குசக்கலம் முதல் - குட்சி வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
குஞ்சித்தல் கால்தூக்கி வளைத்தல் ; காலின் படங் குந்திநிற்றல் .
குஞ்சிதநடம் ஒரு காலைத் தூக்கி வளைந்தாடும் நடராசர் கூத்து .
குஞ்சிதம் வளைந்தது .
குஞ்சியப்பன் தந்தையின் தம்பி ; தாயின் தங்கை கணவன் ; தாயின் இரண்டாம் கணவன் .
குஞ்சியாய்ச்சி சிறிய தாய் ; தந்தையின் தம்பி மனைவி ; தந்தையின் இரண்டாம் தாரம் ; தாயின் தங்கை .
குஞ்சியாயி சிறிய தாய் ; தந்தையின் தம்பி மனைவி ; தந்தையின் இரண்டாம் தாரம் ; தாயின் தங்கை .
குஞ்சிரிப்பு புன்னகை .
குஞ்சு பறவைக்குஞ்சு ; சிறுமை ; எலி அணில் முதலியவற்றின் குஞ்சு ; குழந்தையின் ஆண்குறி .
குஞ்சுக்கடகம் சிறிய ஓலைப்பெட்டி .
குஞ்சுக்குவைத்தல் முட்டையைக் குஞ்சுபொரிக்கும்படி வைத்தல் .
குஞ்சுகுழந்தைகள் சிறியவும் பெரியவுமான குழந்தைகள் .
குஞ்சுங்குழுமானும் பூச்சித்திரள் ; பல வயதிலுள்ள குழந்தைகளின் கூட்டம் .
குஞ்சுச்சிப்பி முற்றாத முத்துச்சிப்பி .
குஞ்சு நறுக்குதல் காண்க : சுன்னத்துச்செய்தல் .
குஞ்சுப்பெட்டி காண்க : குஞ்சுக்கடகம் .
குஞ்சுபொரித்தல் முட்டையினின்று குஞ்சினை வெளிவிடுதல் .
குஞ்சுரம் குன்றிமணி .
குஞ்சுறை பறவைக்கூடு .
குஞ்சை நெய்வோர் பாவில் தேய்க்கும் குஞ்சம் .
குட்சி வயிறு ; ஒற்றைத் தாயம் .
குசக்கலம் மட்பாண்டம் .
குசத்தனம் அறிவுக்குறைவு , மூடத்தனம் .
குசத்தி குயப்பெண் ; ஓடு ; பூவழலை .
குசந்தனம் செஞ்சந்தனம் .
குசப்புத்தி மடமை .
குசபலம் மாதுளைமரம் .
குசம் தருப்பை ; நீர் ; மரம் ; முலை ; குயவற்குரியது .
குசமசக்கு குழப்பம் ; காரியச் சிக்கல் .
குசர் பிசிர் .
குசலக்காரன் மந்திரக்காரன் ; வஞ்சகன் .
குசலப்பிரசினம் நலங்கேட்டல் .
குசலபுத்தி கூர்மையான புத்தி ; தந்திரபுத்தி .
குசலம் நலம் ; நற்குணம் ; மாட்சிமை ; திறமை ; தந்திரம் ; மாந்திரிகம் .
குசலவித்தை மகளிர்க்குரிய விநோதக் கைத்தொழில்களாகிய எண்ணல் , எழுதல் , இலை கிள்ளல் , பூத்தொடுத்தல் , யாழ்மீட்டல் ; மந்திரவித்தை .
குசலவேதனை இன்பவுணர்ச்சி .
குசலன் மிக வல்லோன் ; அறிஞன் ; சூழ்ச்சி வல்லோன் .
குசலாகுசலவேதனை இன்பதுன்ப வுணர்ச்சி .
குசலை தடை ; சுவர்த்தலையிற் கட்டும் ஆரல் .
குசவம் கொய்சகம் ; ஓரங்கொய்து சுருக்கப் பட்ட உடை .
குசவன் காண்க : குயவன் .
குசவோடு குயவன் செய்த ஓடு .
குசன் செவ்வாய் ; சீராமன் புதல்வருள் ஒருவன் .
குசாக்கிரபுத்தி மிக நுண்ணிய புத்தி , தருப்பை நுனிபோல் கூரிய அறிவு .
குசாண்டு சிறுமை ; அற்பத்தன்மை .
குசால் மனக்களிப்பு ; நடையுடைபாவனைகளின் மினுக்கு .
குசாற்காரன் மகிழ்ச்சியாயிருப்பவன் ; பகட்டுக் காரன் .
குசினி சமையலறை ; சிறியது ; சமையற்காரன் .
குசினிப்பயிர் இளம்பயிர் .
குசு அபானவாயு .
குசுகுசுத்தல் இரகசியம் பேசுதல் , காதுக்குள் ஓதுதல் .
குசும்பம் செந்துருக்கம்பூ மரம் .
குசும்பா செந்துருக்கம்பூ மரம் .
குசும்பை செந்துருக்கம்பூ மரம் .
குசும்பு குறும்புத்தனம் .
குசுமம் பூ .
குசுமாகரம் பூந்தோட்டம் ; இளவேனில் .
குசுமாசவம் தேன் .
குசேசயம் தாமரை .
குசை தருப்பைப்புல் ; குதிரைக் கடிவாளம் ; மகிழ்ச்சி ; குதிரையின் பிடரிமயிர் .
குசைக்கயிறு குதிரையின் வாய்வடம் .
குசைக்கிரந்தி தருப்பைப் பவித்திர முடிச்சு .
குசோத்தியம் நேர்மையற்ற கேள்வி ; தந்திரம் ; பரிகாசம் .
குஞ்சங்கட்டுதல் அலங்காரத்துக்குத் தொங்கவிடுதல் .
குஞ்சட்டி சிறுசட்டி .
குஞ்சம் குறள் ; கூன் ; குறளை ; பூங்கொத்து ; புற்குச்சு ; புடைவை அகலத்தின் அரைக்காற் பாகம் ; கொய்சகம் ; ஈயோட்டி ; பாவாற்றி ; குன்றிக்கொடி ; நாழி ; புளிநறளைச்செடி ; சீதாங்கபாடாணம் .
குஞ்சரத்தீ யானைத்தீ .
குஞ்சரம் யானை ; ஒரு சொல்லைச் சார்ந்து உயர்வு குறிக்கும் மொழி ; கருங்குவளை .
குஞ்சரமணி கழுத்தணிவகை .
குஞ்சரவொழுகை யானை கட்டிய வண்டி .
குஞ்சராசனம் அரசமரம் .
குஞ்சரி பெண்யானை ; முருகக் கடவுளின் மனைவியான தெய்வயானை .
குஞ்சன் குறளன் , குள்ளன் .
குஞ்சாமணி ஆண்குழந்தைகளின் அரையிற் கட்டும் மணிவிசேடம் .
குஞ்சான் குழந்தையின் ஆண்குறி .
குஞ்சி சிறுமையானது ; பறவைக்குஞ்சு ; சிறியதாய் ; சிற்றப்பன் ; குழந்தையின் ஆண்குறி ; கொடிநாட்டுங் குழி ; கொடிக்குழை ; குடுமி ; தலை ; குன்றிக்கொடி ; சிற்றணுக்கள் .