காட்டகத்தமிர்து முதல் - காட்டெருமை வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
காட்டுள்ளி நரிவெங்காயம் .
காட்டெருமை எருமையினம் ; எருக்கு ; திருகுகள்ளி ; சதுரக்கள்ளி ; கூவை .
காட்டான் நாகரிகமில்லாதவன் , அயலான் ; காட்டுப் பசு .
காட்டி பன்றி .
காட்டிக்கொடுத்தல் கற்றுக்கொடுத்தல் ; குற்றத்தை வெளிப்படுத்தல் ; தன் பக்கத்தானை எதிரிக்குக் காட்டிக்கொடுத்தல் .
காட்டிமறைத்தல் எளிதிற் கிடைப்பதுபோல் தோற்றுவித்து ஏமாறச் செய்தல் ; தடுத்து ஆட்கொள்ளுதல் .
காட்டில் காண்க : காட்டிலும் .
காட்டிலம் வாழை .
காட்டிலமிர்து காண்க : காட்டகத்தமிர்து .
காட்டிலவு கோங்கிலவுமரம் ; பேயிலவுமரம் .
காட்டிலும் உடன் ; உறழ்ச்சிப் பொருள் குறிக்கும் ஓர் இடைச்சொல் .
காட்டிலுமிழி நாகரவண்டு .
காட்டிலேபோதல் வீணாய்க் கழிதல் .
காட்டீஞ்சு ஈச்சமரம் .
காட்டீந்து ஈச்சமரம் .
காட்டீருள்ளி நரிவெங்காயம் .
காட்டு காண்பித்தல் ; எடுத்துக்காட்டு ; ஒளி ; துணைக்கருவி ; உறைப்பு ; குப்பை .
காட்டுக்கட்டை பலவித மரங்களின் விறகு .
காட்டுக்கருணை ஒருவகைப் பூடு ; சேனைக் கிழங்குவகை .
காட்டுக்கல் ஒருவகை முருட்டுக்கல் .
காட்டுக்காய்ச்சுரை சுரைவகை ; புளிச்சை வகை , முட்புளிச்சை .
காட்டுக்கிராம்பு நீர்க்கிராம்பு .
காட்டுக்கிரியை ஈமச்சடங்கு .
காட்டுக்கீரை காட்டில் கிடைக்கும் பலவகைக் கீரை .
காட்டுக்கொடி கசப்புள்ள ஒருவகைக் கொடி ; நன்னாரிவகை .
காட்டுக்கொள் கருங்காணம் ; காலியாந்துவரை .
காட்டுக்கோழி சம்பங்கோழி ; கற்கவுதாரி .
காட்டுத்தம்பட்டன் வாளவரைக் கொடிவகை .
காட்டுத்தனம் முருட்டுத்தனம் .
காட்டுத் தீ காட்டில் பற்றிய பெருந்தீ .
காட்டுதல் காண்பித்தல் ; அறிவித்தல் ; மெய்ப்பித்தல் ; நினைப்பூட்டுதல் ; படையல் ; உண்டாக்குதல் ; அறிமுகஞ் செய்தல் ; வெளிப்படுத்துதல் .
காட்டுப்பச்சிலை பலவகைச் செடிகொடிகளின் இலைகள் ; மரவகை .
காட்டுப்படை காடுவாழ் இனத்தினின்று திரட்டப்பட்ட சேனை .
காட்டுப்பயிர் தானே விளையும் பயிர் , புன்செய்ப் பயிர் .
காட்டுப்பன்றி பன்றி இனம் .
காட்டுப்பாதை காட்டிற் செல்லும் வழி ; நாட்டுப்புறத்து வழி .
காட்டுப்பிள்ளை திக்கற்ற குழந்தை .
காட்டுப் பீ குழந்தை பிறந்தவுடன் கழிக்கும் மலம் .
காட்டுப்புத்தி மூடவறிவு .
காட்டுப்பூவரசு ஒருவகைப் பூவரசமரம் .
காட்டுப்பூனை பூனையில் ஓர் இனம் .
காட்டுப்பெண்சாதி வைப்பாட்டி .
காட்டுமயிலம் காட்டுநொச்சி .
காட்டுமரம் தாழ்ந்தவின மரக்கட்டை ; காட்டில் உள்ள மரம் .
காட்டுமல்லி நீண்ட மரமல்லி .
காட்டுமழை நாட்டில் வெள்ளம் பெருகும்படி மலைக்காட்டிற் பெய்யும் மழை .
காட்டுமனிதன் நாகரிகமற்றவன் ; வாலில்லாக்குரங்கு .
காட்டுமா சாரம் ; மரவகை ; புளிமா ; உதளை ; காட்டுவிலங்கு .
காட்டுமிராண்டி விலங்காண்டி , நாகரிகமற்றவன் , முரடன் ; காட்டில் வாழ்வோன் .
காட்டுமிருகம் வனவிலங்கு ; கானக்குதிரை .
காட்டுமிருகாண்டி காண்க : காட்டுமிராண்டி .
காட்டுமுருங்கை மாவிலங்கைமரம் ; ஆடாதோடை ; காட்டுமுருக்கு ; மரவகை .
காட்டுரோகம் மாட்டுநோய்வகை .
காட்டுவாரி காட்டாறு .
காட்டுவெள்வெங்காயம் காண்க : காட்டுள்ளி .
காட்டுவெள்ளரி பேய்க்கொம்மட்டி .
காட்டகத்தமிர்து காட்டில் உண்டாகும் பொருள்களாகிய அரக்கு , உலண்டு , தேன் , மயிற்பீலி , நாவி என்பன .
காட்டகத்தி வீழிச்செடி .
காட்டணம் பெருங்குமிழ் .
காட்டத்தி பேயத்திமரம் , மரவகை .
காட்டப்பெறுதல் உரிமைகொண்டாடுதல் .
காட்டம் விறகு ; சிறுகோல் ; வெண்கலம் ; சினம் ; உறைப்பு ; மிகுதி .
காட்டரண் நால்வகை அரண்களுள் காடாகிய அரண் .
காட்டலரி அலரிவகை ; நச்சுப்பாலுள்ள மரம் ; பாலைவகை .
காட்டவீணை வீணை .
காட்டவுரி அவுரிவகை ; புனல்முருங்கை .
காட்டழல் காட்டுத் தீ .
காட்டா காட்டுப் பசு .
காட்டாக்கி கட்டையைக் கடைந்துண்டாக்கும் நெருப்பு .
காட்டாடு விலங்குவகை .
காட்டாத்தி திருவாத்தி .
காட்டாமணக்கு ஆமணக்குவகை , பேயாமணக்கு .
காட்டாள் நாகரிகமில்லாதவன் , முரடன் .
காட்டாளத்தி இசையின் ஆலாபனவகை .
காட்டாறு வெள்ளத்தால் திடீரெனப் பெருகும் சிற்றாறு ; காட்டிலோடுஞ் சிற்றாறு .