருக்கும் ஒரு மதிற்பொறி .
ஐயவிலக்கு ஓர் அணி , ஐயுற்றதனை விலக்குதல் .
ஐயவினா காண்க : ஐயமறுத்தல் வினா .
ஐயவுணர்வு உறுதியில்லாத அறிவு .
ஐயவுவமை ஓர் அணி , அஃது உவமையையும் பொருளையும் ஐயுற்றுரைப்பது .
ஐயள் வியத்தற்குரிய அழகுடையவள் .
ஐயறிவுயிர் ஐம்புலன்களாலும் அறியும் உயிர் .
ஐயன் தலைவன் , மூத்தோன் ; முனிவன் ; ஆசான் ; உயர்ந்தோன் ; தந்தை ; அரசன் ; கடவுள் ; ஐயனார் ; பார்ப்பான் .
ஐயன்பாழி சாத்தன்கோயில் .
ஐயனார் அரியர புதல்வன் ; சாத்தன் ; ஐயப்பன் .
ஐயா மரியாதை விளிப்பெயர் ; தலைவன் , ஐயன் ; ஓர் இரக்கக் குறிப்புச் சொல் .
ஐயானனம் சிங்கம் ; சிங்கராசி .
ஐயிதழ் ஒரு துத்திப் பூண்டு .
ஐயுணர்வு ஐயவுணர்வு ; ஐம்புலவறிவு ; புலன்கள் வேறுபாட்டால் ஐந்தாகிய உணர்வு .
ஐயுறவு ஐயப்பாடு , சந்தேகம் .
ஐயுறுதல் சந்தேகித்தல் .
ஐயெனல் வியப்புக் குறிப்பு ; விரைவுக் குறிப்பு ; வருத்தக் குறிப்பு ; உடன்படற் குறிப்பு ; அதட்டற் குறிப்பு .
ஐயே ஐயன் என்பதன் விளி ; ஓர் ஒலிக் குறிப்பு .
ஐயை தலைவி ; காளி ; தவப்பெண் ; குருபத்தினி ; மகள் ; பார்வதி ; துர்க்கை ; இடைச்சி .
ஐயோ வியப்பிரக்கச் சொல ; துன்பக்குறிப்பு .
ஐயோன் நுண்ணியன் .
ஐராவணம் இந்திரன் யானை , கீழ்த்திசை யானை ; சிவன் யானை ; பட்டத்து யானை .
ஐராவணன் இந்திரன் .
ஐராவதம் இந்திரனுடைய யானை , கீழ்த்திசை யானை .
ஐவகைச்சயனம் ஐந்துவகைப் படுக்கைகள் : அன்னத்தூவி , இலவம் பஞ்சு , செம்பஞ்சு , மயில்தூவி , வெண்பஞ்சு ஆகியவற்றால் அமைவது .
ஐவகைச்சிறுபொழுது மாலை , யாமம் , வைகறை , காலை , நண்பகல் என்பன .
ஐந்தொழில் இறைவனின் ஐந்து தொழில்கள் : படைத்தல் , காத்தல் , அழித்தல் , மறைத்தல் , அருளல் .
ஐந்தொழிலன் ஐந்து தொழில்களையுடைய சிவன் .
ஐந்நூறு ஐந்து நூறு .
ஐப்பசி ஏழாம் மாதம் ; அசுவினி நாள் .
ஐப்பசி முழுக்கு துலாக்காவேரி முழுக்கு .
ஐம்படை பஞ்சாயுதம் , திருமால் தரிக்கும் ஐந்தாயுதங்கள் : சங்கு , சக்கரம் , வில் , வாள் , தண்டு , இவை முறையே பாஞ்ச சன்னியம் , சுதரிசனம் , சார்ங்கம் , நாந்தகம் , கௌமோதகி எனப் பெயர் பெறும் ; காண்க : ஐம்படைத்தாலி .
ஐம்படைத்தாலி கழுத்திலே பிள்ளைகள் அணியும் திருமாலின் ஐம்படை உருவமைந்த அணி .
ஐம்படைப்பருவம் ஐம்படைத்தாலி அணிவதற்குரிய குழந்தைப்பருவம் .
