கொத்துக்காரன் முதல் - கொம்புகாவி வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
கொப்பரை கருப்பஞ்சாற்றைக் காய்ச்சும் பெரிய பாத்திரம் ; பிடியோடு கூடிய பெரும்பாத்திரம் ; உலர்ந்த தேங்காய்ப்பருப்பு .
கொப்பளம் காண்க : கொப்புளம் .
கொப்பளித்தல் காண்க : கொப்புளித்தல் .
கொப்பாட்டன் பாட்டனுக்குப் பாட்டன் .
கொப்பி கும்மியாட்டம் .
கொப்பிகொட்டுதல் கும்மியடித்தல் .
கொப்பு மரக்கிளை , கொம்பு ; மாதர் காதணிவகை ; மயிர்முடி .
கொப்புள் காண்க : கொப்பூழ் .
கொப்புளம் குமிழி ; கொப்புளம்போன்ற பரு .
கொப்புளித்தல் கொப்புளமாதல் , நீர் முதலியன குமிழிட்டு வெளிவருதல் ; வாய் குமிழ்த்தல் ; நீரை வாயிலிட்டு உமிழ்தல் ; நீர் முதலியவற்றை வெளிவிடுதல் .
கொப்புளிப்பான் சின்னம்மை நோய்வகை .
கொப்பூழ் உந்தி ; கொப்புளம்போன்ற பரு .
கொப்பூழ்க்கொடி பிறந்த குழந்தையின் கொப்பூழிலிருக்கும் கொடி .
கொப்பூழறுத்தல் பிறந்த குழந்தையின் நஞ்சுக் கொடியை அறுத்தல் .
கொப்பெனல் விரைவுக்குறிப்பு .
கொம்படித்தல் கொம்பால் முட்டிப் பொருதல் ; கடா முதலியன போர் செய்தல் ; அதிகாரம் செலுத்துதல் .
கொம்பர் மரக்கொம்பு .
கொம்பரக்கு அரக்குவகை .
கொம்பன் கொம்புள்ள விலங்கு ; ஆற்றலுடையவன் ; அம்மை அல்லது பேதிவகை ; மீன்வகை .
கொம்பனார் கொம்புபோல் வளையும் தன்மையுள்ள பெண்டிர் .
கொம்பாலயம் தெய்வந் தங்குவதற்காகக் கொண்டு வழிபடப்பெறும் சில மரக்கிளைகள் .
கொம்பி சனி .
கொம்பிலேயேறுதல் கொம்பின்மேல் ஏறுதல் ; வீண் செருக்குக் கொள்ளுதல் .
கொம்பினர் காண்க : கொம்பனார் .
கொம்பு மரக்கொம்பு ; நாற்றுமுளை ; கோல் ; பல்லக்கு முதலியற்றின் கொம்பு ; விலங்கின் கொம்பு ; யானை முதலியவற்றின் தந்தம் ; ஊதுகொம்பு ; 'கொ' முதலிய எழுத்துகளின் முற்பகுதியாய் அமைந்திருக்கும் அடையாளக்குறி .
கொம்புக்காரன் கொம்பு வாத்தியம் ஊதுபவன் ; வாந்திபேதிக்குரிய தேவதை .
கொம்புகாவி பல்லக்குத் தூக்குவோன் .
கொத்துமாலை பல சரங்கள் சேர்த்து ஒன்றாகக் கட்டிய பூமாலை .
கொத்துமானம் நகாசுவேலை .
கொத்துவேலை கொத்திச்செய்யும் சித்திர வேலை ; கட்டட வேலை .
கொத்தை சொத்தை ; ஈனம் ; நூற்சிம்பு ; அரைகுறை ; குருடன் ; அறியாமை ; பாவி .
கொதி நீர் முதலியவற்றின் கொதிப்பு ; வெப்பம் ; உடம்பிற் காணும் சூடு ; காய்ச்சல் ; கொதிக் கழிச்சல் ; கோபம் ; கடுமை ; வருத்தம் ; செருக்கு ; ஆசை .
கொதிகஞ்சி உலைநீரில் கொதிக்கும் அரிசியினின்று வடிக்குங் கஞ்சி .
கொதிகருப்பநீர் சுடவைத்த இனிப்புச் சாராயம் .
கொதிகொதித்தல் உலைப்பெய்த அரிசி முதலியவற்றிலிருந்து கொதியெழும்புதல் .
கொதித்தல் நீர் முதலியன கொதித்தல் ; சூடுடையதாதல் ; சினத்தல் ; வருத்தமுறுதல் ; வெப்பமாதல் ; கடுக்கல் ; ஆசைமிகக் கொள்ளுதல் ; சூட்டு மிகுதியால் வயிறு கழிதல் .
கொதிநீர் சூடுள்ள நீர் ; வெந்நீர் ; கொதிக்கும் உலைநீர் .
