குட்டநாசனம் முதல் - குடநாடதன் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
குட்டினி கற்பழிந்தவள் ; கூட்டிக்கொடுப்பவள் .
குட்டு கைமுட்டியால் தலையில் இடிக்கை ; இரகசியம் ; மானம் ; குட்டநோய் கோஷ்டம் .
குட்டுணி பிறரால் குட்டுண்பவன்(ள்) .
குட்டுதல் கைமுட்டியால் தலையில் குட்டுதல் .
குட்டுப்பட்டவன் ஒரு தொழிலில் இடர்ப்பட்டு அனுபவம் பெற்றவன் .
குட்டுப்படுதல் அடிக்கடி இடறுதல் .
குட்டுவன் குட்டநாட்டிலுள்ளவன் ; சேரன் .
குட்டேறு சிறு காளை ; எருத்துத் திமில் , மாட்டுக் கொண்டை .
குட்டை குள்ளம் ; குறுகிய உருவம் ; சிறு குளம் ; குறுணி ; குட்டைமரம் ; வெள்ளைக்குட்டம் .
குட்டைமரம் தொழுமரம் .
குட்டையாடு பள்ளையாடு .
குட்டையிலடித்தல் தொழுமரத்தில் கட்டியடித்தல் .
குட வளைந்த .
குடக்கம் வளைவு .
குடக்கனி பலாப்பழம் .
குடக்கால் குடம் போன்ற விளக்குத் தண்டு .
குடக்கி வளைவானது .
குடக்கியன் கூனன் .
குடக்கினி காசுக்கட்டி ; கருங்காலிமரம் .
குடக்கு மேற்கு .
குடக்குழி நீர்க்குண்டு .
குடக்கூத்து தன் பேரனாகிய அநிருத்தனை வாணன் சிறைப்படுத்த அவனது நகரவீதியில் சென்று கண்ணன் குடமெடுத்தாடிய கூத்து .
குடக்கூலி காண்க : குடிக்கூலி .
குடக்கோ சேரன் .
குடக்கோன் சேரன் .
குடகச்செலவு யாழில் இசைபட வாசிக்கும் வகையுள் ஒன்று .
குடகம் மேற்கு ; தமிழ்நாட்டின் மேல்பாலுள்ள நாடு ; குடகுமலை ; கோளகபாடாணம் .
குடகரம் உத்தாமணிக்கொடி , வேலிப்பருத்தி .
குடகன் சேரன் ; மேல்நாட்டன் .
குடகாற்று மேல்காற்று .
குடங்கர் குடம் ; கும்பராசி ; குடிசை .
குடங்கவிழ்தல் காண்க : குடஞ்சாய்தல் .
குடங்குல் மடி .
குடங்குதல் வளைதல் .
குடங்கை உள்ளங்கை ; எல்லா விரலும் கூட்டி உட்குழிக்கும் இணையா வினைக்கை .
குடச்சிப்பி வளைவுள்ள சிப்பி .
குடச்சூல் பாதச் சிலம்புவகை .
குடசப்பாலை கசப்பு வெட்பாலை ; கறிப்பாலை ; கொடிப்பாலைச் செடி .
குடசம் குடசப்பாலை ; மலைமல்லிகை .
குடஞ்சாய்தல் வண்டி குடம்சாய்ந்து விழுதல் .
குடஞ்சுட்டவர் பசுநிரை மேய்க்கும் இடையர் .
குடஞ்சுட்டு பசு .
குடத்தி இடைச்சி ; கழுதைப்புலி ; ஓநாய் .
குடதாடி தூணின்மேல் வைக்கும் குடவடிவான உறுப்பு .
குடதிசை மேற்குத் திக்கு .
குடதேவர் அகத்தியர் .
குடந்தம் கைகூப்பி மெய்வளைத்துச் செய்யும் வழிபாடு ; நால்விரல் மடக்கிப் பெருவிரல் நிறுத்தி நெஞ்சிடை வைக்கை ; குடம் ; கும்பகோணம் ; திரட்சி .
குடந்தம்படுதல் வழிபடுதல் .
குடந்தை வளைவு ; கும்பகோணம் .
குடநாடன் சேரன் .
குடநாடதன் சேரன் .
குட்டநாசனம் வெண்கடுகு .
குட்டநாடு திருவாங்கூர்ப் பகுதியைச் சேர்ந்ததும் கோட்டயம் , கொல்லம் என்னும் நகரங்களைக் கொண்டதும் , மிகுதியான ஏரிகளை உடையதுமான ஒரு கொடுந்தமிழ் நாடு .
குட்டம் ஆழம் ; குளம் ; மடு ; குட்டநாடு ; பரப்பிடம் ; திரள் ; சபை ; குரங்குக்குட்டி ; குறைந்த சீருள்ள அடி ; தரவு ; தொழுநோய் .
குட்டமிடுதல் பள்ளந்தோண்டுதல் .
குட்டரி மலை .
குட்டன் சிறுபிள்ளை ; ஆட்டுக்குட்டி ; விலங்கின் குட்டி .
குட்டான் சிறு ஓலைப்பெட்டி .
குட்டி ஆடு ; கீரி ; குதிரை ; நரி ; நாய் ; பன்றி ; புலி , பூனை முதலியவற்றின் குட்டி ; விலங்கின்பிள்ளைப் பொது ; சிறுமை ; சிறு பெண் ; கடைசி மகன் ; பல்லாங்குழி முதலிய விளையாட்டில் அதிகமாகக் கூடுங் காய் ; ஆதாயம் ; காக்கைப்பலா ; கடிச்சை ; வாழைக் கன்று .
குட்டிக்கரணம் தலைகீழாகப் புரளும் வித்தை ; பெருமுயற்சி .
குட்டிக்கலகம் சிறுகலகம் ; கோட்சொல்லலால் விளையுங் கலகம் .
குட்டிக்கும்பிடுதல் தலையிற் குட்டிக்கொண்டு விநாயகரை வணங்குகை .
குட்டிக்கொக்கான் சிறு கற்களைக்கொண்டு ஆடும் விளையாட்டுவகை .
குட்டிச்சாத்தான் குறளித்தேவதை .
குட்டிச்சுவர் இடிந்த சிறுசுவர் ; பாழ்மனை ; பழுது .
குட்டிச்சுவராய்ப்போதல் கெட்டுப்போதல் .
குட்டிப்பிடவம் ஒரு மரவகை .
குட்டிபோடுதல் விலங்கு குட்டி ஈனுதல் ; விளையாட்டில் அதிகப் பந்தயம் இறுத்தல் .
குட்டிமம் கல் பதித்த தரை .
குட்டியம் சுவர் ; மேடை .
குட்டியிடுக்கி சிற்றரத்தைச் செடி ; பயிருடன் முளைக்கும் ஒரு புல் ; கோஷ்டம் , ஒருவகைச் செடி .
குட்டியிடுதல் விலங்கு முதலியன குட்டி போடுதல் .
குட்டிவிரல் கால் கைகளில் ஐந்துக்கு அதிகமாயுள்ள விரல் .
குட்டிவைத்தல் விளையாட்டில் தவறான காயை அடித்தல் ; சூதில் பந்தயம் இழத்தல் .
குட்டினம் கருஞ்சீரகம் .