ஐம்பது ஓரெண் , ஐந்து பத்துக்கொண்டது .
ஐம்பால் இலக்கண நூல் கூறும் ஐந்து பகுப்பு : ஆண்பால் , பெண்பால் , பலர்பால் , ஒன்றன்பால் , பலவின்பால் ; பெண் கூந்தல் , காண்க : ஐங்கூந்தல் .
ஐம்பால்முடி காண்க : ஐங்கூந்தல் .
ஐம்புலத்தவர் தென்புலத்தாராம் பிதிரர் , தெய்வம் , விருந்து , சுற்றத்தவர் , தான் .
ஐம்புலம் ஐந்து பொறிகளுக்குரிய உணர்ச்சிகள் : சுவை , ஒளி , ஊறு , ஓசை , நாற்றம் .
ஐம்புலன் ஐந்து பொறிகளுக்குரிய உணர்ச்சிகள் : சுவை , ஒளி , ஊறு , ஓசை , நாற்றம் .
ஐம்புலம்வென்றோன் ஐம்புல உணர்ச்சிகட்கு ஆட்படாத முனிவன் ; அருகன் .
ஐம்பூதம் ஐந்து மூலப்பொள்கள் : நிலம் , நீர் , தீ , வளி , வான் .
ஐம்பெருங்காப்பியம் சிலப்பதிகாரம் , மணிமேகலை , சீவகசிந்தாமணி , வளையாபதி , குண்டலகேசி .
ஐம்பெருங்குழு அரசர்க்குரிய ஐந்து கூட்டத்தார் ; அமைச்சர் , புரோகிதர் , படைத்தலைவர் , தூதுவர் , சாரணர் .
ஐம்பெரும்பாதகம் பஞ்சமாபாதகம் : பொய் , கொலை , களவு , கள்ளூண் , குருநிந்தை .
ஐம்பெரும்பூதம் காண்க : ஐம்பூதம் .
ஐம்பெருவேள்வி காண்க : ஐவகை கேள்வி .
ஐம்பொறி ஐந்துவகை முக்கிய இந்திரியங்கள் ; மெய் , வாய் , கண் , மூக்கு , செவி .
ஐம்பொன் ஐந்துவகை முக்கிய மாழைகள் : பொன் , வெள்ளி , செம்பு , இரும்பு , ஈயம் .
ஐம்மீன் அத்த நாள் ; உரோகிணி .
ஐம்முகம் சிவனது ஐந்து முகங்கள் : ஈசானம் , தற்புருடம் , அகோரம் , வாமதேவம் , சத்தியோசாதம் .
ஐம்முகன் ஐந்து முகங்களையுடைய சிவன் .
ஐம்முகி ஆமணக்கு .
ஐம்மை தகட்டு வடிவம் ; நொய்ம்மை ; நெருக்கம் .
ஐமவதி பார்வதி .
ஐமிச்சம் ஐயம் கலந்த அச்சம் .
ஐய வியக்கத்தக்க ; நொய்ய ; அழகிய ; நுண்ணிய ; இரக்கக் குறிப்பு ; வியப்புக் குறிப்பு ; விளிச்சொல் .
ஐயக்கடிஞை பிச்சை வாங்கும் கலம் , பிச்சைப் பாத்திரம் .
ஐயக்கணச்சூலை சூலைநோய்வகை .
ஐயக்காட்சி தோன்றின ஒரு பொருளை அதுவோ இதுவோ என்று இரண்டுறக் கருதுகை .
ஐயகோ ஐயோ ; இரக்கக் குறிப்பு ; அவலக் குறிப்பு .
ஐயங்கவீனம் வெண்ணெய் .
ஐயங்கன் பேய் , ஒரு பெண்பேய் .
ஐயங்காய்ச்சி பேய் , ஒரு பெண்பேய் .
ஐயங்கார் வைணவப் பார்ப்பனர் பட்டப்பெயர் .
ஐயஞ்சு நிலப்பனை , நிலப்பனங்கிழங்கு : இருபத்தைந்து .
ஐயநாடி சிலேட்டும நாடி .
ஐயப்படுதல் சந்தேகப்படுதல் .
ஐயப்பாடு ஐயம் , சந்தேகம் .