அகம்மியம் முதல் - அகழான் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
அகவை உட்பட்டது ; உட்பொருள் ; உள்ளிடம் ; உட்பட்ட வயது ; ஆண்டு ; பருவம் ; ஏழாம் வேற்றுமை உருபு .
அகழ் அகழி , மதில்சூழ் கிடங்கு , கிடங்கு ; குளம் .
அகழ்தல் தோண்டுதல் , கல்லுதல் ; உழுதல் .
அகழான் வயல் எலி .
அகர்நிசம் பகலும் இரவும் , நாளெல்லாம் .
அகர்முகம் வைகறை , விடியற்காலம் .
அகரம் ' அ ' என்னும் எழுத்து ( கரம் சாரியை ) ; மருதநிலத்தூர் ; பார்ப்பனர் சேர்ந்து வாழும் இடம் ; பாதரசம் .
அகரமுதலி காண்க : அகராதி .
அகரமேற்றுதல் அந்தணரைக் குடியேற்றுதல் .
அகராதி அகரம் முதலாக நெடுங்கணக்கு அடைவில் அமைக்கப்பெறும் சொற்கோவை ; சொற்களஞ்சியம் ; சொற்பொருட்களஞ்சியம் ; சொற்பொருள் விளக்கநூல் .
அகராதிக்கிரமம் அகரம் முதலாக வரும் முறைமை .
அகராதிபடித்தவன் மிகுந்த கல்வியாளன் ; பிறர் கருத்தைக் கேளாது தன் போக்கில் செல்லுபவன் .
அகரு அகில்மரம் .
அகருதம் வீற்றிருக்கை .
அகல் விளக்குத் தகழி ; சட்டி ; விரிவு ; ஓர் அளவு ; வெள்வேல் மரம் .
அகல் (வி) விலகு , நீங்கு .
அகல்லியமாமிசம் சமைக்கப்படாத இறைச்சி .
அகல்வு விரிவு , அகலம் ; நீக்கம் .
அகலக்கட்டை அகலம் குறைந்தது ; பரப்பில்லாதது .
அகலக்கவி நாற்கவியுள் ஒன்றான வித்தாரகவி ; விரித்துக் கவிபாடும் புலவன் .
அகலக்கால்வைத்தல் அளவுகடந்துபோதல் .
அகலத்தேடுதல் நீங்க வகைபார்த்தல் ; விரிவாய் ஆராய்தல் .
அகலம் விரிவு ; பரப்பு ; இடம் ; பூமி ; மார்பு ; விருத்தியுரை ; வித்தாரகவி ; பெருமை .
அகலம்புகுதல் மார்பிடத்தே தழுவுதல் ; அடைக்கலமாதல் .
அகலவுரை விரிவாக எழுதும் உரை , விருத்தியுரை .
அகலறை பாசறை ; மலைப்பக்கம் .
அகலன் நீங்கிவாழ்வோன் ; தீண்டாதவன் ; ஏழை ; கடவுள் ; பெருத்தவன் ; பெருமையுடையவன் .
அகலாங்கு நிலநடுக்கோட்டுக்கு இருபக்கமும் கிழக்குமேற்கில் செல்லும் சமதொலைக்கோடு .
அகலிடம் பூமி , நிலவுலகம் .
அகலுதல் நீங்குதல் , பிரிதல் ; கடத்தல் ; விரிதல் .
அகலுள் அகலம் ; ஊர் ; தெரு ; பூமி ; நாடு ; பெருமை .
அகவடி உள்ளங்கால் ; அடிச்சுவடு .
அகவயிரம் காண்க : அகக்காழ் .
அகவர் மங்கலப் பாடகர் , புகழ் பாடுவோர் , சூதர் ; நாட்டில் வாழ்வோர் ; வீட்டிலிருப்பவர் .
அகவல் அழைத்தல் , கூவுதல் ; மயிலின் குரல் ; இசைத்தல் ; பாடுதல் ; கூத்து ; கூத்தாடல் ; ஆசிரியப்பாவுக்குரிய ஓசை ; ஆசிரியப்பா .
