அங்கசாலை முதல் - அங்கிடுதுடுப்பன் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
அங்கவடி குதிரைமேல் சேணத்தோடு இடப்படும் காலூன்று படி , குதிரைமேல் ஏற உதவும் படி .
அங்கம் உறுப்பு ; உடம்பு ; எலும்பு ; கட்டில் ; பாவனை ; அடையாளம் ; வேதாங்கம் அரசாங்கம் ; நாடக உறுப்பு ; அறமே பொருளாக வரும் நாடகம் ; ஒரு நாடு ; ஒரு மொழி .
அங்கமணி மகளுக்குக் கொடுக்கும் சீர்ப்பொருள் , சீதனம் .
அங்கமாலை எலும்பு மாலை ; உடலுறுப்புகளை முறையாக எடுத்து விளக்கும் ஒரு நூல் ; அடிமுதல் முடி , முடிமுதல் அடியாகப் பாடப்படும் நூல்வகை .
அங்கயற்கண்ணம்மை அழகிய கயல்மீன் போன்ற கண்ணுடையாள் ; மதுரையில் கோயில் கொண்டுள்ள மீனாட்சியம்மை .
அங்கயற்கண்ணி அழகிய கயல்மீன் போன்ற கண்ணுடையாள் ; மதுரையில் கோயில் கொண்டுள்ள மீனாட்சியம்மை .
அங்கயோகம் எண்வகை யோகத்துள் ஒன்று .
அங்கர் அங்க நாட்டினர் .
அங்கர்கோமான் அங்கநாட்டுக்குத் தலைவன் ; கன்னன் .
அங்கரக்கன் மெய்காவலன் .
அங்கரக்கா மெய்ச்சட்டை ; நீண்ட சட்டை .
அங்கரட்சணி போர்க்கவசம் .
அங்கலாய்த்தல் கலங்குதல் ; புலம்புதல் ; துயருறுதல் ; இச்சித்தல் பொறாமைப்படுதல் .
அங்கலாய்ப்பு கலக்கம் ; புலப்பம் ; அருவருப்பு ; பேராசை .
அங்கலி விரல் ; முலை .
அங்கலிங்கம் வீரசைவர்கள் மார்பில் அணியும் லிங்கம் .
அங்கவத்திரம் மேலாடை .
அங்கவிட்சேபம் அபிநயம் ; சாடை , குறி .
அங்கவீனம் உறுப்புக்குறை .
அங்கன் மகன் .
அங்கனம் அங்ஙனம் .
அங்கனி கற்றாழை ; படரும் முட்செடி .
அங்கனை பெண் .
அங்காகமம் சமண வேதாகமம் மூன்றனுள் ஒன்று .
அங்காங்கிபாவம் உறுப்பு உறுப்பிகளின் தொடர்பு .
அங்காடி கடை ; கடைத்தெரு ; சந்தை .
அங்காடிக்கூலி கடை ; சந்தைகளிலிருந்து பெறும் வரி .
அங்காடிபாரித்தல் மனக்கோட்டை கட்டுதல் .
அங்காத்தல் வாயைத் திறத்தல் ; கொட்டாவி விடல் .
அங்காமினி காண்க : ஆகாசகாமினி .
அங்காரகம் கரி ; உடலிற் பூசும் மணப்பொருள் ; மேலே பூசும் வாசனைக் குழம்பு .
அங்காரகன் செவ்வாய் ; நெருப்பு ; செந்நீர் முத்து .
அங்காரம் நெருப்பு ; கரி ; மாத்துவர் நெற்றியில் இடும் கரிக்கோடு .
அங்காரவல்லி சிறுதேக்கு .
அங்காரன் செவ்வாய் .
அங்காரி வெண்காரம் .
அங்காரிகை கரும்பு ; நன்னாரி .
அங்காளம்மை காளி ; ஓர் ஊர்த்தேவதை .
அங்காளி காளி ; ஓர் ஊர்த்தேவதை .
