சொல்
|
அருஞ்சொற்பொருள் |
கோலப்பொடி | கோலமிடுவதற்குதவும் அரிசிமா அல்லது ஒருவகை வெள்ளைக் கற்பொடி . |
கோலம் | அழகு ; நிறம் ; உருவம் ; தன்மை ; வேடம் ; ஆபரணம் ; அலங்காரம் ; மா , கற்பொடி முதலியவற்றாலிடுங் கோலம் ; விளையாட்டு ; பெருந்துன்பநிலை ; முயற்சி ; சிறு நீரோட்டம் ; பன்றி ; முள்ளம்பன்றி ; இலந்தைமரம் ; தெப்பம் ; குரங்கு ; பாக்கு ; பீர்க்கங்கொடி ; கருக்கொண்ட மகளிர்க்குச் செய்யும் வளைகாப்புச் சடங்கு ; தக்கோலம் . |
கோலம்போடுதல் | தரை முதலியவற்றில் மா முதலியவற்றால் அலங்கார வரியிடுதல் . |
கோலம்வருதல் | ஊர்வலம் வருதல் . |
கோலமா | காண்க : கோலப்பொடி . |
கோலமாறுதல் | முன்கொண்ட தோற்றம் மாறுதல் ; மாற்றுருக் கொள்ளுதல் . |
கோலமிடுதல் | காண்க : கோலம்போடுதல் . |
கோலரம் | முளை . |
கோலலவணம் | துருசு . |
கோலவேர் | நிலப்பனை . |
கோலறை | கூலியாள் வேலை செய்வதற்காக அளவுகோலால் அளந்து கொடுக்கப்படும் நிலம் . |
கோலறையிடுதல் | வேலை செய்யும் இடங்களைக் கூலியாள்களுக்கு வகுத்துக் கொடுத்தல் . |
கோலா | ஒரு மீன்வகை ; திப்பிலி ; ஒரு குடிநீர் வகை . |
கோலாகலம் | பேரொலி , கூக்குரல் ; பகட்டு . |
கோலாகலம்பண்ணுதல் | ஒழுங்கீனமாய் நடத்தல் ; பகட்டுச்செய்தல் . |
கோலாங்கூலம் | முசு . |
கோலாச்சி | ஒரு மீன்வகை . |
கோலாஞ்சி | தற்பெருமை , பகட்டு . |
கோலாட்டம் | சிறார் கோல்களைத் தட்டி விளையாடும் ஒரு விளையாட்டுவகை ; ஐப்பசி , கார்த்திகை மாதங்கள் ஒன்றில் பெண்கள் கொண்டாடும் விழா . |
கோலாடி | அரசாணை செல்லும் இடம் . |
கோலாடு | ஆட்டுவகை . |
கோலாரிக்கம் | போர்க்கு அறைகூவல் ; இருவரிடம் சண்டை . |
கோலாலம் | காண்க : கோலாகலம் . |
கோலாள் | தேரோட்டி . |
கோலி | மயிர் ; இலந்தைமரம் ; திப்பிலி ; சிறு குண்டு போன்ற விளையாட்டுக்கருவி ; சிற்றழிஞ்சல் ; புன்குவகை . |
கோலிக்கற்றை | சாமரம் . |
கோலிக்கொள்ளுதல் | சேர்த்துக்கொள்ளுதல் . |
கோலிகக்கருவி | நெசவுக்கருவி . |
கோலிகன் | நெசவுத்தொழில் செய்வோன் ; கோலிகரால் நெய்யப்பட்ட ஆடை . |
கோலியள்ளுதல் | வாரியெடுத்தல் . |
கோரண்டம் | பெருங்குறிஞ்சி ; மருதோன்றி மரம் ; செம்புள்ளி . |
கோரணி | கேலிக்கூத்து ; காக்காய்வலிப்பு , ஒரு நோய் ; முணுமுணுப்பு . |
கோரதந்தம் | காண்க : கோரப்பல் . |
கோரதம் | எருதினால் இழுக்கப்படும் தேர் . |
கோரதரம் | ஒரு நரகம் . |
கோரப்பல் | வக்கிரதந்தம் , விகாரமான பல் ; பாம்பின் நச்சுப்பல் . |
கோரம் | கொடுமை ; அச்சந்தருவது ; வேறுபட்டது ; வெம்மை ; நரகவகை ; விரைவு ; சோழன் குதிரை ; குதிரை ; அகோரம் என்னும் மந்திரம் ; கோளகநஞ்சு ; பூவரும்பு ; வட்டில் . |
