சொல்
|
அருஞ்சொற்பொருள் |
கொண்டைக்குச்சு | தலைமயிரோடு பின்னித் தொங்கவிடுவதாய் இரண்டு மூன்று குச்சுகளையுடைய அணி ; கொண்டையிற் செருகும் ஊசிவகை . |
கொண்டைக்குலாத்தி | காண்க : கொண்டலாத்தி . |
கொண்டைக்கோல் | தலையிற் கொண்டையுள்ள கொம்பு ; ஆழத்திற்கு அறிகுறியாக நீரிடையில் நடுங்கோல் ; மகிழ்ச்சிக் குறியாக உயர்த்தி அசைக்கும் ஆடை கட்டிய கோல் . |
கொண்டை குலைந்துபோதல் | அவமானப்படுதல் . |
கொண்டைத்திருகு | மகளிர் தலையிலணியும் செவ்வந்திப்பூ வடிவினதான திருகாணிவகை . |
கொண்டைப்பூ | மகளிர் தலையிலணியும் செவ்வந்திப்பூ வடிவினதான திருகாணிவகை . |
கொண்டைமாறு | மரத்தின் உச்சியிலிருந்து எடுக்கும் சுள்ளி ; கொண்டையுள்ள விளக்குமாறு . |
கொண்டைமுசு | பெரிய கருங்குரங்குவகை . |
கொண்டைமேற் காற்றடிக்க | உல்லாசமாய் . |
கொண்டையன் | உச்சிக்கொண்டையுள்ள பருந்துவகை . |
கொண்டையூசி | மகளிர் தலையில் செருகும் ஊசிவகை ; குண்டூசி . |
கொண்டோன் | கணவன் ; பொருள் முதலியன கொண்டோன் . |
கொண்மூ | வானம் ; மேகம் . |
கொணசில் | கோணல் , வளைவு . |
கொணர்தல் | கொண்டுவருதல் . |
கொணாதல் | கொண்டுவருதல் . |
கொத்தடிமை | குடும்பத்தோடு அடிமையாதல் . |
கொத்தம் | எல்லை ; கொத்துமல்லி . |
கொத்தமல்லி | ஒரு செடிவகை . |
கொத்தமுரி | ஒரு செடிவகை . |
கொத்தல் | பறவை முதலியன கொத்துகை . |
கொத்தலரி | ஓர் அலரிவகை . |
கொத்தவரை | செடிவகை , சீனியவரை . |
கொத்தவால் | நகரத்தின் கடைத்தெரு முதலியவற்றின் காவல் தலைவன் . |
கொத்தழிதல் | அடியோடழிதல் . |
கொத்தளத்தல் | கூலியாகத் தவசங் கொடுத்தல் . |
கொத்தளம் | கோட்டை மதிலுறுப்பு . |
கொத்தளி | புற்பாய் . |
கொத்தளிப்பாய் | புற்பாய் . |
கொத்தன் | கட்டட வேலைக்காரன் ; கொல்லத்துக்காரன் . |
கொத்தனார் | தலைமைக் கொத்தன் . |
கொத்தானை | கூட்டமாகச் செல்லும் சிறுமீன்வகை . |
கொத்தாள் | வயலில் கூலிக்கு வேலைசெய்யும் ஆள் ; அடிமை . |
கொத்தான் | காண்க :கொற்றான் |
கொத்தித்தழி | சரக்கொன்றை . |
கொத்திதின்னுதல் | மிகுதியாகத் துன்பப்படுத்துதல் . |
கொத்திப்பிடுங்குதல் | மிகுதியாகத் துன்பப்படுத்துதல் . |
கொத்து | கொத்துகை ; கொத்துவேலை ; கொத்தனது ஒருநாள் வேலை ; கொல்லத்துக்காரன் ; களைபறிக்க உதவும் சிறுமண்வெட்டி ; பூ முதலியவற்றின் கொத்து ; திரள் ; குடும்பம் ; ஆடையின் மடி ; தானியமாகக் கொடுக்குங்கூலி ; சோறு ; கைப்பிடியளவு ; நாழி . |
கொத்துக்கணக்கு | பரம்பரைக் கணக்குவேலை ; கொத்தன் சம்பளக் கணக்கு . |
கொத்துக்கரண்டி | கொத்துவேலைக்குரிய அரசிலைக் கரண்டி . |
கொத்துக்காடு | உழவின்றிக் கொத்திப் பயிரிடும் நிலம் . |
கொண்டாரணியம் | நுழைய முடியாத பெருங்காடு . |
கொண்டான் | மகளிர் விளையாட்டுவகை ; கணவன் . |
