காட்டெலுமிச்சை முதல் - காண்டீவம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
காடுவெட்டி மரம் வெட்டுபவன் ; நாகரிகம் அற்றவன் ; சிறு மண்வெட்டி ; பல்லவர்களின் பட்டப்பெயர் ; கள்ளர்களின் பட்டப்பெயருள் ஒன்று .
காடேறுதல் காட்டிற்கு ஓடுதல் ; இறக்குந் தறுவாயில் நோய்த்தெளிவு உண்டாதல் .
காடை ஒரு பறவை , குறும்பூழ் .
காடைக்கண்ணி காடையின் கண்போன்ற தினைவகை .
காடையிறகு நாடகம் நடிப்போர் தலையில் அணியும் பலநிறமுள்ள இறகு .
காண் காட்சி ; அழகு ; காணுதல் ; முன்னிலையில் வரும் ஒர் உரையசை .
காண்கை அறிவு .
காண்டகம் காடு ; நோய் ; கமண்டலம் ; நிலவேம்பு .
காண்டம் நூலின் பெரும்பிரிவு ; மலை ; எல்லை ; காடு ; நீர் ; அம்பு ; கோல் ; குதிரை ; அடிமரம் ; ஆயுதம் ; முடிவு ; சமயம் ; திரள் ; அணிகலச்செப்பு ; கமண்டலம் ; நிலவேம்பு ; திரைச்சீலை ; ஆடை ; சீந்நில் ; புத்தி .
காண்டமந்திரம் குதிரைகளை வானில் பறக்கச்செய்யும் மந்திரம் .
காண்டல் கண்ணுக்கு நேராகப் பார்த்து அறிகை .
காண்டலளவை கண்ணுக்கு நேராகப் பார்த்து அறிகை .
காண்டவதகனன் காண்டவ வனத்தை எரித்த அருச்சுனன் .
காண்டவம் காண்க : காண்டாவனம் .
காண்டவன் இந்திரன் .
காண்டாதிகிருதம் நிலவேம்பு முதலியவற்றால் ஆன நெய் வடிவாயுள்ள ஒரு கூட்டுமருந்து
காண்டாமிருகம் ஒரு விலங்கு , கல்யானை .
காண்டாமிருகரத்தம் வேங்கைமரம் ; பெருமரவகை ; பிரம்புவகை ; பிசின்வகை .
காண்டாவனம் இந்திரனுக்குப் பிரியமான வனம் .
காண்டாவனன் இந்திரன் .
காண்டிகை கருத்து , சொற்பொருள் , எடுத்துக்காட்டு அடங்கிய உரை . இம் மூன்றோடு வினாவும் விடையுமாய் ஐந்து கூறாயும் அமையும் உரை , சூத்திரப் பொருளைச் சுருங்க உரைக்கும் உரைவகை .
காண்டியம் சரகாண்ட பாடாணம் ; வெக்கை .
காண்டிபம் அருச்சுனன் வில் ; தனுராசி .
காண்டிவம் அருச்சுனன் வில் ; தனுராசி .
காண்டீபம் அருச்சுனன் வில் ; தனுராசி .
காண்டீவம் அருச்சுனன் வில் ; தனுராசி .
காட்டெலுமிச்சை காட்டுநாரத்தை ; காட்டுக்கொழுஞ்சி ; நாய்விளா ; மலைநாரத்தை .
காட்டேறி கேடு விளைக்கும் ஒரு தேவதை .
காட்டை திசை ; எல்லை ; 64 கணங்கொண்ட காலநுட்பம் ; நுனி .
காட்பு வைரம் .
காடகம் ஆடை .
காடபந்தம் தீவட்டி .
காடமர்செல்வி கொற்றவை , துர்க்கை .
காடர் காடுவாழ் சாதியார் , ஆனைமலையில் வாழும் ஒரு சாதியார் .
காடவன் பல்லவர்களின் சிறப்புப் பெயர் .
காடவிளக்கு பெருவிளக்கு .
