சொல்
|
அருஞ்சொற்பொருள் |
காதல் | அன்பு ; காமவிச்சை ; பத்தி ; வேட்கை ; ஆவல் ; மகன் ; சிற்றிலக்கியவகையுள் ஒன்று ; கொல்லுதல் ; தறித்தல் ; ஆந்தைக்குரல் . |
காதலவர் | அன்புக்குரியவர் ; சுற்றத்தார் . |
காணாக்கோல் | தெரியாது வந்து தைக்கும் அம்பு . |
காணாக்கோள் | மறைந்து சிறுபான்மையாகப் புலப்படும் கோள்கள் . |
காணாசி | காணியாட்சி , உரிமைநிலம் . |
காணாத்தலம் | ஆண்பெண்குறிப் பொது . |
காணார் | குருடர் ; பகைவர் . |
காணாவுயிர் | நுண்ணிய உடம்புள்ள உயிரி . |
காணி | உரிமையான இடம் ; ஓர் எண் ; நிலம் ; நூறு குழி அளவுள்ள நிலம் ; வழிவழியுரிமை ; ஒரு சிற்றளவு ; காணியாட்சி , ஒரு மஞ்சாடி நிறை ; பொன்னாங்காணி . |
காணிக்கடன் | நிலவரி . |
காணிக்காரன் | நிலச்சொந்தக்காரன் ; ஊர்ப்பங்காளி ; ஒரு மலைச்சாதியான் . |
காணிக்கை | கடவுளுக்கு அல்லது பெரியோருக்கு விரும்பி அளிக்கும் பொருள் , கையுறை . |
காணித்தாயம் | பங்காளிகளின் நிலவழக்கு . |
காணித்தாயவழக்கு | பங்காளிகளின் நிலவழக்கு . |
காணித்துண்டு | நிலத்தின் சிறுபகுதி . |
காணிப்பற்று | உரிமை ஊர் . |
காணிப்பூமி | காண்க : காணியாட்சி . |
காணிமானியம் | சர்வமானியம் ; ஊர்ப் பங்காளிகளுக்குப் பொதுவான மானியம் . |
காணியாட்சி | உரிமைநிலம் . |
காணியாளன் | உழவின்மேல் ஊக்கமுள்ள குடிமகன் ; காணியாட்சியுள்ளவன் ; வேளாளருள் ஒரு பிரிவினர் ; அத்துவைதக் கொள்கையைத் தழுவிய பார்ப்பனப் பிரிவு . |
காணுதல் | அறிதல் ; காண்டல் ; சந்தித்தல் ; செய்தல் ; வணங்குதல் . |
காணும் | முன்னிலைப் பன்மையில் வரும் ஓர் அசைச்சொல் . |
காணும்பொங்கல் | தை மூன்றாம்நாள் மாட்டுப் பொங்கலையடுத்து ஒருவரை யொருவர் கண்டு நலம் கேட்கும் கொண்டாட்ட நாள் . |
காணுமோர் | காண்பவர் . |
காத்தட்டி | ஆதொண்டைக்கொடி . |
காத்தண்டு | காவடியின் தண்டு . |
காத்தல் | பாதுகாத்தல் ; அரசாளுதல் ; எதிர்பார்த்தல் ; விலக்குதல் . |
காத்தவராயன் | ஓர் ஊர்த் தேவதை ; காவல் புரிபவன் . |
காத்தான் | காத்தவராயன் . |
காத்தியம் | கடித்துண்ணும் உணவு . |
காத்தியாயனி | பார்வதி ; கொற்றவை . |
காத்திரம் | கீர் ; சினம் ; உடல் ; உறுப்பு ; யானையின் முன்னங்கால் ; கனம் ; பருமன் ; முக்கியம் ; பாம்பு . |
காத்திரவேயம் | பாம்பு . |
காத்திரவேயர் | பாதாளத்தில் வசிக்கும் நாகர் . |
காத்திரன் | வலியோன் . |
காத்திரி | கீரி ; சினம் ; படைக்கலம் . |
