குடநாடு முதல் - குடா வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
குடவோலை முன்னாளில் ஊர்ச்சபையோரைத் தேர்ந்தெடுக்க மக்கள் குடத்திலிடுஞ் சீட்டு .
குடற்சவ்வு வயிற்றின் உறுப்பை மூடியிருக்குஞ் சவ்வு .
குடற்படுவன் குழந்தையின் குடர்நோய்வகை .
குடற்பிடுங்கி வாந்தியெடுக்கச் செய்வதாகிய துரிசு .
குடற்புரை குடலின் துளை .
குடற்பை கருப்பப் பை .
குடற்போர்வை கருப்பப் பை .
குடற்றுடக்கு இரத்தக் கலப்பான உறவு .
குடா வளைவு ; குடைவு ; குடாக்கடல் ; மூலை .
குடம் நீர்க்குடம் ; கும்பராசி ; குடக்கூத்து ; குடதாடி ; வண்டிக்குடம் ; திரட்சி ; பசு ; நகரம் ; பூசம் ; குடநாடு ; வெல்லக்கட்டி ; சதுரக்கள்ளி .
குடம்பை கூடு ; முட்டை ; ஏரி ; உடல் .
குடம்விட்டுக் கட்டுதல் கலியாணத்திற்கு நடும் கோலை அடுக்குக் குடம்போலச் சீலையால் அலங்கரித்தல் .
குடமண் வெண்மணல் .
குடமணம் கருஞ்சீரகம் .
குடமல்லிகை ஒருவகை மல்லிகை .
குடமலை குடகுமலை .
குடமலைநாடு குடகுநாடு .
குடமாடல் குடக்கூத்து , மாயோன் கூத்து .
குடமாலை உருட்சியான மாலைவகை .
குடமிளகாய் மிளகாய்வகை .
குடமுடைத்தல் கொள்ளிவைப்பவன் பிணத்தைச் சுற்றிவந்து நீர்க்குடம் உடைக்கும் சாவுச் சடங்கு .
குடமுழவம் முழா வாத்தியவகை .
குடமுழவு முழா வாத்தியவகை .
குடமுழா முழா வாத்தியவகை .
குடமுழுக்கு திருமுழுக்கு , கும்பாபிடேகம் .
குடமுனி காண்க : குடதேவர் .
குடமூக்கில் கும்பகோணம் .
குடமூக்கு கும்பகோணம் .
குடர் குடல் .
குடராசம் பூரான்வகை .
குடரி யானைத்தோட்டி .
குடல் வயிற்றுள் இரைப்பையைத் தொடர்ந்துள்ள குழாய் பெருங்குடல் ; சிறுகுடல் ; காயின் குடல் ; மரக்குடல் ; பழக்குடல் .
குடல்காய்கை பசியால் வயிறு ஒட்டிக் கொள்கை .
குடல்தட்டுதல் குடலின் பிறழ்வைத் தட்டி ஒழுங்குபடுத்துதல் .
குடல்பதறுதல் துக்கமிகுதி முதலியவற்றால் வயிறு கலங்குதல் .
குடல்வலி உணவுமிகுதி முதலியவற்றாற் குடலிற் காணும் நோவு .
குடல்வாதம் ஒருவகை நோய் , அண்டவாதம் .
குடல்வாயு ஒருவகை நோய் , அண்டவாதம் .
குடல் விளக்கஞ் செய்தல் பிறந்த வயிற்றைப் பெருமைபெறச் செய்தல் .
குடலளைச்சல் பெருங்குடலில் தோன்றும் நோய்வகை .
குடலிரைச்சல் வயிற்றிரைவு .
குடலெரிச்சல் வயிறு காந்துகை , வயிற்றெரிச்சல் .
குடலேற்றம் குடல் இடம் மாறி மேலேறுதலால் உண்டாகும் நோய் .
குடலேறுதல் குடல் இடம் மாறி மேலேறுதல் .
குடலை பூக்கூடை ; கதிர்க்கூடை ; கிணற்றுக்கூடை ; பழக்கூடு ; கீற்றுக்கூடு ; குடல் .
குடலைக்கிணறு ஒருவகை உறைக்கிணறு .
குடலைக் குழப்புதல் வாந்தி செய்யும்படி வயிற்றைப் புரட்டுதல் .
குடலைப் பிடுங்குதல் பசியால் வயிறு கிண்டப்படுதல் ; வாந்தியெடுக்கவருதல் .
குடலையாகுதல் கதிர் ஈனுதல் .
குடலையுங்கதிரும் கருக்கொண்டதும் கொள்ளும் நிலையில் உள்ளதுமான கதிர் .
குடலைவயிறு குழைந்த வயிறு .
குடவண்டி போடுதல் குடங்கவிழ்தல் ; தலைகீழாய்க் கவிழ்தல் .
குடவண்டி வைத்தல் தொந்தி தள்ளுதல் .
குடவம் பித்தளை .
குடவர் குடகுநாட்டி லுள்ளோர் .
குடவரை அத்தகிரி , மேற்குமலை .
குடவரைவாசல் கோபுரவாயில் .
குடவளப்பம் இருப்பைமரம் .
குடவறை நிலவறை ; சிற்றறை .
குடவன் இடையன் ; பித்தளை ; ஒரு கொட்டைக்காய் ; கணிகை ; குடவுண்ணி ; கோஷ்டம் .
குடவியிடுதல் வளைத்து அகப்படுத்துதல் .
குடவிளக்கு மணவறையில் அக்கினி மூலையில் குடத்தின்மேல் வைக்கும் விளக்கு ; தொங்கவிடுவதும் உலோகத்தால் அமைந்ததுமான குடவடிவுள்ள விளக்கு .
குடவு வளைவு ; குகை .
குடவுதல் வளைவாதல் .
குடநாடு மேல்நாடு ; கொடுந்தமிழ்நாடு பன்னிரண்டனுள் ஒன்று .
குடப்படை உட்கோயிலின் அடிமட்டத்திலுள்ள கட்டடப் பகுதி .
குடப்பம் இருப்பைமரம் .
குடப்பறை குடவடிவமான பன்றிப்பறை .
குடப்பாம்பிற் கையிடுதல் பாம்பை அடைத்த குடத்திற் கையிட்டுச் சூளுரைத்தல் .
குடப்பாம்பு குடத்தில் அடைபட்ட பாம்பு ; மதிற்பொறிவகை .
குடப்பாலை காண்க : குடசப்பாலை .
குடப்பிழுக்கை வரிக்கூத்துவகை .
குடப்பெட்டி நெல்வகை .
குடபலை மணித்தக்காளி .
குடபுலம் மேல்நாடு .