கொண்டான்கொடுத்தான் | பெண் கொடுத்தும் எடுத்தும் சம்பந்தஞ் செய்தோர் . |
கொண்டானடித்தல் | மகிழ்ச்சியால் கூத்தாடுதல் . |
கொண்டி | பிறர் பொருள் முதலியவற்றைக் கொள்ளுதல் ; உணவு ; கப்பம் ; சங்கிலி மாட்டும் இரும்பு ; கொள்ளை ; மிகுதி ; அடங்காதவன் ; பரத்தை ; கதவுக்குடுமி ; களவு ; ஏர்க்கொழு முதலியவற்றைக் கொள்ளுதல் ; மன வருத்தம் ; பகைமை ; புறங்கூறுகை . |
கொண்டிக்கதவு | குடுமிக்கதவு . |
கொண்டிசொல்லுதல் | பகைமையால் கொடுமை பேசுதல் . |
கொண்டித்தனம் | அடங்காத்தனம் . |
கொண்டித்தொட்டி | பட்டிமாட்டை அடைக்கும்தொழுவம் . |
கொண்டித்தொழு | பட்டிமாட்டை அடைக்கும்தொழுவம் . |
கொண்டிபேசுதல் | குறைகூறுதல் ; பகைமையால் கொடுமை பேசுதல் ; கோட்சொல்லுதல் ; குற்றம் சுமத்திப் பேசுதல் . |
கொண்டிமகளிர் | சிறைபிடிக்கப்பட்ட பெண்கள் ; பரத்தையர் . |
கொண்டிமாடு | பட்டிமாடு . |
கொண்டியம் | புறங்கூறுதல் ; குறளை . |
கொண்டியாரம் | நிந்தை ; செருக்கு ; பிறர்செயலில் தலையிடுகை ; சிறப்பு . |
கொண்டியோட்டி | தொழுவத்திற்குப் பட்டிமாட்டை ஓட்டிச் செல்வோன் . |
கொண்டின்னி | தும்பைச்செடி . |
கொண்டு | முதல் ; குறித்து ; மூன்றாம் வேற்றுமைச் சொல்லுருபு ; ஓர் அசைநிலை . |
கொண்டுகண்மாறுதல் | நட்புக்கொண்டு புறக்கணித்தல் . |
கொண்டுகூட்டு | பொருள்கோள் வகையுள் ஒன்று , செய்யுளடிகளில் உள்ள சொற்களை ஏற்ற இடங்களில் சேர்த்துப் பொருள் கொள்ளும் முறை . |
கொண்டுகூற்று | அயலார் நேரிற் சொல்வதாகக் கூறும் மொழி . |
கொண்டுகொடுத்தல் | பெண்னைக் கொண்டுங் கொடுத்துஞ் சம்பந்தஞ்செய்தல் . |
கொண்டுசெல்லுதல் | எடுத்துப்போதல் ; நிருவகித்தல் . |
கொண்டுநடத்துதல் | செயலை வருந்தியும் முடிவுவரை நடத்துதல் ; கொடுக்கல் வாங்கல் செய்தல் . |
கொண்டுநிலை | குரவைக்கூத்தில் தலைவனது வரைவு வேண்டிப் பாடும் பாட்டு . |
கொண்டுநிலைக் கூற்று | இறந்துபடாமல் தலைமகனைத் தாங்கிக் கூறுந் தோழியின் சொல் . |
கொண்டுபோதல் | எடுத்துக்கொண்டு செல்லுதல் ; அழைத்துச் செல்லுதல் ; கவர்ந்துசெல்லுதல் . |
கொண்டுவிற்றல் | அப்போதைக்கப்போது வாணிகத்துக்காகப் பண்டங்களை வாங்கி விற்றல் . |
கொண்டேசன் | சுக்கு . |
கொண்டை | மகளிர் கூந்தலைக் திரளாகச் சேர்த்துக் கட்டும் முடிவகை ; சொருக்கு ; குழந்தைகளுக்கு உச்சிக்கொண்டை கட்ட உதவும் நார்வளையம் ; பறவைச் சூட்டு ; ஆணி முதலியவற்றின் தலை ; இலந்தைப் பழம் . |
கொண்டைக்கரிச்சான் | உச்சிச்சூட்டுள்ள கரிக்குருவி . |
கொண்டைக்காரன் | தலைமயிரைத் திரளாக முடித்து கட்டுபவன் ; மேன்மையுடையவன் ; செருக்கன் . |
கொண்டைக்கிரி | முல்லைநிலப் பண்வகை . |
கொண்டைக்கிளாறு | காண்க : கொண்டலாத்தி . |
![]() |
![]() |
![]() |