கிண்ணி முதல் - கிரகமாலை வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
கிரகப் பெயர்ச்சி கோள் இடம் மாறுகை .
கிரகபதனம் அகலாங்கு , அட்சரேகை .
கிரகபதி சூரியன் .
கிரகபலம் கோளின் அதிகாரம் .
கிரகபீடை கோள்நிலையினால் வரும் இடர் .
கிரகபுடம் சாதகங்களில் கோள்களின் நிலையை வரையறுக்கை .
கிரகம் கோள்கள் ; தாள அளவையுள் ஒன்று ; வீடு .
கிரகமண்டலம் காண்க : கிரகவீதி .
கிரகமாலிகை கோள்கள் மாலைபோல் தொடர்ந்து நிற்கும் நிலை .
கிரகமாலை கோள்கள் மாலைபோல் தொடர்ந்து நிற்கும் நிலை .
கிணற்றுறை மண் சரியாதிருத்தற்குக் கிணற்றுள் இறக்கும் உறை .
கிணறு கேணிவகை , கூவல் .
கிணறெடுத்தல் கிணறு வெட்டுதல் ; கிணறு வெட்டுதற்கேற்ற இடந்தேர்தல் .
கிணாங்கு புல்வகை .
கிணாட்டு ஓலைநறுக்கு ; மீன்செதில் முதலியன ; கதிர் முதலியவற்றின் சிறு குலை .
கிணி கைத்தாளம் .
கிணிதம் வாயுதேவன் வில் .
கிணிதி கிலுகிலுப்பைச் செடி .
கிணீரெனல் ஓர் ஒலிக்குறிப்பு .
கிணுகிணுத்தல் கொசு முதலியன ஒலித்தல் ; முணுமுணுத்தல் .
கிணை ஒருவகை மருதப்பறை ; உடுக்கை ; தடாரிப்பறை .
கிணைநிலை கிணைமகன் மருதநிலத்து வேளாளனைக் கிணைகொட்டிப் புகழும் புறத்துறை .
கிணைநிலைப் பொருநர் கிணைப்பறை கொட்டிக்கொண்டு வேளாளரைப் புகழ்ந்துபாடும் பொருநர் .
கிணைப்பொருநர் கிணைப்பறை கொட்டிக்கொண்டு வேளாளரைப் புகழ்ந்துபாடும் பொருநர் .
கிணைமகள் விறலி .
கிணைமகன் கிணைப்பறை கொட்டுபவன் .
கிணையன் கிணைப்பறை கொட்டுபவன் .
கிணையவன் கிணைப்பறை கொட்டுபவன் .
கித்த விரைவாக .
கித்தம் செய்யப்பட்டது ; விரைவு .
கித்தான் ஒருவகை முருட்டுத்துணி .
கித்தான்கயிறு சணற்கயிறு .
கித்தான்பாய் கப்பற்பாய் .
கித்தில் கூந்தற் கமுகுவகை ; கூந்தற் கமுகின் நார் .
கித்துதல் ஒற்றைக் காலால் தாவி நடத்தல் , நொண்டி நடத்தல் .
கிதயுகம் காண்க : கிருதயுகம் .
கிதவம் ஊமத்தஞ்செடி .
கிதவன் வஞ்சகன் .
கிந்திகம் திப்பிலிமூலம் .
கிந்தி நடத்தல் முன்னங்காலால் நடத்தல் ; நொண்டி நடத்தல் .
கிந்துகாலன் கொந்தி நடப்பவன் .
கிந்துதல் படங்குந்தி நடத்தல் ; நொண்டி விளையாடுதல் ; நொண்டி நடத்தல் .
கிபாயத்து ஊதியம் ; இலாபம் .
கிம்புரி தோளணி ; யானையின் கொம்புப்பூண் ; முடியுறுப்புள் ஒன்று ; நீர் விழுதற்கு மகரவாய் வடிவில் அமைக்கப்பட்ட தூம்பு ; மகரவாய் என்னும் அணிகலன் .
கிம்புரிமுகம் ஆபரண முகப்பின் உறுப்புள் ஒன்று .
கிம்புருடர் பதினெண்கணத்தொருவராய் மனிதமுகமும் குதிரையுடலும் படைத்த தேவசாதியார் .
கிம்புருட வருடம் ஏமகூடத்திற்கும் இமயமலைக்கும் இடைப்பட்ட வடவிந்தியப்பகுதி , நாவலந்தீவில் ஒன்பது கண்டங்களுள் ஒன்று .
கிமாவெனல் முறுமுறுத்தல் குறிப்பு .
கிமித்துக்கினம் புழு .
கியாதம் புகழ் .
கியாதி புகழ் ; பிருகுவின் மனைவி .
கியாழம் கழாயம் .
கியானம் அறிவு ; ஞானம் .
கிரக்கம் களைப்பு .
கிரககதி கோளின்நடை .
கிரககழிப்பு கோளால் வரும் தீமை கழியச் செய்யும் கழுவாய் .
கிரகசாந்தி கோளால் வரும் தீமை கழியச் செய்யும் கழுவாய் .
கிரகங்கழித்தல் கிரகசாந்தி செய்தல் .
கிரகச்சித்திரம் குடும்பச் சச்சரவு .
கிரகச்சுற்று கோளின் சுற்றுநடை .
கிரகசம் ஒரு நரகம் .
கிரகசாரம் கோளின் நடை ; தீக்கோளின் பலன் ; கோள்நிலைக் குறிப்பு .
கிரகசெபம் கோளால் உண்டாகும் தீமை கழியச் செய்யும் செபம் .
கிரகணம் பற்றுகை ; மனத்திற் கொள்ளுதல் ; சந்திரசூரியர்களின் கிரகணம் .
கிரகணி அசீரண பேதிவகை .
கிரகநடை கோளின் போக்கு .
கிரகநிலை கோள்கள் நிற்கும் நிலைமை .
கிரகநீதி இல்லொழுக்கம் .
கிண்ணி கிண்ணம் ; சிறு வட்டில் ; நாழிகை வட்டில் ; கத்தியின் கைப்பிடி யுறை ; நண்டின் கால் ; நாயின் கிண்ணிக்கால் ; பசு முதலிய ஒருசார் விலங்குகளின் குளம்பின்மேல் உள்ள திரட்சி .
கிண்ணிக் கருப்பூரம் இரசகருப்பூரம் , உயர்ந்த கருப்பூரம் .
கிண்ணெனல் ஓர் ஒலிக்குறிப்பு .
கிணகன் அடிமை .
கிணம் கிணறு ; தழும்பு .
கிணற்றுக்கட்டு கிணற்றின் சுற்றுக் கட்டடம் .
கிணற்றுவாரகம் கிணறு வெட்டுவதற்காக அரசாங்கத்தார் உழவர்களுக்குக் கொடுக்குங் கடன் .