அகவல் உரிச்சீர் ஈரசை கொண்டுவரும் நேர் நேர் , நிரை நேர் , நிரை நிரை , நேர் நிரை என்னும் சீர்வகை .
அகவல் விருத்தம் அறுசீரடி முதலாகப் பல சீரடி நான்கு கொண்ட பாவகை .
அகவலன் பாடும் பாணன் .
அகவலைப்படுத்தல் வலையில் அகப்படுத்தல் .
அகவலோசை ஆசிரியப்பாவிற்கு உரிய ஓசை .
அகவற்பா ஒருவரை அழைத்துக் கூறும் முறையில் பாடப்படுவது ; நால்வகைப் பாக்களுள் ஒன்று , ஆசிரியப்பா .
அகவற்றுறை நான்கடி கொண்டதாய் முதல் ஈற்றடிகள் ஒத்து இடையடிகள் குறைவுபட்டு வருவது .
அகவன் மகள் பிறரை விளித்துப்பாடும் பெண் ; பாண்மகள் .
அகவாட்டி இல்லக்கிழத்தி , மனைவி .
அகவாய் உள்ளிடம் ; கதவுநிலை .
அகவாயில் உள்வாயில் ; மனம் .
அகவாளன் வீட்டுக்குரியோன் ; கணவன் ; தலைவன் .
அகவிதழ் உள் இதழ் ; அல்லி .
அகவிரல் விரலின் உட்பகுதி .
அகவிருள் உள்ளிருள் ; அறியாமை ; மெய்யறிவின்மை .
அகவிலை மலரின் உள்ளிதழ் ; தவசவிலை .
அகவுதல் அகவல் ; குரல் எழுப்புதல் ; ஒலித்தல் ; அழைத்தல் ; பாடுதல் ; ஆடல் .
அகவுநர் பாடுவோர் ; ஆடுவோர் .
அகவுயிர் உடம்பினுள் உயிர் .
அகம்மியம் ஒரு பேரெண் ; பத்துலட்சங்கோடி ; கோடாகோடி ; அணுகக்கூடாதது ; அறியக் கூடாதது .
அகம்மியை இழிகுலப்பெண் ; பொதுமகள் .
அகமகிழ்ச்சி உள்ளக்களிப்பு ; மனமகிழ்ச்சி .
அகமடல் அகவிதழ் ; பாளை .
அகமணை வண்டியின் உட்பலகை ; படகின் உட்கட்டை .
அகமணைத்தட்டு வண்டியின் உட்பலகை ; படகின் உட்கட்டை .
அகமதி காண்க : அகந்தை .
அகமம் மரம் ; மலை .
அகமருடணம் பாவ நீக்கத்தின் பொருட்டு நீருக்குள் நின்று உச்சரிக்கும் மந்திரம் .
அகமருடம் பாவ நீக்கத்தின் பொருட்டு நீருக்குள் நின்று உச்சரிக்கும் மந்திரம் .
அகமலர்ச்சி மனமகிழ்ச்சி , இன்பம் .
அகமாட்சி இல்லறத்திற்குரிய நற்பண்புகள் .
அகமார்க்கம் முக்குணம் பற்றிவரும் மெய்த் தொழிலாற் செய்யும் கூத்து ; மந்திரமுறை ; அருமையிற் பாடுதல் ; உள்வழி .
அகமிசைக்கிவர்தல் கோட்டைமதில்களின்மேல் ஏறிநின்று போர்புரிதல் .
அகமுகமாதல் உள்நோக்குதல் .
அகமுடையாள் வீட்டுக்குடையவள் ; மனைவி .
அகமுடையான் வீட்டுக்காரன் , கணவன் ; நிலமுடையவன் .
அகமுணல் தெளிதல் ; மனத்திற் கொள்ளல் .
அகர்க்கணனம் கலியுகாதி தொடங்கிக் குறித்த காலம்வரை கணித்தெடுத்த நாள்களின் எண்தொகை .
அகர்ணம் செவிடு ; பாம்பு .
அகர்த்தவியம் செய்யத்தகாதது .