காதலன் முதல் - காந்தருவர் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
காதுமந்தம் காது நன்றாகக் கேளாமை .
காதுவிடாய் பசி முதலியவற்றால் உண்டாகும் காதடைப்பு .
காதெழுச்சி சதை வளர்ந்து காதைச் செவிடுபடுத்தும் நோய்வகை .
காதை வரலாறு , சரித்திரம் ; சொல் ; பாட்டு ; கதைகொண்ட பகுதி ; கொலை ; தாளத்தின் அடிப்பு .
காதைகரப்பு மிறைக்கவியுள் ஒன்று , ஒரு செய்யுளை முடிய எழுதி அதன் ஈற்று மொழியுள் முதலெழுத்துத் தொடங்கி ஓரோர் எழுத்து இடையிட்டுப் படிக்கப் பிறிதொரு செய்யுள் வரப் பாடும் மிறைக்கவி .
காதைநெறித்தல் கூர்ந்து கேட்குமாறு குதிரை முதலிய விலங்குகள் காதை நிமிர்த்தல் .
காதோதி தீய எண்ணத்தோடு இரகசியம் ஓதுவோன் .
காதோலை காதுக்கிடும் பனையோலை ; மகளிர் காதணி .
காந்தக்கம்பி இடிதாங்கி ; மின்காரக் கம்பி .
காந்தக்கல் அயக்காந்தம் .
காந்தசத்துரு காந்தத்துக்கு மாற்றுச்சரக்கு ; நவச்சாரம் ; வெடியுப்பு .
காந்தப்பர் கந்தருவர் .
காந்தப்பெட்டி திசையறிகருவி .
காந்தபசாசம் காந்தக் கல் .
காந்தபட்சி அழகு பறவையான மயில் .
காந்தம் காந்தக்கல் ; ஒருவகைப் பளிங்கு ; அழகு ; மின்சாரம் ; கந்தபுராணம் .
காந்தம்பிடித்தல் காந்தம் இரும்பை இழுத்தல் .
காந்தம்வலித்தல் காந்தம் இரும்பை இழுத்தல் .
காந்தமண் காந்தச் சத்துள்ள செம்மண் .
காந்தமணி காந்தக்கல் .
காந்தலை பூமியின் வடகோடியில் காந்த மயமாகவுள்ளதாகக் கருதப்படும் மலை
காந்தர்ப்பம் காந்தருவம் ; கந்தருவர் அம்பு .
காந்தருப்பம் காந்தருவம் ; கந்தருவர் அம்பு .
காந்தர்ப்பர் கந்தருவர் .
காந்தருவம் காதலர் தம்முள் மனமொத்துக்கூடுங் கூட்டம் ; இசைப்பாட்டு ; காந்தருவவேதம் .
காந்தருவமணம் தலைவியும் தலைவனும் தாமாகவே கூடும் கூட்டம் .
காந்தருவர் கந்தருவர் ; பாடுவோர் .
காதலன் அன்பிற்குரியவன் ; தோழன் ; கணவன் ; மகன் .
காதலான் அன்பிற்குரியவன் ; தோழன் ; கணவன் ; மகன் .
காதலி அன்புக்குரியவள் ; தோழி ; மனைவி ; மகள் .
காதலித்தல் அன்புகொள்ளுதல் , விரும்புதல் .
காதலித்தவன் அன்பன் .
காதலித்தோன் அன்பன் .
காதலோன் தலைவன் ; மகன் .
காதவம் நிலவேம்பு ; வான்கோழி .
காதற்பரத்தை சேரிப்பரத்தையின் மகளாய்த் தலைவனது காதற்கு உரிமைபூண்டு அவனையே சார்ந்திருப்பவள் .
காதற்பாங்கன் தலைவனுக்கு உற்ற நண்பன் .
காதற்பிள்ளை உரிமைப்பிள்ளை , அன்புமகன் .
காதற்ற முறி செலுத்தற்குரியதைத் தீர்த்துக்கிழித்துவிட்ட ஓலைப்பத்திரம் .
காதற்றோழி தலையின் அன்புக்குரியவள் .
காதறுத்தல் காதின் துளையை அறுத்தல் ; பத்திரத்தை அறுதியாகத் தீர்த்துக் கிழித்து விடுதல் .
காதறுதல் காதின் துளை அறுதல் ; பத்திரம் தீர்க்கப்பெற்றுக் கிழிபடுதல் ; செருப்பின் வாரறுதல் ; ஊசித்துளை முறிதல் ; கவணில் கல் வைக்கும் இடம் அற்றுப்போதல் ; பகைகொள்ளுதல் .
காதறுப்பான் காதைச் சுற்றிவரும் புண் .
காதறை காதறுபட்ட ஆள் ; காதுக்குழி .
காதறைகூதறை ஒழுக்கங்கெட்டவள் .
காதறைச்சி சண்டைபிடிப்பவள் .
காதன் கொலைசெய்பவன் .
காதன்மை அன்பு ; ஆசை .
காதி ஈரிழைத் துணி ; முரட்டுத்துணி ; கதர்த்துணி ; விசுவாமித்திர முனிவரின் தந்தை ; ஒரு வகைக் கன்மம் ; மிருதபாடாணம் ; கொலை .
காதிகன் முத்திக்குப் பாதகமாயுள்ள கன்மங்கள் .
காதிரைச்சல் காதடைப்பால் உண்டாகும் குமுறல் .
காதில்விழுதல் காதுக்குச் செய்தியெட்டுதல் .
காதிலடிபடுதல் அடிக்கடி செய்தி கேட்கப்படுதல் .
காதிலி செவிடன் ; செவிடி .
காதிலோதுதல் மந்திர உபதேசம் செய்தல் ; இரகசியம் சொல்லுதல் ; கோட்சொல்லுதல் .
காதிவென்றோன் அருகன் .
காது செவி ; ஊசித்தொளை ; கொலை ; கவணில் கல் வைக்கும் இடம் ; புகையிலையின் காம்பு ; ஏனங்களின் விளிம்புப்பிடி .
காதுக்கரப்பான் காதின் வெளிப்புறத்திற்காணும் நோய் .
காதுக்குடைச்சல் காதுநோய்வகை .
காதுக்குறும்பி காதழுக்கு ; குறும்பி வாங்கி .
காதுகன் கொலைகாரன் ; கொடியோன் .
காதுகிழித்தல் பத்திரத்தை ரத்துச் செய்து கிழித்தல் .
காதுகிள்ளுதல் காதுகிழித்தல ; காதுகுத்துதல் .
காதுகுடைதல் காதில் குடைச்சல்நோய்வருதல் ; காதுக் குறும்பி எடுத்தல் .
காதுகுத்தல் காதில் அணிகலன் அணியும் சடங்கு செய்தல் ; வஞ்சித்தல் ; காதுக்குள் நோவெடுத்தல் .
காதுகுத்துதல் காதில் அணிகலன் அணியும் சடங்கு செய்தல் ; வஞ்சித்தல் ; காதுக்குள் நோவெடுத்தல் .
காதுகுளிர்தல் செவிப்புலனுக்கு இன்பமாதல் .
காதுகொடுத்தல் உற்றுக்கேட்டல் .
காதுச்சோணை காதின் தண்டு .
காதுசெய்தல் காதுவளர்த்தல் .
காதுதல் கூறுசெய்தல் ; கொல்லல் ; தறித்தல் .
காதுதூர்தல் காதுமடலின் துளை தூர்தல் .
காதுப்பூச்சி செவிப்பாம்பு .
காதுபெருக்குதல் காதுவளர்த்தல் .
காதுமடல் புறக்காது .