அகழி முதல் - அங்கசன் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
அகுவைக்கட்டி அரையாப்பு .
அகுளுதி வேம்பு .
அகூடகந்தம் பெருங்காயம் .
அகூபாரம் ஆமை ; கடல் ; பாறையாலான மலை .
அகை கூறுபாடு ; வருத்தம் ; தளர்ச்சி ; தகை ; மலர் ; கிளை .
அகை (வி) வருத்து ; எரி ; தடு .
அகைத்தல் வருத்தல் ; முறித்தல் ; அறுத்தல் ; உயர்த்தல் ; அடித்தல் ஓட்டுதல் ; எழுதல் ; தழைத்தல் ; கிளைத்தல் .
அகைதல் எரிதல் ; ஒடிதல் ; வருந்துதல் ; தளிர்த்தல் ; மலர்தல் ; தாழ்தல் ; காலந்தாழ்த்தல் .
அகைப்பு அகைத்தல் ; எழுச்சி ; மதிப்பு ; இடை விட்டுச் செல்லுகை .
அகைப்புவண்ணம் இருபது வண்ணங்களுள் ஒன்று ; அறுத்தறுத்து ஒழுகும் நடையை உடையது ; விட்டுவிட்டுச் செல்லும் சந்தம் .
அகைமம் புல்லுருவி ; கருந்தாளிமரம் .
அகையாறு கிளையாறு .
அகைவாய்க்கால் கிளைவாய்க்கால் .
அகோ ஒரு வியப்புச் சொல் அழைப்பு , உடன்பாடு , புகழச்சி , இகழ்ச்சி , பொறாமை , துன்பம் , இரக்கம் , ஐயம் முதலிய பொருள்களுள் ஒன்றை உணர்த்தும் குறிப்புச்சொல் .
அகோசரம் அறியப்படாமை , புலன்களுக்குப்புலப்படாமை ; புலப்படாதது .
அகோடம் கமுகமரம் .
அகோரம் மிக்க கொடுமை ; வெப்பம் ; சிவன் ஐம்முகத்துள் ஒன்று ; ஞானம் .
அகோராத்திரம் இரவும் பகலும் , இராப்பகல் .
அகோரை இரண்டரை நாழிகைக் காலம் ; வெயில் மிகுந்த நாள் ; அஞ்சத்தக்கவன் .
அகோவனம் தரிசு .
அங்கக்கிரியை மெய் உறுப்புகளால் செய்யப்படும் நடிப்புத் தொழில் .
அங்ககணிதம் எண்கணக்கு .
அங்கசங்கம் பகட்டு ; புணர்ச்சி .
அங்கசம் குருதி ; மயிர் ; நோய் ; காமம் .
அங்கசன் மன்மதன் ; மகன் .
அகழி கோட்டையைச் சுற்றியுள்ள ஆழமான நீர்நிலை , மதில்சூழ் கிடங்கு ; ஓடை ; கயம் ; கேணி ; கிடங்கு ; வாயகன்ற பாண்டம் .
அகளங்கம் குற்றமின்மை ; தூய்மை .
அகளங்கன் மாசிலான் ; கடவுள் ; சோழன் .
அகளம் தாழி ; மிடா ; சாடி ; யாழின் பத்தர் ; நீர்ச்சால் ; களங்கமின்மை .
அகளி தாழி ; மிடா ; பாண்டம் .
அகற்சி அகலம் ; நீங்குதல் , பிரிவு ; துறவறம் .
அகற்பவிபூதி இயற்கையில் உண்டான திருநீறு .
அகற்பன் ஒப்பில்லாதவன் .
அகற்றம் அகலம் ; விரிவு .
அகற்றல் நீக்குதல் ; துரத்துதல் ; அகலப்பண்ணுதல் , விரிவாக்கல் .
அகற்றுதல் நீக்குதல் ; துரத்துதல் ; அகலப்பண்ணுதல் , விரிவாக்கல் .