காத்திருத்தல் | வரவுபார்த்திருத்தல் ; காவல் பூண்டிருத்தல் . |
காத்திரை | ஆயுதம் . |
காத்தூட்டுதல் | தனது கொள்கையை அடிக்கடி எடுத்தாண்டு மகிழ்வூட்டுதல் . |
காத்தூலம் | பண்டைக்காலத்து வழங்கிய துகில் வகை . |
காத்தோட்டி | ஆதொண்டைக்கொடி . |
காத்தொட்டி | ஆதொண்டைக்கொடி . |
காதகம் | கொலை ; பீடித்தல் . |
காதகன் | கொலையாளன் ; கொடியவன் . |
காதடைத்தல் | செவிடுபடல் ; நோய் முதலியவற்றால் காது கேளாது போதல் ; பசிமிக்க நிலையில் ஏற்படும் சோர்வு . |
காதடைப்பு | செவிடுபடல் ; நோய் முதலியவற்றால் காது கேளாது போதல் ; பசிமிக்க நிலையில் ஏற்படும் சோர்வு . |
காதம் | ஏழரை நாழிகை வழித்தொலைவு ; கொலை ; கள் ; நாற்சதுரமான கிணறு . |
காதம்பம் | அன்னப்பறவைவகை ; கானாங்கோழி . |
காதம்பரி | கள் ; வடமொழியிலிருந்து மொழி பெயர்க்கப்பட்ட ஒரு தமிழ்க் காப்பியம் . |
காதர் | வரம்பிலா ஆற்றலுள்ள கடவுள் . |
காதரம் | அச்சம் ; தீவினைத் தொடர்பு . |
காதரவு | அச்சம் ; தீவினைத் தொடர்பு . |
காதரன் | அச்சமுள்ளோன் . |
காண்டீபன் | அருச்சுனன் . |
காண்டீவன் | அருச்சுனன் . |
காண்டு | கூப்பிடுதூரம் ; சினம் ; துன்பம் . |
காண்டை | முனிவர் உறைவிடம் , கற்பாழி . |
காண்டோபக்கிரமணம் | வேதத்தின் ஒவ்வொரு காண்டத்தையும் ஓதத் தொடங்குங்கால் செய்யும் கிரியை . |
காண்பவன் | அறிகிறவன் , ஞாதிரு . |
காண்பு | காட்சி , காணுதல் . |
காண்பொங்கல் | காண்க : காணும்பொங்கல் . |
காண்வரி | பிறர் காணும்படி பலகாலும் வந்து நடிக்குங் கூத்து . |
காண்வருதல் | காட்சிக்கு இலக்காகுதல் . |
காணபத்தியம் | கணபதியை முதற் கடவுளாக வழிபடும் சமயம் . |
காணம் | கொள்ளு ; நிறுத்தலளவையுள் ஒன்று ; பொன் ; பொற்காசு ; பொருள் ; பாகம் ; செக்கு . |
காணம்போடுதல் | செக்காட்டி எண்ணெயெடுத்தல் ; அடிக்கடி தின்றுகொண்டே இருத்தல் . |
காணல் | காணுதல் ; குறித்தல் ; மனத்தால் குறித்தல் ; வணங்குதல் . |
காணலன் | பகைவன் . |
காணலிங்கம் | சிவகணங்களால் நாட்டப்பட்ட சிவலிங்கம் . |
காணன் | ஒற்றைக்கண்ணன் . |
காணா | சிறுபாம்பு . |
காணாக்கடி | கடித்தது இன்னது என்று அறிய முடியாத நச்சுக்கடி ; சிறுபாம்புக் கடி . |
காணாக்கண்ணிடுதல் | பார்த்தும் பாராதது போலாதல் . |
காணாக்காட்சி | வியத்தகு காட்சி , அற்புதக்காட்சி . |
காணக்கிரகணம் | பாதாளக் கிரகணம் . |
![]() |
![]() |
![]() |