சொல்
|
அருஞ்சொற்பொருள் |
ஒய்தல் | இழுத்தல் ; செலுத்துதல் ; போக்குதல் ; கொடுத்தல் ; தப்புதல் ; விட்டொதுங்குதல் . |
ஒய்யல் | செலுத்துதல் ; கொடுத்தல் ; உயர்ச்சி . |
ஒய்யாரக்காண் | ஆடம்பரம் உள்ளவன் . |
ஒய்யாரம் | ஒயில் ; பகட்டு ; உல்லாச நிலை ; அலங்காரம் . |
ஒய்யென | விரைவாக ; கடுக ; மெல்ல . |
ஒயில் | ஒய்யாரம் ; சாயல் ; அலங்காரம ; உல்லாச நிலை ; ஒருவகைக் கூத்து . |
ஒயில்வண்டி | இன்பப் பயணத்திற்கு ஏற்ற வண்டி , இன்பச் செலவூர்தி . |
ஒயிற்கும்மி | ஒயிலாட்டத்தில் பாடும் பாட்டு . |
ஒரணை | ஓரிணை , இரட்டை . |
ஒராங்கு | ஓராங்கு ; ஒருசேர ; ஒருபுடை ; ஒருபடியாக . |
ஒரால் | ஒருவுகை , நீங்குகை . |
ஒரானொரு | ஏதோவொன்று . |
ஒரித்தல் | ஒற்றுமையாயிருத்தல் ; விருப்பமாய் இருத்தல் . |
ஒரு | ஒன்று என்பதன் திரிபு ; ஒற்றை ; ஒப்பற்ற ; ஆடு ; அழிஞ்சில் . |
ஒருக்க | எப்பொழுதும் ; ஒவ்வொன்றுக்கும் . |
ஒருக்கடுத்தல் | ஒருநிகராகக் கருதுதல் ; ஒப்பாக நினைத்தல் |
ஒருக்கணித்தல் | ஒருச்சாய்தல் ; ஒரு பக்கமாய்ச்சாய்தல் . |
ஒருக்கம் | மனவொடுக்கம் ; ஒருதன்மை ; ஒற்றுமை . |
ஒருக்கல் | ஒருப்படுதல் ; ஒற்றுமை செய்தல் ; அழித்தல் ; ஓர் அபசுரம் . |
ஒருக்களித்தல் | காண்க : ஒருக்கணித்தல் . |
ஒருக்குதல் | ஒன்றுசேர்த்தல் ; ஒருப்படுத்தல் ; அடக்குதல் ; அழித்தல் . |
ஒருகட்பகுவாய் | பதலை என்னும் பறைவகை . |
ஒருகட்பறை | பதலை என்னும் பறைவகை . |
ஒருகண்ணுக்குறங்கல் | ஒருசிறிது உறங்கல் . |
ஒருகால் | ஒருமுறை ; ஒருவேளை ; சிலவேளை ; ஒற்றைக்கால் . |
ஒருகாலில் நிற்றல் | உறுதியாயிருத்தல் . |
ஒருகாலிலி | குபேரன் ; சனி |
ஒருகாலும் | எந்தக் காலத்திலும் . |
ஒருகிடை | கிடந்த கிடை , படுத்த படுக்கை ; ஒரு பக்கமாய் சாய்ந்து படுக்கை |
ஒருகுடி | தாயத்தார் . |
ஒருகுழையவன் | பலராமன் |
ஒருகுறி | ஒருமுறை |
ஒருகூட்டு | ஒருசேர்க்கை , ஒருசேர்மானம் , ஒன்றிப்பு . |
ஒருகை | ஒரு கட்சி ; ஒரு பக்கம் ; ஒற்றுமைப்பட்ட குழு . |
ஒருகை பார்த்தல் | வெல்ல முயலுதல் . |
ஒருகையாயிருத்தல் | எதிர்க்கட்சிக்குப் பகைமையாய் ஒன்றுபட்டிருத்தல் . |
ஒருகோலுடையார் | ஒரு கோலை ஏந்திய துறவியார் . |
ஒருங்கியல் அணி | புணர்நிலையணி ; வினை , பண்பு என்பவை காரணமாக இரு பொருளுக்கு முடிக்கும் சொல் ஒன்றாகப் புணர்ந்து நிற்கச் சொல்லும் அணி |
ஒருங்கு | முழுமை ; முழுதும் ; எல்லாம் ; எல்லாங்கூடி நிற்கை ; அடக்கம் ; ஒரு காலத்தில் ; ஒருசேர ; ஒருதன்மை ; அழிவு . |
ஒருங்குதல் | ஒருபடியாதல் ; ஒன்றுகூடுதல் ; ஒருவழிப்படல் ; ஒதுங்குதல் ; ஒடுங்குதல் ; அழிதல் . |
ஒருங்கே | முழுதும் ; ஒருசேர . |
