சொல்
|
அருஞ்சொற்பொருள் |
ஒருபோக்காய்ப்போதல் | திரும்பிவாராது போதல் . |
ஒருபோக்கு | ஒருவிதம் , ஒருமாதிரி ; மாறானநடை . |
ஒருபோகு | ஒருபடித்தான நிலம் ; கொச்சகக் கலிப்பாவினுள் ஒன்று ; ஒத்தாழிசைக் கலிவகையுள் ஒன்று . |
ஒருபோது | ஒருவேளை , ஒருபொழுது ; ஒரு சமயம் ; ஒருமுறை உண்டு நோன்பிருக்குங்காலம் . |
ஒருமட்டம் | ஒத்த அளவு ; ஒருவாறு ; ஒரேசரி . |
ஒருமட்டு | ஒத்த அளவு ; ஒருவாறு ; ஒரேசரி . |
ஒருமடைசெய்தல் | ஒருமுகமாக்குதல் . |
ஒருமனப்படுதல் | ஐம்புலனடக்கல் , மனத்தை ஒரு வழிப்படுத்துதல் , ஓர் எண்ணமாதல் , மனவடக்கம் . |
ஒருமனப்பாடு | மனவிணக்கம் ; மனத்தை ஒன்றிற் செலுத்துகை ; மனவடக்கம் . |
ஒருமா | இருபதில் ஒரு பங்கு . |
ஒருமாதிரி | ஒருவிதம் ; தனிப் போக்கு . |
ஒருமாரை | ஒரு மா அரை , ஒரு மாவும் அரை மாவும் சேர்ந்த இலக்கம் |
ஒருமிக்க | ஒருசேர , ஏகமாய் . |
ஒருமித்தல் | ஒன்றுசேர்தல் ; உடன்படல் , ஒருமைப்படல் . |
ஒருமிப்பு | ஒன்றிப்பு , ஒற்றுமைப்படுகை இசைவு ; மனத்தை ஒன்றிற் செலுத்துகை . |
ஒருமுகம் | நேர்வழி ; ஒற்றுமை ; ஒருபுறம் ; ஒரு கூட்டம் ; ஒரு கட்சி . |
ஒருமுகமாய்ப்பேசுதல் | ஒரு மிக்கப் பேசுதல் ; எல்லாரும் ஒரேபடித்தாய்ப் பேசுதல் . |
ஒருமுகவெழினி | ஒருவகைத் திரை . |
ஒருமுற்றிரட்டை | ஓரடி முற்றெதுகையாய் வருவது . |
ஒருமை | ஒரே தன்மை ; ஒற்றுமை ; தனிமை ; ஒப்பற்ற தன்மை ; மனமொருமிக்கை ; ஒருமையெண் ; மெய்ம்மை ; ஒரு பிறப்பு ; இறையுணர்வு ; வீடுபேறு . |
ஒருமைப்படுதல் | ஒற்றுமைப்படல் ; மனம் ஒரு முகப்படுதல் ; உடன்படல் . |
ஒருமைப்பாடு | ஒற்றுமைப்படுகை ; மனத்தை ஒரு வழிப்படுத்துதல் ; ஒற்றுமை உணர்வு ; ஒன்றிப்பு . |
ஒருமை பன்மை மயக்கம் | தொடருள் ஒருமை பன்மைகள் ஒன்றற்கொன்று மாறி வழங்குகை . |
ஒருமை மகளிர் | பிற ஆடவர்பால் செல்லாத மனமுடைய மாதர் ; கற்புடைய மாதர் . |
ஒருமொழி | ஆணை ; பல சொற்களாய்ப் பிரிக்கமுடியாத சொல் ; ஒரு பொருளைத் தரும் ஒரு சொல் . |
ஒருசாலைமாணாக்கர் | ஒரே பள்ளியிற் பயின்ற மாணாக்கர் . |
ஒருசிறிது | மிகச் சிறிது , அற்பம் . |
ஒருசிறை | ஒரு பக்கம் ; ஒரு பகுதி ; ஒதுக்கிடம் ; வேறிடம் . |
ஒருசிறைநிலை | சொல்லப்பட்ட பொருள் ஒரு வழி நிற்க பாடல் அமைந்துள்ள முறை . |
ஒருசீரானவன் | ஒரே தன்மையாக இருப்பவன் . |
ஒருசேர | ஒருமிக்க . |
ஒருசொல் | உறுதிச்சொல் ; பல சொல்லாயிருந்தும் ஒரு சொல் நீர்மைப்பட்டது |
ஒருசொல் வாசகன் | சொன்னசொல் தவறாதவன் . |
ஒருசொன்னீர்மை | சொற்கள் இணைந்து ஒரு பொருளே தருந்தன்மை |
ஒருத்தல் | ஆண்விலங்கு ; யானை , எருமை , கவரி , புலி , புல்வாய் , மரை , மான் , இவற்றின் ஆண் |
ஒருத்தன் | ஒருவன் ; ஒப்பற்றவன் . |
ஒருத்தி | ஒரு பெண் . |