அகறல் அகலல் ; கடத்தல் ; நீங்குதல் ; விரிதல் ; அகலம் .
அகன்மணி அகன்ற மணி ; உயர்ந்த முத்து ; தெய்வமணி .
அகன்றிசைப்பு யாப்பு முறையிலிருந்து மாறி ஒலிக்கும் குற்றம் .
அகன்றில் ஆணன்றில் , ஆண் கிரவுஞ்சம் .
அகன்னம் காதற்றது ; செவிடு .
அகனைந்திணை குறிஞ்சி , முல்லை , மருதம் , நெய்தல் , பாலை என்னும் ஐந்து திணை .
அகாடி குதிரையின் முன்னங்காற் கயிறு .
அகாத்தியம் பொல்லாங்கு , வஞ்சனை ; பாசாங்கு ; உண்ணத்தகாதது .
அகாதம் ஆழம் ; மிகுந்த பள்ளம் ; நீந்துபுனல் ; தொளை ; வஞ்சகம் .
அகாமவினை தன்னிச்சையின்றி நிகழும் செயல் ; தன்னறிவின்றிச் செய்யும் செயல் .
அகாரணம் காரணமின்மை ; தற்செயல் .
அகாரம் ’அ’ என்னும் எழுத்து ( காரம் சாரியை ) ; வீடு .
அகாரி கடவுள் ; இடி ; இந்திரன் .
அகாரியம் காரியமல்லாதது ; தகாத செய்கை .
அகாலம் காலமல்லாத காலம் , முறைமை அல்லாத காலம் , பருவமின்மை ; பஞ்சகாலம் .
அகாலமிருந்து அகால மரணம் ; இளமைச்சாவு ; அநியாய மரணம் .
அகி இரும்பு ; பாம்பு ; கதிரவன் ; பகைவன் ; இராகு ; வச்சிரப்படை ; தீ ; ஈயம் .
அகிஞ்சனன் வறியவன் .
அகிஞ்சை காண்க : அகிம்சை .
அகிதம் இதமின்மை ; நன்மையல்லாதது , தீமை ; இடையூறு .
அகிதலம் பாதாளம் ; நாகலோகம் .
அகிதன் பகைவன் .
அகிம்சை கொல்லாமை ; பிற உயிருக்குத் தீங்கு செய்யாமை , வருத்தாமை .
அகிருத்தியம் அக்கிரமம் , தவறான செய்கை .
அகில் ஒரு வாசனை மரம் ; ஒரு மணப்பொருள் ; புகைக்கப்படும் பொருள்களுள் ஒன்று .
அகிலம் உலகம் , பூமி ; எல்லாம் ; முழுமை .
அகிலாண்டகோடி எண்ணுக்கு அடங்காத கணக்கற்ற உலகங்கள் .
அகிலாண்டம் எல்லா உலகும் .
அகிலாண்டநாயகி உலகம் முழுதுடையாள் , பார்வதி .
அகிலாண்டவல்லி உலகம் முழுதுடையாள் , பார்வதி .
அகிற்கூட்டு சந்தனம் , கருப்பூரம் , காசுக்கட்டி , தேன் , ஏலம் சேர்ந்த கலவை ; கூந்தலின் ஈரம் போக்கி மணமூட்டுவது ; கூந்தலை உலர்த்தப் பயன்படுவது .
அகுசலவேதனை துன்ப உணர்ச்சி .
அகுட்டம் மிளகு .
அகுடம் கடுகுரோகிணிப்பூண்டு .
அகுணம் குணமின்மை ; குற்றம் ; அழகின்மை ; தீக்குணம் .
அகுணி தீயோன் ; உறுப்புக்குறையுடையோன் .
அகுதார் உரிமையாளி .
அகுதி காண்க : அகதி .
அகுரு அகில்மரம் ; வெட்டிவேர் ; எளிதானது ; குருவல்லாதவன் .