ஒருச்சரித்தல் | ஒரு பக்கமாய்ச் சாய்த்தல் ; ஒரு பக்கமாய்ச் சாய்தல் . |
ஒருச்சாய்த்தல் | ஒரு பக்கமாய்ச் சாய்த்தல் ; ஒரு பக்கமாய்ச் சாயப்பண்ணல் . |
ஒருசந்தி | ஒருவேளை ; ஒரு பொழுதுண்ணல் , ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டும் உணவு கொள்ளும் வழக்கம் . |
ஒருசாய்வு | ஒருபக்கம் ; ஒருமிக்க ; இடைவிடாமை . |
ஒருசாயல் | உரு ஒப்பு , வடிவால் ஒத்திருத்தல் . |
ஒருசார் | ஒரு பக்கம் , பட்சபாதம் ; ஒரு கட்சி |
ஒப்பாரியிடுதல் | செத்தாரை நினைத்துப் புலம்பி அழுதல் . |
ஒப்பாரிவைத்தல் | செத்தாரை நினைத்துப் புலம்பி அழுதல் . |
ஒப்பான் | ஒத்த இயல்புடையவன் . |
ஒப்பிடுதல் | உவமித்தல் ; ஒத்துப் பார்த்தல் |
ஒப்பித்தல் | உவமித்தல் ; ஒப்படைத்தல் ; ஒப்பனைசெய்தல் ; ஒத்துக்கொள்ளச்செய்தல் ; ஏற்கச்செய்தல் ; பகிர்ந்துகொடுத்தல் ; மனப்பாடம் செய்து கூறுதல் |
ஒப்பிதம் | பொருத்தம் ; இணக்கம் ; இசைவு ; சமம் ; சம்மதம் ; வழுவின்மை ; ஒவ்வுதல் ; சம்மதித்தல் . |
ஒப்பில்போலி | ஒப்புமைப் பொருளைத் தாராத போல் என்னும் உவமச்சொல் |
ஒப்பின்முடித்தல் | ஒன்றனது இலக்கணத்தை அதுபோன்ற வேறொன்றற்கும் முடிவு செய்தலாகிய உத்தி |
ஒப்பின்மை | நிகரின்மை ; வேறுபாடு . |
ஒப்பு | பொருத்தம் ; ஒருதன்மை ; ஒப்புமை ; உவமை ; தகுதி ; சமம் ; இசைவு ; அழகு ; கவனம் ; ஒப்பாரி ; சாயல் ; உடன்படுகை . |
ஒப்புக்கழுதல் | போலியாக அழுதல் ; மனமின்றிச் செய்தல் . |
ஒப்புக்கு | மனத்தோடு பொருந்தாமல் , போலியாக . |
ஒப்புக்கொடுத்தல் | ஏற்பித்தல் ; ஒப்புவித்தல் . |
ஒப்புக்கொப்பாரம் | விருந்தினரைப் போற்றுதல் . |
ஒப்புக்கொள்ளுதல் | ஏற்றுக்கொள்ளுதல் ; ஒத்துக்கொள்ளுதல் ; மனத்துக்குப் பிடித்தல் . |
ஒப்புதல் | சம்மதித்தல் ; உடன்படல் . |
ஒப்புப்பொருவு | உவமப்பொரு ; ஒன்றை ஒப்பாகக் கூறும் உவமை . |
ஒப்புமுறி | ஒப்புக்கொண்டதைக் குறிக்கும் சீட்டு . |
ஒப்புமை | சமானம் ; உவமானம் ; ஒத்திருத்தல் . |
ஒப்புமைக் கூட்டம் | புகழ்தலிலும் இகழ்தலிலும் ஒன்றை அதனினும் மிக்க வேறொன்றோடு உவமிக்கும் ஓர் அணி . |
ஒப்புமொழி | உடன்படிக்கை . |
ஒப்புரவறிதல் | உலக நடையினை அறிந்து ஒழுகல் ; உலக ஒழுக்கத்தை உணர்ந்து நடத்தல் . |
ஒப்புரவு | உலகநடை , உலகவொழுக்கம் ; முறைமை ; ஒற்றுமை ; உதவிசெய்தல் ; சமம் ; சமாதானம் . |
ஒப்புவித்தல் | ஒப்புக்கொடுத்தல் ; ஏற்கும்படி சேர்த்தல் ; மெய்ப்பித்தல் சான்று காட்டுதல் ; கடன் காட்டுதல் ; பாடம் ஒப்புவித்தல் . |
ஒம்மல் | ஓமல் ; பேச்சுப் பரத்தல் ; ஊர்ப்பேச்சு . |
ஒம்மெனல் | ஓர் ஒலிக்குறிப்பு . |
ஒமை | மாமரம் |
ஒய் | யானையைப் பாகர் வையும் ஆரிய மொழி . |
![]() |
![]() |
![]() |