அங்கி அக்கினிதேவன் ; நெருப்பு ; கார்த்திகை நாள் ; அத்த நாள் ; சட்டை ; அங்கத்தையுடையது .
அங்கிகரித்தல் சம்மதித்தல் , உடன்படுதல் , ஏற்றுக்கொள்ளுதல் .
அங்கீகரித்தல் சம்மதித்தல் , உடன்படுதல் , ஏற்றுக்கொள்ளுதல் .
அங்கிகாரம் சம்மதம் , ஏற்றுக்கொள்ளுகை , உடன்பாடு .
அங்கீகாரம் சம்மதம் , ஏற்றுக்கொள்ளுகை , உடன்பாடு .
அங்கிகை கச்சு ; இரவிக்கை .
அங்கிசகம் அன்னப் பறவை .
அங்கிசம் மரபு , வமிசம் ; கூறு , பங்கு ; தாயபாகம் ; தோட்பட்டை ; உபநிடதம் முப்பத்திரண்டனுள் ஒன்று .
அங்கிட்டு அவ்விடத்தில் .
அங்கிட்டோமம் காண்க : அக்கினிட்டோமம் .
அங்கிடுதத்தி நாடோடி ; நிலைகெட்டவன் .
அங்கிடுதுடுப்பன் நாடோடி ; நிலைகெட்டவன் .
அங்கசாலை குடிகள் செலுத்தும் வரிவகை .
அங்கசாலைக்காரன் ஊர்ப்பணிபுரிவோன் .
அங்கசேட்டை உடம்பின் இயக்கம் ; கை மெய் காட்டுதல் ; கோரணி ; குறும்பு .
அங்கண் அவ்விடம் ; அழகிய இடம் ; கண்ணோட்டம் .
அங்கணம் சேறு ; முற்றம் ; இருதூண் நடுவிடம் ; சாக்கடை ; மதகு ; நீர்த்தாரை .
அங்கணன் கடவுள் ; சிவன் ; திருமால் ; அருகன் .
அங்கணாளன் கண்ணோட்டமுடையவன் ; கடவுள் .
அங்கணி அழகிய கண்ணையுடையவள் ; பார்வதி ; கற்றாழை .
அங்கத்தவர் அவையின் உறுப்பினர் .
அங்கத்தி காண்க : அங்குத்தை .
அங்கதச்செய்யுள் வசைப்பாட்டு .
அங்கதப்பாட்டு வசைப்பாட்டு .
அங்கதம் பாம்பு ; தோளணி ; பழிச்சொல் ; யானையுணவு ; வசைப்பாட்டு ; மார்பு .
அங்கதர் வசைகூறுவோர் .
அங்கதி கொடை ; தீ ; நோய் ; பார்ப்பான் ; வாயு ; தீக்கடவுள் .
அங்கதேவதை பெருந்தெய்வத்திற்குப் பணி செய்யும் சிறுதெய்வம் .
அங்கதை தென்திசை யானைக்குப் பெண்யானை .
அங்கநியாசம் உடம்பின் ஒவ்வோர் உறுப்பையும் தொட்டு மந்திரம் ஓதுகை .
அங்கநூல் வேத விளக்கமான துணைநூல் , வேதாங்கம் ; அங்காகமம் .
அங்கப்பால் முலைப்பால் .
அங்கப்பிரதக்கிணம் உருண்டு கோயிலை வலம் வரல் ; உடலுறுப்புகள் தரையில் படியுமாறு புரண்டு கோயிலை வலம் வரல் .
அங்கப்பிரதட்சிணம் உருண்டு கோயிலை வலம் வரல் ; உடலுறுப்புகள் தரையில் படியுமாறு புரண்டு கோயிலை வலம் வரல் .
அங்கப்பிராயச்சித்தம் உடலின் தூய்மைக்காகச் செய்யும் ஒரு கழுவாய் .
அங்கபடி குதிரைமேல் சேணத்தோடு இடப்படும் காலூன்று படி , குதிரைமேல் ஏற உதவும் படி .