ஒருத்து | மனவொருமைப்பாடு . |
ஒருதரம் | ஒருமுறை , ஒரு தடவை ; ஒரேவிதம் |
ஒருதலை | இன்றியமையாமை ; கட்டாயம் ; நிச்சயம் ; ஓரிடம் ; ஒருசார்பு ; ஒரு பக்கம் . |
ஒருதலைக் காமம் | ஒரு பக்கமான காதல் , ஆண் பெண் இருவருள் ஒருவர் மட்டுங் கொள்ளுங் காதல் . |
ஒருதலை துணிதல் | ஒன்றுக்கொன்று மாறுபாடான இரண்டு கொள்கைகளில் ஒன்றை ஏற்றலாகிய உத்தி . |
ஒருதலை நோவு | ஒற்றைத் தலைவலி . |
ஒருதலைப்படுதல் | ஒரு முடிவுபெறுதல் . |
ஒருதலையுள்ளுதல் | அவத்தை பத்தனுள் ஒன்றாகிய இடைவிடா நினைவு . |
ஒருதலை வழக்கு | ஒரு பக்கத்தைப்பற்றிய நியாயம் , பட்சபாதமான தீர்ப்பு . |
ஒருதன்மை | ஒருவிதம் ; ஒப்பற்ற தன்மை ; மாறாத்தன்மை ; மாறாமை . |
ஒருதனி | ஒப்பில்லாத தனி ; தன்னந்தனி . |
ஒருதாரை | ஒரேநிலை ; ஒருமிக்க ; இடையீடில்லாத நீரொழுக்கு ; ஒருபக்கக் கூர்மை . |
ஒருதிறம்பற்றுதல் | ஒருபக்கமாக இருத்தல் . |
ஒருநாயகம் | ஒரு ஆட்சி , தனி ஆட்சி . |
ஒருநாளைக்கொருநாள் | நாள் செல்லச் செல்ல . |
ஒருநெறிப்படுதல் | ஒரு வழிப்படுதல் . |
ஒருப்படுத்துதல் | ஒன்றுகூட்டுதல் ; வழிவிடுதல் ; முடிவுசெய்தல் ; உடன்படச்செய்தல் . |
ஒருப்படுதல் | ஒருதன்மையாதல் ; ஒன்றுகூடுதல் ; துணிதல் ; முயலுதல் ; பிறர் கருத்துக்கு உடன்படுதல் ; நட்புக்கொள்ளுதல் . |
ஒருப்பாடு | ஒருமைப்படுகை ; ஒருதன்மையாதல் ; மனமொன்றுபடுகை ; முயற்சி ; மனத்திண்மை ; ஒன்றிநிற்கை ; உடன்பாடு . |
ஒருபடம் | இடுதிரை , படுதா , மறைப்பு . |
ஒருபடி | ஒருவகை , ஒருவாறு ,ஒருவிதம் . |
ஒருபடித்தாய் | ஒரேவிதமாய் ; பிரயாசமாய் ; இருக்கவேண்டிய நிலைக்குச் சிறிது மாறுதலாய் . |
ஒருபது | பத்து . |
ஒருபாட்டம் | ஒருதடவை ; ஒருபாறல் மழை , ஒருமுறை பெய்யும் மழை . |
ஒருபான் | காண்க : ஒருபது . |
ஒருபிடி | கைப்பிடி யளவு ; ஒருகை யளவு ; ஒரே பற்று ; விடாப்பிடி , உறுதிப்பிடி ; உறுதி ; பிடிவாதம் . |
ஒருபுடை | ஏகதேசம் ; ஒருபக்கமாய் . |
ஒருபுடையுவமை | முழுவதும் ஒப்பாகாமல் சில தன்மையில் மட்டும் ஒத்திருக்கும் உவமை . |
ஒருபுடையொப்புமை | முழுவதும் ஒப்பாகாமல் சில தன்மையில் மட்டும் ஒத்திருக்கும் உவமை . |
ஒரு பூ | ஒருபோகம் . |
ஒருபொருட்கிளவி | ஒரு பொருளைத் தரும் பல சொற்கள் ,பரியாயச் சொற்கள் . |
ஒருபொருட்பன்மொழி | ஒரு பொருளைத் தரும் பல சொற்கள் , மீமிசைச் சொல் . |
ஒருபொருள் | ஒரே கருத்து ; உண்மை ; கடவுள் . |
ஒருபொழுது | ஒரு காலம் ; ஒரு சந்தி . |
ஒருபோக்கன் | தனிப் போக்குடையவன் , வேறுபட்ட நடையுள்ளவன் . |
ஒருசாராசிரியர் | ஆசிரியருள் ஒரு கொள்கையினர் . |
ஒருசாரார் | ஒரு புடையார் , ஒருபக்கத்தவர் ; சிலர் . |
ஒருசாலுழுதல் | ஒரு முறை உழுதல் . |
![]() |
![]() |
![]() |