கோரம்பர் | கழைக்கூத்தர் . |
கோரம்பலம் | கேளிக்கை ; சூழ்ச்சி ; வாய்ச்சண்டை . |
கோரம்பு | தீம்பு . |
கோரரூபம் | அச்சுறுத்தும் வடிவம் ; நரகவிசேடம் . |
கோரவாரம் | சந்தனமரம் . |
கோரவாரி | பெருங்காற்று , புயல் . |
கோரி | பார்வதி ; முகமதியர் பிணக்குழி மீதுள்ள ஒரு கட்டடம் . |
கோரிக்கை | வேண்டுகோள் ; விருப்பம் . |
கோரிகை | அகப்பை ; மரக்குதிரைமேல் வைக்கும் ஓலை நெற்கூடை . |
கோரித்தல் | கடுமையாதல் . |
கோரிதம் | துகள் |
கோரியை | அகப்பை . |
கோருதல் | வேண்டிக்கொள்ளுதல் ; விரும்புதல் . |
கோரை | ஒரு புல்வகை . |
கோரைப்பல் | விகாரமான பல் ; நீண்ட பெரிய பல் ; பல் வரிசையின் முன்னுள்ள கூர்மையான பல் . |
கோரைப்பாய் | கோரைப்புல்லால் பின்னப்பட்ட பாய் . |
கோரையுள்ளான் | உள்ளான் பறவைவகை . |
கோரோசனம் | பசுவின் வயிற்றினின்று எடுகக்ப்பெறும் மஞ்சள் நிறமுள்ள மணப்பண்டம் . |
கோரோசனை | பசுவின் வயிற்றினின்று எடுகக்ப்பெறும் மஞ்சள் நிறமுள்ள மணப்பண்டம் . |
கோல் | கம்பு ; மரக்கொம்பு ; ஊன்றுகோல் ; செங்கோல் ; அளவுகோல் ; எழுதுகோல் ; ஓவியந்தீட்டுங் கோல் ; முத்திரைக்கோல் ; தீக்கடைகோல் ; பிரம்பு ; குதிரைச்சம்மட்டி ; கொழு ; அம்பு ; ஈட்டி ; குடை முதலியவற்றின் காம்பு ; யாழ்நரம்பு ; துலாக்கோல் ; துலாராசி ; அரசாட்சி ; ஐப்பசி மாதம் ; அணியின் சித்திரவேலை ; தூண்டில் ; இலந்தைமரம் ; தெப்பம் ; திரட்சி . |
கோல்கொடுத்தல் | குருடருக்குப் பற்றுக்கோடு கொடுத்தல் ; கோலால் குருடனை நடத்திவருதல் . |
கோல்கொள்ளுதல் | தேர் முதலியன செலுத்துதல் . |
கோல்மட்டம் | கோல் அளவு . |
கோல்மரம் | வண்டியின் ஏர்க்கால்மரம் . |
கோல்வலித்தல் | தண்டால் ஓடந்தள்ளுதல் . |
கோல்வள்ளம் | விளிம்புள்ள கிண்ணம் ; பிரம்பு கட்டின வட்டில் . |
கோல்வளை | ஒரு வளையல்வகை . |
கோல்விழுக்காடு | தற்செயல் . |
கோலக்கல் | கோலப்பொடியாக இடித்தற்குரிய கல் . |
கோலக்காரன் | கேலிக்காரன் . |
கோலகம் | திப்பிலி . |
கோலங்காட்டுதல் | மணமக்களை மணப்பந்தலுக்கு அழைத்துக்கொண்டு வருதல் ; கோபித்துச் செல்லுதல் . |
கோலங்காணுதல் | அலங்கரித்தல் ; துன்பத்திற்கு உள்ளாதல் . |
கோலங்கொள்ளுதல் | சமயத்திற்கேற்ற வேடம் பூணுதல் ; பொய்த்தோற்றங் காட்டுதல் ; மந்தாரமாயிருத்தல் . |
கோலச்சங்கம் | முட்சங்குச்செடி . |
கோலச்சங்கு | முட்சங்குச்செடி . |
கோலச்சாரி | வேடமகள் கொற்றவை உருக்கொண்டு ஆடும் கூத்து . |
கோலஞ்செய்வாள் | தலைவிக்கு ஒப்பனை செய்பவள் . |
![]() |
![]() |
![]() |