கோபிநாமம் முதல் - கோரசம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
கோரகம் இளம் பூவரும்பு ; வட்டில் ; தக்கோலம் .
கோரகை பௌத்தத் துறவியரின் பிச்சைப் பாத்திரம் ; அகப்பை ; அரும்பு ; கஞ்சா .
கோரங்கம் நெல்லி .
கோரங்கி சிற்றேலம் .
கோரசம் சிவல் என்னும் பறவை .
கோமளம் அழகு ; இளமை ; மென்மை ; மகிழ்ச்சி ; கறவைப் பசு ; மாணிக்கவகை .
கோமாட்டி தலைவி ; அரசி .
கோமாதாக்கள் நத்தை , பத்திரை , சுரபி , சுசீலை , சுமனை என்னும் ஐவகைப் பசுக்கள் .
கோமாயு நரி .
கோமாரி மாடுகளுக்கு வாயிலும் கால்களிலும் வரும் நோய் .
கோமாள் காண்க : கோமகள் .
கோமாளம் குதித்து விளையாடுகை ; குதித்தாடும் ஓர் அநாகரிகக் கூத்து .
கோமாளி தன் சொல்லாலும் செயலாலும் மற்றவரைச் சிரிக்கச்செய்பவன் , விகடன் ; காண்க : கோணங்கி .
கோமாளிக்கூத்து நகைப்பு விளைக்குஞ் செயல் .
கோமான் அரசன் ; பெருமையிற் சிறந்தோன் ; மூத்தோன் ; குரு ; பன்றி .
கோமி கோமதி ஆறு .
கோமியம் காண்க : கோமயம் ; கோமேதகம் .
கோமுகம் பசுவின் முகம்போன்ற இருக்கை ; பசு முதலியவற்றின் முகவடிவாகச் செய்யப் பட்ட நீர்விழும் வாய் .
கோமுகாசனம் பசுவின் முகம்போன்ற இருக்கை ; கணுக்கால்களை இடுப்புச் சந்தில் சேர்க்கும் ஆசனவகை .
கோமுகி பசு முதலியவற்றின் முகவடிவாகச் செய்யப்பட்ட நீர்விழும் தூம்பு .
கோமுகை காண்க : கோமுகி .
கோமுற்றவர் அரசர் .
கோமுறை அரசிறை ; அரசனது நெறி தவறாத ஆட்சி .
கோமுனி தலைமை முனிவன் ; அரசமுனி .
கோமூத்திரம் பசுவின் சிறுநீர் .
கோமூத்திரிகை ஒருவகைச் சித்திரகவி ; புல்வகை .
கோமேதகம் ஒன்பதுவகை மணியுள் ஒன்று .
கோமேதம் காண்க : கோமேதகம் ; ஆவின் கொழுப்பை அவியாகக் கொடுத்துப் புரியும் ஒரு வேள்வி .
கோய் கள் முகக்கும் ஏனம் ; பரணிச் செப்பு ; பரணிநாள் ; குகை .
கோயக்கண் மாறுகண் .
கோயில் அரண்மனை ; ஆலயம் ; கடவுளை வழிபடும் இடம் ; சிதம்பரம் ; திருவரங்கம் ; வீரசைவர் அணியும் இலிங்கச் செப்பு ; கோயிற் பற்று ; நாற்சீர்த் தூக்கு .
கோயில்கொள்ளுதல் வாழுமிடமாகக் கொள்ளுதல் .
கோயில்மாடு கோயிலுக்கு விடப்பட்ட மாடு ; பெருமாள்மாடு ; அடங்காத் தடியன் .
கோயில்வாரியம் கோயில் விசாரணைச் சபை ; கோயில்களைப் பராமரிக்கும் சபை .
கோயிலார் கோயில் வேலைக்காரர் .
கோயிலாழ்வார் கருவறை ; ஆராதனைப் பெட்டி .
கோயிலாள் பட்டத்தரசி .
கோயிற்கட்டணம் அந்தப்புரம் ; கோயிலுள் செல்லுதற்குத் தரும் பணம் .
கோயிற்கட்டி உண்டைக்கட்டி .
கோயிற்காலம் கோயில்களில் அவ்வக் காலத்துச்செய்யப்படும் பூசை .
கோயிற்காளை காண்க : கோயில்மாடு .
கோயிற்கிராமம் கோயிலுக்குச் சொந்தமான ஊர் .
கோயிற்கூழைத்தனம் அரசன் அவையிலுள்ளோர் காட்டும் போலி வணக்கம் .
கோயிற்சாந்து அரசன் அணிதற்குரிய கலவைச்சந்தனம் .
கோயிற்சுற்று கோயிலை அடுத்துள்ள இடம் .
கோயிற்சேரி கோயிலுக்குச் சொந்தமான ஊர்ப்பகுதி .
கோயிற்பற்று கோயிலுக்குரிய நிலம் முதலியவை ; கிறித்தவக் கோயிலின் அதிகாரத்திற்குட்பட்ட ஊர்ப்பகுதி .
கோயிற்புறம் கோயிலுக்கு அறக்கட்டளையாக விடப்பட்ட நிலம் .
கோயிற்பெருச்சாளி கோயிலில் வாழும் பெருச்சாளி ; கோயிற்சொத்தை அபகரிப்போன் .
கோயின்மேரை விளைச்சலில் கோயிலுக்குக் கொடுக்கும் ஒரு பகுதி ; கோயிற்குறுணி .
கோயின்மை பெருமை ; செருக்கு .
கோர்க்கலம் மட்கலம் .
கோரக்கர்மூலி கஞ்சா ; கோரக்கநாதர் பயன்படுத்திய மூலிகை .
கோபிநாமம் திருமால் அடியார்கள் கோபி சந்தனத்தால் அணியும் நெற்றிக்குறி .
கோபினை கோபம் .
கோபீகன் அதிக கோபமுள்ளவன் .
கோபுரத்தும்பை அடுக்கத்தும்பை .
கோபுரந்தாங்கி கோபுரத்தைத் தாங்குவது போலச் செய்திருக்கும் பதுமை ; காரிய நிருவாகியாகிய நடிப்போன் .
கோபுரம் நகரம் அல்லது கோயிலின் பெரு வாயில் மேலமைப்பு ; வாயில் .
கோபுரவாசல் கோபுரத்தோடுங் கூடிய வாயில் ; கோபுரத்தின் கீழ்நிலை .
கோபுரவாயில் கோபுரத்தோடுங் கூடிய வாயில் ; கோபுரத்தின் கீழ்நிலை .
கோம்பல் முன்கோபம் ; தணியாக் கோபம் .
கோம்பறை ஒன்றுமற்றது , பயனற்றது .
கோம்பி பச்சோந்தி ; ஓணான் ; ஓந்திப்பொது .
கோம்பு சினக்குறிப்பு .
கோம்புதல் தேங்காய் முதலியவற்றின் மேல் ஓடு ; அறிவிலி ; ஓர் ஊர் .
கோமகள் அரசி ; தலைவி .
கோமகன் இளவரசன் , அரசகுமாரன் ; அரசன் .
கோமடந்தை இராசலக்குமி , திருமகள் , அரசி .
கோமணம் காண்க : கோவணம் .
கோமணாண்டி கோவணத்துடன் திரியும் பரதேசி .
கோமணிக்குன்றம் வெண்கலமலை .
கோமதி ஓர் ஆறு .
கோமயம் பசுவின் சாணம் ; கோமூத்திரம் .
கோமரம் தெய்வ ஆவேசம் ; சதுரக்கள்ளி .