காடன் மீன்வகை .
காடாக்கினி பெருநெருப்பு , பெருந் தீ .
காடாந்தகாரம் பேரிருள் .
காடாரம்பம் நீர்ப்பாசனமில்லாத பகுதி .
காடாரம்பற்று காட்டுப்புறம் .
காடாவிளக்கு காண்க : காடவிளக்கு .
காடாற்று பால்தெளிப்பு , சஞ்சயனம் .
காடாற்றுதல் பிணம் சுட்ட மறுநாள் எலும்பு திரட்டிப் பால் தெளித்தல் .
காடி புளித்த கஞ்சி ; புளித்த கள் ; சோறு ; கஞ்சி ; புளித்த பழரசம் ; ஊறுகாய் ; ஒருவகை வண்டி ; ஒரு மருந்து ; கழுத்து ; நெய் ; அகழி ; கோட்டையடுப்பு ; மாட்டுக்கொட்டில் ; மரவேலையின் பொளிவாய் .
காடிக்காரம் நெருப்புக்கல் .
காடிகம் சீலை .
காடிச்சால் காடி வைக்குஞ் சால் ; மரவேலையின் பொளிவாய் .
காடிச்சால்மூலை வேள்விச்சாலையில் காடி வைக்கப்படும் வடகிழக்குத் திசை .
காடியடுப்பு கோட்டடுப்பு , கோட்டையடுப்பு .
காடியுளி இழைப்புளிவகை .
காடிவெட்டுதல் பள்ளந்தோண்டுதல் .
காடினியம் வன்மை , கடினத்தன்மை .
காடு வனம் ; மிகுதி ; நெருக்கம் ; செத்தை ; எல்லை ; நான்கு அணைப்புள்ள ஒரு நிலவளவு ; சுடுகாடு ; இடம் ; புன்செய்நிலம் ; சிற்றூர் ; ஒரு தொழிற்பெயர் விகுதி .
காடுகட்டுதல் விலங்கு பறவைகளைக் குறித்த இடத்தில் வாராமல் தடைசெய்தல் .
காடுகலைத்தல் வேட்டைக்காரர் விலங்குகளைக் கலைத்தல் ; வேலைக்காரரை அச்சுறுத்தல் .
காடுகாட்டுதல் ஏமாற்றுதல் .
காடுகாள் கொற்றவை , துர்க்கை .
காடுகிழவோள் கொற்றவை , துர்க்கை .
காடுகிழாள் கொற்றவை , துர்க்கை .
காடுகிழான்வெயில் சூரியன் மறையுங்கால் தோன்றும் மஞ்சள்வெயில் .
காடுகெடுத்தல் காடழித்தல் .
காடுகெழுசெல்வி கொற்றவை .
காடுகொல்லுதல் காட்டை வெட்டியழித்தல் .
காடுகோள் விளைநிலம் காடுபற்றிப்போகை .
காடுதரிசு செடிகள் முளைத்த தரிசுநிலம் .
காடுபடுதல் நிரம்புதல் ; வீணாதல் .
காடுபடுதிரவியம் காட்டிலே உண்டாகும் பொருள்கள் .
காடுபலியூட்டுதல் காட்டில் வாழும் தேவர்களுக்குப் பலியிடுதல் .
காடுபிறாண்டி காடுவாரி .
காடுமறைதல் சாதல் .
காடுமேடு மேடாகவுள்ள தரிசுநிலம் .
காடுமேய்தல் வீணாய்த் திரிதல் .
காடுவாரி செத்தைவாருங் கருவி ; கண்ட பொருளை எல்லாம் சேர்ப்பவன் ; உயிர் வாழ்வதற்கென்று எத்தொழிலையுஞ் செய்பவன் .
காடுவாழ்த்து எல்லோரும் இறந்து போகவும் தான் இறப்பின்றி நிலைபெற்ற புறங்காட்டை வாழ்த்தி உலகவியல்பை விளக்கும் ஒரு புறத்துறை .