கொதிப்பு பொங்குகை ; வெப்பம் ; காய்ச்சல் ; கோபம் ; வயிற்றெரிச்சல் ; பரபரப்பு .
கொதிமந்தம் வெப்பமந்தம் .
கொதியல் கொதிப்பு ; நெகிழ்ந்த ஆபரண உறுப்பை இறுகச் செய்யும் வேலை .
கொதியன் உணவில் ஆசைமிக்கவன் .
கொதியெண்ணெய் கொதிக்க வைத்தெடுத்த மருந்தெண்ணெய்வகை .
கொதுகு கொசு .
கொதுகொதுத்தல் ஒலிக்குறிப்பு ; குளிரால் நடுங்குகை ; நோவெடுத்தற் குறிப்பு ; இலேசாய் உடம்பு காய்தற் குறிப்பு ; புண்கட்டி வீங்கிப் பழுத்தற் குறிப்பு .
கொதுகொதுப்பு ஒலிக்குறிப்பு ; குளிரால் நடுங்குகை ; நோவெடுத்தற் குறிப்பு ; இலேசாய் உடம்பு காய்தற் குறிப்பு ; புண்கட்டி வீங்கிப் பழுத்தற் குறிப்பு .
கொதுகொதெனல் ஒலிக்குறிப்பு ; குளிரால் நடுங்குகை ; நோவெடுத்தற் குறிப்பு ; இலேசாய் உடம்பு காய்தற் குறிப்பு ; புண்கட்டி வீங்கிப் பழுத்தற் குறிப்பு .
கொதுவை அடைமானம் .
கொந்தகன் படைத்தலைவன் .
கொந்தம் மாதர் மயிர்ச்சுருள் .
கொந்தரிவாள் முட்செடிகளை அழித்து நீக்க உதவும் அறுவாள்வகை .
கொந்தல் கொத்துகை ; பறவை முதலியவற்றால் கொத்துப்பட்ட கனி ; தணியாச் சினம் ; கொடுங்குளிர் ; போலி நடத்தை .
கொந்தழல் தீத்திரள் ; முறுகிய தீ .
கொந்தளம் மாதர் தலைமயிர் ; மாதர் தலை மயிர்ச்சுருள் ; மாதர் குழற்கொத்து ; குழப்பம் ; கூத்துவகை ; காண்டாமிருகம் ; விலங்கின் இளமை ; ஏந்துமிக்க இடம் ; சாளுக்கியர் ஆண்ட நாடு .
கொந்தளித்தல் பொங்கியெழுதல் .
கொந்தளை கடற்பக்கத்து மரவகை .
கொந்தாலி காண்க : குந்தாலி(ளி) .
கொந்தாழை ஒரு கடற்றாழைவகை .
கொந்தாளம் நஞ்சு போக்கும் மருந்துவகை .
கொந்தாளித்தல் பொங்கியெழுதல் .
கொந்தி வரிக்கூத்துவகை .
கொந்து ஒற்றைக்காலால் குதித்தாடும் விளையாட்டுவகை ; கோபம் ; கொத்து ; பூக்கொத்து ; திரள் ; கொத்துமாலை ; நாட்டுப்பகுதி .
கொந்துதல் பறவைகள் அலகினாற் கொத்துதல் ; மூர்க்கங்கொள்ளுதல் ; குத்துதல் ; அச்சுறுத்தல் ; ஒற்றைக்காலால் குதித்தல் ; எரிதல் ; கோபம் மூளுதல் .
கொப்பம் யானை பிடிக்க வெட்டிய பெருங்குழி ; ஓர் ஊர் ; ஒரு நாடு .
கொப்பரம் முழங்கை ; மற்போரில் ஒருவகை .
கொப்பரி நீர் வற்றிய தேங்காய்
கொப்பரை நீர் வற்றிய தேங்காய்
கொத்துப்பசளை கொடிப் பசளைக்கீரை .
கொத்துக்காரன் கொத்துவேலை செய்வோன் ; வேலையாள்களின் தலைவன் .
கொத்துக்காரி மரபுவழியுரிமையுடைய கோயில் தேவடியாள் .
கொத்துக்குறகு நண்டு .
கொத்துக்கூலி வேளாண்மை வேலையின் பொருட்டுக் கொடுக்குங் கூலி ; கொத்தருக்குக் கொடுக்கும் கூலி .
கொத்துங்குறையுமாய் அரைகுறையாய் .
கொத்துச்சரப்பணி மகளிர் கழுத்தணிவகை .
கொத்துச்சரப்பளி மகளிர் கழுத்தணிவகை .
கொத்துதல் இரை கொத்தியெடுத்தல் ; மண்வெட்டுதல் ; பூமியைத் தோண்டுதல் ; குத்திக் கடித்தல் ; வெட்டுதல் ; தறித்தல் ; எழுத்து முதலியன செதுக்குதல் .